Tuesday, November 03, 2015

வாசகனும் நூலும்

       ஒரு வாசகன் என்ற முறையில் ஒரு நூலாசிரியரைத் தெரிந்து கொள்வதும், அதுவரை கேள்விப்பட்டிராத ஒரு நூலைக் கண்டடைவதும் அதைப் படித்துப் பரவசம் அடைவதும் ஒரு வாசகனுக்குக் கிடைக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியாகும்.      ’Savaging the Civilized, Verrier elvin and his tribals’ என்ற நூலின் பிரதியை 2009ஆம் ஆண்டு சென்னையில் ஆக்ஸ்போர்ட் புத்தக சாலையில் ஒருமுறை பார்த்துவிட்டு, அந்த நேரத்தில் எனக்குப் பிடித்திருந்த ’ரிச்சர்ட் டாகின்ஸ்’ எழுதிய ‘selfish Gene’ என்ற நூலையும் இன்னும் சில நூல்களையும் வாங்கினேன். ஆனால் அதற்கு முன்னரே நூலாசிரியர் ‘ராமச்சந்திர குஹா  ஹிந்து நாளிதழில் எழுதிய, சில கட்டுரைகளைப் படித்திருந்தேன்.  அவை பெரும்பாலும் எனக்குப் பிடிக்காத கிரிக்கெட் பற்றி சமூகவியல் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள். எனக்குப் பிடித்தும் இருந்தன. ‘’How much should a person consume ?’ என்ற நூலை நூலகத்தில் பார்த்த போது, அது என்னைக் கவர்ந்த்து. அதைப் படித்தபின்  ‘India After Gandhi, Patriots and Partisans, Makers of Modoern India, Gandhi before India, போன்ற நூல்களைத் தொடர்ந்து படித்தேன்.  பின்னர் எதிர்பாராமல் அவரது பெயரில் இயங்கும் இணையதளம் இருப்பதை அறிந்து, அதையும் படிக்கத் தொடங்கினேன். இப்போது யூ டியூபில் அவரது பதிவு செய்த உரைகளையும் கேட்கிறேன்.

 இந்தப் பின்னணியில், நண்பர் சுரேஷ் சுப்பிரமணியம் இந்த நூலை மொழிபெயர்க்கிறாயா? என்று கேட்ட போது விருப்பம் இருந்தாலும் தயக்கம் இருந்தது.  அவரது ஊக்கம் இன்றி இது நிறைவேறி இராது.  கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தேன்.  ஆனால், மொழிபெயர்ப்புச் செய்யும் அளவுக்குத் தகுதியும் அறிவும், புரிதலும் எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் முதல் இரண்டு வரைவுகளைத் திருத்தி முடிக்கும்வரை இருந்தது.  எடுத்துக் கொண்ட நூலின் ஆசிரியர் மேலுள்ள மதிப்பும், அவரது நூலை மொழிபெயர்த்துக் கெடுத்துவிடக் கூடாதே என்பதும் ஒரு காரணம்.

நண்பர் நெல்லை சினிவாசனின் அறிவுரைகள் பயனுள்ளவை.  அவற்றைக் கருத்தில் கொண்டேன்.  ஆனால் அவருடன் தொடர்ந்து பேசப் பயந்தேன். காரணம் பாதியில் எனது ஆர்வம் குறைந்துவிடும் என்ற அச்சம். தன்னம்பிக்கை மீதான அச்சம். போதும் போதும் நீ கிழித்தது எனது சோம்பேறித்தனத்துக்கும் ஒரு சாக்குக் கிடைத்துவிடும் என்ற அச்சம்.  

அதையெல்லாம் மீறி இந்த நூலை மொழிபெயர்த்தேன் என்றால் அதற்குக் காரணம், இருவர், சுரேஷ் சுப்பிரமணியன், தூத்துக்குடி செல்வக்குமார்.  தூத்துக்குடி பேராசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள் மொழிபெயர்ப்பை வாசிக்க ஒத்துக் கொண்டதே என் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், நாட்டார் பண்பாட்டில்  ஆய்வாளர் என்ற ஆர்வத்தின் காரணமாகவும் இருக்கலாம்.

என் மனைவிக்கு நூலின் உள்ளடக்கம் ஆர்வம் தருவதாக இல்லை.  என் மகனுக்கும், மகளுக்கும் இவ்வளவு படிக்கும் அளவு தமிழில் வாசிப்புப் பழக்கம் இல்லை.   அலுவலகத்திலும், டில்லிச் சமூக சூழ்நிலையிலும் இது பற்றி விவாதிக்கும் நிலைமை இல்லை.  அதனால், தனிமையில் பல தயக்கம், மயக்கம், சந்தேகம் என்று உழல வேண்டியிருந்தது.  மனைவியும் மக்களும் ஏதோ இவன் உருப்படியாகச் செய்கிறான் என்ற மனநிலையில் முயற்சிக்கு ஆதரவளித்தனர்.

குறைந்தது ஏழுமுறை மொழிபெயர்ப்பை மீண்டும் மீண்டும் திருத்தி இருக்கிறேன். அதற்கு அவ்வளவு பொறுமை இருந்தது அது எனக்கே வியப்புத்தரும். நான்கு கணினிகளில் பல முறை எழுத்துரு மாற்றங்களில் சிக்கிக் கொண்டு பல மணி நேரங்களை வீணாகச் செலவழித்தேன். மூன்றாண்டுகளுக்கு மேல் தினம் ஒரு மணிநேரம் சராசரியாக எடுத்துக் கொண்டேன்.  கடைசிக் கட்டத்தில் அதிக நேரம் ஈடுபட்டேன். சாதாரணமாக, மொழிபெயர்ப்புக்கான காலக்கெடு 18 மாதங்கள் என்றறிந்து கொண்டேன்.  அதற்குள் முடித்திருந்தால் பிரதி சரியாக வந்திராது என்பது என் எண்ணம். முழுநேர மொழிபெயர்ப்பாளர்களுக்கு அந்தக் காலக்கெடு பொருந்துமோ என்னவோ?

நூலாசிரியரையும் நூலையும், நூலின் உள்ளடக்கமாக இருந்த மனிதரையும் தெரிந்து கொண்டதில் தொடங்கி, நூலை மொழிபெயர்ப்பது வரை செய்த பயணம் இது. எனக்கு பெருமகிழ்வு தந்த ஒரே நிகழ்வு. வாசகனுக்கும் நூலுக்குமான உறவின் இங்கே நிறைவு பெறுகிறது.  இன்னும் இது போன்று எனக்கு விருப்பமான பணிகளைச் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும் என்றே நம்புகிறேன். நூல் வெளிவரும் நாளை எண்ணிக் காத்திருக்கிறேன்.


  முடிவில் பிரதி எவ்வாறு இருக்கிறது என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும். 

Monday, September 14, 2015

On Resolving the problems of UNDERDOGS


The place was named after an ideal, the city of heaven, Swargapuri.  The city had all the knowledge since times immemorial, enshrined in the books of knowledge composed more than five thousand years ago.  But most of its people had not seen proper clothes on their bodies till at least 100 years ago.  Knowledge has its uses, which are mostly cerebral and it is not meant for ordinary matters or mortals.  It speaks about and speaks for immortals and the ways that ennoble humankind to become immortals.  The city had all the facilities that an ideal heaven should have possessed for heaven is modeled on the aspirations of human beings.  Beautiful buildings, houses fully air-conditioned, broad and tree-lined avenues, Hospitals equipped with all the up to date medical facilities, manicured landscapes, parks and resorts etc not without heavenly beauties.  Heaven cannot be heaven unless there is hell within it.   Every now and then, prisoners from hell would land wrongly in heaven to cause trouble since they perceived that the citizens of heaven were wrongly housed there and occasionally, citizens of heaven excluded, isolated and expelled the fugitive prisoners from hell and restored peace in heaven.  There has always been Viswamitra and Trishanku on one side and Indra and others on the opposite side or for that matter Satan and God, to make things equally unpalatable for all religions.
There was one nuisance from hell that came to heaven.  The lowly, street dogs.   If street dogs had their dreams of ideal life what would it be?  Would it be like human-imagined heaven? Or a different, and necessarily a dogly heaven?  Since we are human, he can only imagine a heaven where all secret human desires (and not that of dogs,) are fulfilled. Since humans and dogs have been living harmoniously for over 10,000 years dreams of human beings are dogs’ dreams too.  Thus they came to heaven from hell.  There would have been celebrations if the citizens of heaven had occasions to welcome only dogs of high breed for the good things they did in earth.  But the dogs came from hell, the permanent and only residence of sinners.  These were street dogs which committed many sins on earth, had long snouts, ugly, unclean, without proper upbringing and had to be condemned,.  City of heaven was full of high breed dogs, of course they are not ‘dogs’ in the first place,  but had to be called for our convenience.   Street dogs from hell suddenly appeared from nowhere. They might have bribed their way through gates of heaven.  Everybody in heaven discounted the idea that some of the high breed pets could have indulged and exercised their freedom of love, without the knowledge of their owners. For, there cannot be freedom of love and the pleasure from it, if it is known to everybody. The orphan and interbred dogs had features of so many breeds that they looked neitherthis or that breed and the citizens knew this.  It was also against the principles of Heaven to accept that there were instances of infidelity among the dogs.  The first law of governance is that if something unlawful happens, it should be promptly denied at first, and later and if necessary, defended on the basis of faith, belief and circumstances.  Principles are principles, you see and administrations cannot function without them.  Citizens of heaven had the firm belief that the rebels from hell had planted street dogs in order to disturb peace and tranquility.  The street dog population increased without any control, for street dogs do not have any rules of love laid down by the dog culture prevalent in heaven.  Every locality in the city faced the menace of street dogs.  The word ‘menace’ was used by the Press, TV channels that were owned by the rich and elite.  Their pet canines have individual names for they are not like street dogs.  The owners also know who their parents were.  The sellers had maintained the genealogy of the pets they sold.  Everything about dogs was perfect until now.
Though the word ‘caste’ was not used for dogs, subtle words like ‘community’, ‘long snouted’ ‘free meal’ (since street dogs eat whatever is available on the streets) were used. A campaign was started in the media to finish the ‘menace’ of street dogs.  The street dogs, the articles and news analyses and documentaries showed, were ferocious, lunatic, angry with humans and hungry for food.  If not controlled and expelled, they would be biting infants at first, children and adults thereafter graduating up to the level of man-eaters of Kumaon.  Often photographs and videos of street dogs were shown but there was no evidence of mad dogs except one or two.   They also had tasted human flesh. Not to let the opportunities to go, human beings had nicely shown elements of their stone-age culture to the street dogs and they had to defend themselves.  But the media, where truth alone triumphs (and nowhere else) raised doubts about street dogs.  Even if they were attacked, they should have gone to the police.  What was unsaid was they would get additional bonus from police for reporting about the high class human beings.   How dogs can dare file an FIR about human beings?  It is also not true that media reports are like buffet tables where hundreds of food items are spread and the guests would forget to eat most of the better preparations and end up eating the worst, not knowing when to eat what.  Similarly, you can choose in the media reports the truth you want to make use of.
TVs started raining programmes on the adverse impacts of the street dogs roaming hungry with their families.  Sooner than later, they would outnumber the human beings.  While these things were taken for granted, there was commendable decrease in the street dogs on certain months or years, the reasons for which can only be attributed to the blessings of invisible gods than the targeted violence unleashed by municipality.  However, the majority opinion was that street dog population was increasing and everybody, if not city council or its head, should take action.  One day Mayor of the city was called for an interview in one channel and followed by interviews of officials, politicians, Ministers in other channels, and one channel achieved greatness by interviewing the President himself.
After grand consultations across party-lines, discussions with doctors, sociologists, came the announcements of grand decisions of the City government. ‘Government was aware of the problems created by street dogs from hell.  It has framed immediate, intermediate and long term solution to this problem. The policy is that the street dogs are a menace and it is desirable that they do not exist and therefore to be eliminated.  And there are different ways of doing it with the active cooperation of the public.  Since the city has been following the noble ideals of non violence, we can prescribe violence with a humane face.  For those who do not understand it is like this. If we know that girls will be ill treated it is better if their life is terminated surreptitiously, if feasible before birth and if necessary after birth.  Immediately, the activists of ‘protection of street dogs committee’ (no one knows how or when are they formed), proclaimed the inalienable rights of the street dogs to exist and to procreate, like other animals, monkeys or cows or a rats and that these dogs are not violent or dangerous.   They also pointed out at the possibility that there was no way they could have come in such large numbers from hell and that domesticated high breeds might have exercised their freedom for love and the owners might have cruelly dumped the illegitimate heirs to let them survive on the streets rather than killing them mercifully.   Activists further insisted that the street dogs should be treated like other pets and given vaccinations for diseases including for madness.
Subsequently, the city Mayor announced that the government would allot each of the street dogs to a family as dogs have fulfilled the human needs for more than 10000 years and you cannot simply betray long standing companions simply because there is shortage of sympathy.  However, all solutions need participation of the public.  It is for the individual household to either take care of the dogs or to consign them to memory.  Again, there were protests from the elites that the street dogs would pollute the habits of their pets. The dogs picked from the streets cannot be made to inter-act with, let alone interbreed with the pets.  Others argued that humans should have pity on the lives of dogs.  Despite all this, the scheme was written on stones so that it is not forgotten easily.  But like all other good schemes, it was never implemented,.  
One great scientist proposed that genetically all the dogs are same and the difference is only in the length of their snouts, limbs and tail and that if street dogs are modified either genetically or surgically all will look same.   Some others mentioned that the domesticated pets obey commands in English, take food in plates unlike street dogs who understand no language but read human emotions by reading faces.  Also street dogs eat contaminated food and follow their own code of love and that would infect the high breed dogs.   Though these things were not spoken about overtly, like all the cruel customs in society which are followed like the ten commandments of god, owners of high breed dogs ensured that their dogs were protected from the influences of street dogs.

 Government of the city of heaven announced another scheme.  There will be only one breed of dogs, oh no, pets, in the city. The longer snouts and limbs etc. will be cut to standard size of the high breed pets.  All dogs should be in one colour and creed as they could be identified as the citizens of the City of Heaven.  There will be only one breed in the whole of the city. They will be taught to obey only in one language in order to avoid creating confusion in the communication among the dogs and their handlers.  However, it was common knowledge that communications were not only between handlers and dogs or from authorities to dogs, but most of the time it was among dogs.  The scheme also prescribed different codes for different things including the ones for dress and hair, in addition to the one for love.  This is to enable inter mingling of pets and street dogs.  However, to enable easy identification and to stop too much inter mingling, owners’ Mobile phone numbers can be etched in the earlobes of the dogs.  The ideal remains that all dogs are created equal.   But differences are created on earth by Men. There should be change in order to ensure that everything remains the same.   It is desirable that there is no confusion either in the policy or in practice.  Both must be different and preferably, diametrically opposite. Those who want to follow policy can do so and those who want to follow something else can do so.  All the sections of the people were happy since they have the freedom to do whatever they want.   They only exercised only the freedom to do nothing.  This is democracy.   The dissidents, as always, disagreed and labelled the situation as rule of the jungle.    After all, it is not necessary or easy to find solutions to the problems.  It is easy to let them fester and they will find their own solutions as per the theory of evolution.  This is not only the rule of jungle but also of human beings who are part of the largest jungle. 

Tuesday, June 23, 2015

’அறத்தின்’ பின்னணியில் உள்ள வன்முறை

         


          இந்தியச் சமூகம் சாத்வீகச் சமூகம் எனப் பலராலும் விவரிக்கப்படுகிறது.  ஒரு புறம் ’அஹிம்சை’யை முன்வைத்துத் தத்துவத்தளத்திலும் மறுபுறம் நாம் வலிமையற்றவர்கள் (உதாரணமாகக் கள் உண்பதில்லை, கறி உண்பதில்லை) என்று நமக்கு நாமே வரையறை செய்து கொண்ட போலியான பொய்யான ஒரு தளத்திலும் நம்மைக் காட்டிக் கொள்கிறோம்.  மென்மையானவர்கள் அதனால் வன்முறையை விரும்புவதில்லை அதில் ஈடுபடுவதும் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறோம்.   
         
          நாம் இளிச்சவாயர்கள், நமக்கு வீரம் (வன்முறையின் இன்னொரு பெயர்) கிடையாது.  மற்றவர்கள் தான் நம் மீது வன்முறை செய்கிறார்கள் நாம் அப்பாவிகள்.  ஆனால்  நம்மீது வன்முறை செலுத்துவோராக நாம் யாரைக்  குற்றம் சாட்டுகிறோமே அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட நியாயம் இருக்கிறது என்று வாதிடுகிறோம்.   நாம்தான் ஒவ்வொரு முறையும் வ்ன்முறையால் பாதிக்கப்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதால் மற்றவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவதற்கு சாக்குக் கிடைத்து விடுகிறது.  

            இந்தியச் சமூகத்தின் அடிப்படை வன்முறைதான்.  அதன் வரைமுறையைச் சிறிது உற்று நோக்க வேண்டியிருக்கிறது.  வன்முறை என்பது ‘உடல் மீதானது’ அல்லது காயப்படுத்துவது என்ற பொருளில் மட்டும் கையாண்டு விடமுடியாது.  உடல்மீதான வன்முறைக்கு நம்நாட்டில் குறைவில்லை.  நமது இதிகாசங்களின் அடிப்படையும் வன்முறைதான்.  மகாபாரதம் போரும் போரைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளும்தான். இராமாயணமும் சீதையின் அபகரிப்பு என்ற வன்முறையின் அடிப்படையில் ராவணம் வதை என்ற  வன்முறையை  நோக்கி நகரும் கதையே. 

            நமது புராணங்களும் ‘எதிரியை வதைக்கிற காவியங்களே’. வெற்றி பெற்றாவர்களின் பார்வையில் எழுதப்பட்டவை.  நாடு என்ற சொத்தின் மீதான ‘ஆட்சி’ என்ற பயன்பெற ‘வீரம்’ என்ற மிகையான வன்முறை பயன்படுகிறது.  முழுச்சமூகம் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறது.  என்னதான் நம் வார்த்தைகளில் வன்முறையைத் தவிர்ப்பது பற்றிப் பேசினாலும், வன்முறை மூலமே ‘சொத்துக்களை’ ‘ஆட்சி செய்ய முடியும்’ என்பயே நம் சமூகத்தின் ஆழ்மனத்தில் நிறுவப்பட்ட அறமாகப் பதிந்திருக்கிறது.  நாம் அஹிம்சைச் சமூகம் என்று சொல்ல முடியுமா?

        நமது மக்களாட்சியில் தேர்தல் சமயங்களில் ‘ஊழல், எதேச்சாதிகாரம்’ என்றெல்லாம் கூச்சலிட்டுத் தேர்தல் நடத்தி முந்தைய அரசைக் குறைகூறித் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்கும் மாற்றுக் கட்சிகளின் கதை போலவே புராணக் கதைகளும் உள்ளன.  

         புராணங்களில் ‘வீரனாகச்’ காட்டப்படும் அரசன் கட்டவிழ்க்கும் வன்முறை அறத்தின் பெயரால் நிறைவேறுகிறது.  தற்போதைய அரசியலில் கூட புராணத்து நாயகர்களின் பெயர்கள் புழங்குகின்றன.  தலைவர்களுக்கு ‘வீரவாள் பரிசளிக்கப்படுகிறது.  நேரடி வன்முறை வழங்கிவராத இடங்களில் சுதந்திரம் பறிக்கப் படுகிற ‘வன்முறை’ அரங்கேறுகிறது.  

          புலால் உண்ணாமை குறித்துப் பெருமை பேசும் ஒழுக்கவாதிகள், சமூகத்தில்  வன்முறைகளைத் தூண்டுகிறார்கள். அவற்றை நியாயப்படுத்துகிறார்கள்.  மிருகங்களைக் கொல்லாமல் இருப்பதே கொல்லாமை  என்றால்  மனிதர்களை கொல்வதற்குப் பெயர் என்ன?   

         புலால் உண்ணாமை குறித்துப் பேசுகிறவர்கள் ‘பொய்யாமை’ குறித்தும் அதே தீவிரத்துடன் பேசுகிறார்களா?  வணிகத்தில் நேர்மையைக் கடைப்பிடிப்பது குறித்துக் கூக்குரல் இடுகிறார்களா?  அவர்களுடைய ‘அறச்சார்பு’ எப்படிப்பட்டது என்பதை இது காட்டுகிறது.  

           பெரிய புராணத்தில் விரித்து எழுதப்படும் அடியார்களின் கதைகளில் எல்லாம் ’சிவனுக்காக’ வன்முறை இயல்பாக நடந்தேறுகிறது.  கண்களைத் தோண்டிச் சிவனுக்கு வைப்பதும், மகனைக் கறிவைத்து சிவனடியார்க்குக் கொடுப்பதும் சிவன் மீதிருக்கும் அன்புக்காகவே செய்யப்படுகின்றன.  இதன் மூலம் அடியார் பெறுவதென்ன? சாதாரணமாக மனிதர்கள் பெற முடியாத சிவலோக ‘பதவி’ கிடைக்கும்.  சிவலோக பதவிக்காக நாம் எதையும் இழக்கலாம், எந்த வன்முறையிலும் ஈடுபடலாம்.  

          புத்த சமண மதங்கள் வழியே காந்தி வரை தத்துவார்த்த, அரசியல் தளங்களில் அவ்வப்போது வன்முறைக்கு எதிரான குரல்கள் வெளிப்பட்டாலும், அடிப்படையில் வன்முறைதான் நமது அரசியலைத் தீர்மானித்தது.   நாம் அந்த அளவில் காட்டுமிராண்டிகளே.  மற்றவர்கள் வன்முறை செலுத்துகிறார்களே என்று நாமும் செய்தால் மற்றவர்கள் புலால் உண்கிறார்களே என்று நாமும் உண்ணலாமா? 

         புலால உண்ணாத ‘புண்ணியம்’ செய்து கொண்டிருந்த, செய்கிற, மேல்தட்டுச் சாதிகளும் வர்க்கமும் தான் சாதி என்ற சமூக வன்முறையின், மதம் என்ற ‘பேயின்’ வன்முறையை, நாடு, ஆட்சி என்ற வன்முறைகளைக் கட்டமைக்கின்றார்கள்.  அதைச் சாத்திரம் என்ற பெயரால் நியாயப் படுத்துகிறார்கள்.  ‘பொய்யாமை, வணிகத்தில் நேர்மை, பெண்ணுக்குச் சம உரிமைகளைப் பற்றியோ மற்ற அறங்களைப் பற்றியோ பேசுவதே இல்லை. 

         ஆக, ’வன்முறை’ பற்றிப் பேசுகிறவர்களும் ‘அறம்’குறித்துப் பேசுகிறவர்களும் தங்கள் சார்பு குறித்தே பேசுகிறார்கள். மற்ற மனிதர்களை, மற்ற அறச் செயல்களை ஒதுக்கியே வைக்கிறார்கள். 


 

Thursday, June 18, 2015

தனிமையில் ஒரு பேரரசன்

       சுனில் கங்கோபாத்யாயாவின்  ‘நிசங்கா சாம்ராட்’ 2005 ( Lonely Emperor –  தனிமையில்  ஒரு பேரரசன்) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கியதுமே முடித்துவிட வேண்டும் என்று தோன்றியது.  ஒரு மகா நடிகனின் கதை. தமிழகத்தில் இப்படிப் பலர் பேசப்படுவதைக் கேட்டிருப்பதால் வங்காளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன வேறுபாடு என்று தெரிந்துகொள்ளத் தோன்றியது.  இரண்டு படம நடித்துவிட்டு வணிகத் தந்திரமாக பலவித அடைமொழிகளோடு உலவ ஆரம்பித்து விடும் நடிகர்கள் இங்குண்டு. அதற்கு மேல் நடித்தவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.  

        சிசிர் பாதுரி நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற வங்காள நடிகர்  (02/10/1889  - .30/06/1959)  அவருடைய வாழ்க்கையை சுனில் கங்கோபாத்தியாயா வரலாற்றுப் புதினமாக எழுதியிருக்கிறார். 

உண்மையில் நடந்த நிகழ்வுகள் என்ன என்பது எனக்குத் தெரியாது. புதினத்தில் வரும் நிகழ்வுகளை வைத்து அதையும், அதன் நாயகனான சிசிர் பாதுரியையும் தெரிந்து கொள்ளலாம்.  
               
     சிசிர் பாதுரி, கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர் அதைவிட்டு விட்டு நாடகத்துறையின் மீதுள்ள தீராக்காதலின் காரணமாக அதில் நுழைகிறார். ஒரு காலத்தில் நல்ல குடும்பத்தினர் பார்க்கவோ பங்குபெறவோ தக்கதல்ல என்று கருதப்பட்ட நாடகத்துறை, பல சாத்தியங்களைக் கொண்டது. அதில் சாதனைகளை நிகழ்த்த முடியும்.  அது நல்ல குடும்பத்தினர் வந்து பார்க்கவும் பங்கேற்கவும் தகுதி உள்ளது என்ற புரிதல் உள்ளவர் சிசிர்.    அந்தக்காலத்து வங்காள நாடகங்களில் பாட்டும், சங்கீதமும் மிக அதிகம் புகழ்பெற்றவை. 21 பாடல் உள்ள நாடகங்கள் அங்கும் இருந்தன.  ராமாயண, மகாபாரதக் கதைகள்  நாடகங்களின் மையக் கருவாக இருந்தன.  பெண்கள் வெளியில் அதிகம் வராத காலமாதலால், அதிலும் ஆண்களை மகிழ்விக்கவென்றே நாடகங்கள் நடந்ததால், பெண்கள் நாட்டியம் ஒவ்வொரு நாடகத்திலும் இருந்தன இருக்க வேண்டிய கட்டாயம்.  ரசிகர்கள் அப்படி.  ’நல்ல’ குடும்பத்துப் பெண்கள் நடிக்க வரமாட்டார்கள். எனவே உடலை வைத்துத் தொழில் நடத்தும் பெண்களுக்கே நடிக்கிற வாய்ப்புக் கிடைத்து வந்தது.  இதுமாதிரித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடகங்கள் எவ்வாறு இருக்கும்? நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.  இதனிடையே தேசிய இயக்கம் வேறு நடந்துகொண்டிருக்கிறது. நாடகத்தில் அதன் பாதிப்புச் சிறிதும் இல்லை.  நாடக கம்பெனிகளை பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன.

        நாடக உலகை மாற்ற வேண்டும் என்று சிசிர் நினைக்கிறார். நமக்கு நாடகப் பாரம்பரியம் உண்டு என்று காட்டவும் விரும்புகிறார்.  முதல் முறையாக நாடக்க் குழுவுக்கு வங்கமொழிப் பெயர் வைக்கிறார்.  அதுவரை எல்லாக் குழுக்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் தான் இருந்தன.  இப்படிப் பல  மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிற மற்ற எழுத்தாளர்களில் ரவீந்திரநாத் தாகூரும் ஒருவர்.  அவரும் புதினத்தில் பாத்திரமாக வருகிறார். (இன்னும் பலருடன் கடைசியில் சத்யஜித் ரேயும் வருகிறார்).  சிசிர் பாதுரியின் நாடக வாழ்க்கைப் போராட்டமே புதினமாய் விரிகிறது.  நாடகம் வாழ்வைக் காட்ட வேண்டும், நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்.  மேலே விவரித்த சமூக, அரசியல் சூழலில் அது எதிர் நீச்சலாகவே இருக்கிறது.  ஜாத்ராவை மேடை நாடகத்துக்குள் கொண்டுவரும் கனவும் அவருக்கு இருந்தது.

        ரவீந்திரநாத் தாகூரை அனைவரும் மதித்தாலும், அவருடைய சில நல்ல நாடகங்கள் தோல்வி அடைகின்றன.  ஜனரஞ்சகமாக நாடகம் எழுதினால், அதில் பெண்களின் பாட்டும் நடனமும் இருந்தால் நன்றாக நாடகம் நடக்கிறது. அது போலவே சிசிர் பாதுரி ஒரு மகா நடிகன் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.  ஆனால், அவர் எல்லோரையும் போல நடித்தால்தான் நாடகம் பார்க்க வருகிறார்கள். அதில் அவருக்குத் திருப்தி இல்லை. (இதுவும் யாரையோ நினைவுபடுத்துகிறதே)  

        இதைப் படிக்கும் போது விட்டல் ராவ் எழுதிய ‘__________’ என்ற நாவல் ஞாபகம் வருகிறது.  அதுவும் இயற்கையாக நாடகச் சூழலை வர்ணித்தாலும் நாவலின் உச்சகட்டப் பிரச்சனை ‘பணம் சம்பாதிப்பதும், வாழ்வதும் என்றே முடிந்துவிடும்.

நாடக வாழ்க்கை எப்படிச் சீரழிந்து போனது என்று காட்டினாலும், தனிமையில் ஒரு பேரரசன்’  நாடக மேடையின் சாத்தியங்களை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காகக் கடைசிவரை போராடுகிறான்.  அதுவும் புகழ்பெற்ற நடிகனின் கதை.  (தமிழ்நாட்டிலும்..?).

மூன்று விஷயங்கள் இந்த நாவலின் மையக்கருத்தாக வருகின்றன என்று நினைக்கிறேன்.  மூன்றும் சிசிர் பாதுரியின் கனவுகள். 1. சுதேசிய (விடுதலைக்குப் பிறகு தேசிய) நாடக இயக்கம் வரவேண்டும் வளர வேண்டும். 2. நாடகத்தின் உள்ளடக்கம் மாறவேண்டும். அதன் வெளிப்பாடும், மிகைப்படுத்தலில் இருந்து இயற்கையாக வெளிப்பாடாக மாற வேண்டும். 3. நடிகர்களும் (குறிப்பாகப் பெண்களும்) நல்ல குடும்பங்களில் இருந்து வர வேண்டும் அதன் மூலம் உள்ளடக்கம் மாறும், நாடகக் கலை தனக்குரிய இடத்தை அடையும்.

சித்தர்ரஞ்சன் தாஸ் (சுதந்திரப் போராட்ட வீரர்) நாடகத்தில் ஆர்வம் உள்ளவர்.  நாடகம் பார்க்க வருகிறார்.  ‘சுதேசி நாடக இயக்கம் வரவேண்டும் என்று அவரிடம் பணஉதவி கேட்கிறான்.  ஏராளமாகப் பணம் ஈட்டிய அவர், சுதேசி இயக்கத்தில் சேர்ந்த பிறகு, உதவி செய்யப் பணமில்லை.  ஆனாலும் சிசிர் பாதுரியின் கனவுகளை மதிக்கிறார் ஆதரிக்கிறார். (இதிலும் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் சில நினைவுக்கு வரலாம்). வக்கீல் தொழிலை விட்டுவிட்ட காரணத்தால், பெருபாலும் வருமானத்தை இழந்துவிட்ட அவரால், சிசிர் பாதுரிக்கு உதவி செய்ய இயலாமல் போகிறது. அதுவும் அன்றி விரைவில் இறந்தும் போகிறார்.  ஆனால் கடைசிவரை சிசிர் பாதுரி, தேசிய நாடக இயக்கம் வளர வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறான்.

புதினத்தில் வரும் சிலகாட்சிகளும் முரண்பாடுகளும் நமக்குப் பலவிஷயங்களைச் நினைவுபடுத்துகின்றன.  சிசிர் நினைத்தபோது குடிக்கிறான்.  அதிகமாகவே குடிக்கிறான். மற்ற நேரங்களில் குடிக்காமல் பலநாட்கள் இருக்கிறான்.  அவனுக்குப் பெண் துணை தேவைப் படுகிறது. ஆனாலும், புத்திசாலிப் பெண்களையே அவன் தேடுகிறான்.  திருமணத்தில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.  ஆனால், ஒரு படித்த பெண்ணை நேசிக்கிறான், அவளும் அவனை விரும்புகிறாள்.  ஆனால், அம்மா ஒத்துக் கொள்ள மாட்டாள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குகிறான். அந்தப் பெண் கேட்கிறாள் “ அம்மாவிடம் கேட்டுத்தான் குடிக்கிறாயா அல்லது நடிக்கிறாயா?” அவன் அம்மாவுக்கு அடங்கிய மகனாகவே கடைசிவரை இருக்கிறான். அவளும் அவமானத்தில் துவண்டு போய் இறந்து போய்விடுகிறாள். 

இன்னொரு காட்சியில், சாந்தி நிகேதனில், ரவீந்திரநாத் தாகூர் நாடகம் வாசித்துக் காட்டுகிறார்.  அவர் அறுபதுகளில் இருக்கிறார்.  அவரை வங்காளிகள் கொண்டாடுகிறார்கள். அதனால் அவரை விமரிசிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்று இருக்கிறது.  சிசிர் உட்கார்ந்து அதைக் கேட்டுவிட்டு  நாடகம் சரியில்லை என்று தனக்குப் பட்டதைச் சொல்லிவிடுகிறான்.  அந்தச் சபையில் அப்படிச் சொல்லும் தைரியம் வேறு எவருக்கும் இல்லை.  பின்னர் அது பற்றி வருந்துகிறான்.  அடுத்த நாள் காலை தாகூர் சரியாகத் தூங்கவில்லை என்றும் அதற்குக் காரணம் அவனது விமரிசனம் என்றும் பலர் அவனை இடித்துக் கூறுகின்றனர்.  ஏனெனில் தாகூருக்கும் தன்னைப் பற்றி யாரும் விமரிசனம் செய்தால் பிடிக்காது.  ஆனால் தாகூர் அடுத்தநாள் அவனிடம் சொல்கிறார்.  ”இரவில் அதே நாடகத்தை முழுவதும் மாற்றி இன்னொரு நாடகம் எழுதினேன். அதனால் சரியாகத் தூங்கவில்லை. இன்று அதை நான் வாசிக்கிறேன்.”  பெரிய கலைஞனுக்கும் விமரிசனத்தின் மீது வெறுப்பு இருந்தாலும், அது அவனை உந்துகிறது. இன்னும் எழுத வைக்கிறது. தமிழ் நாட்டில் விமரிசித்தால் விளக்குமாறை எடுத்துக் கொண்டு போர்தொடங்கும், கலைஞர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் நினைவுக்கு வரவில்லையா?

அமெரிக்காவில் நாடகம் நடத்தச் செல்கிறான். அங்கும் பெண்கள் நடனம், ஆனால் உடல் தெரியும்படியான நடனம் தேவைப்படுகிறது.  இவர்களுடன் சென்ற நடிகைகள் ‘சொனாகாசியில்” இருந்து சென்றவர்கள். உடலை மெல்லிதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தே இல்லாதவர்கள். ஆனால் பெண்கள் நடனம் நாடகத்தில் இல்லை என்றால் நாடகம் நடத்த முடியாது என்ற நிலை.  ஏற்கனவே விளம்பரத் தட்டிகளில் எழுதிவிட்டார்கள்.  நாடகம் சரியாக நடத்த முடியாமல், அவமானத்தில் முழ்குகிறார் சிசிர்.  எப்படியோ அடுத்த இடத்தில் நடத்தும் போது உடல் கொஞ்சம் நிறம் மங்கிய மெக்ஸிக பெண்களை வைத்துக் கதையை ஒப்பேற்றுகிறார்கள்.

சிசிர் பாதுரிக்கு பத்மபூஷன் பரிசு அறிவிக்கிறார்கள்.  அது வேண்டாம் என்று அவர் கடிதம் எழுதத் தொடங்குகிறார்.  “நாடகத்தைப் பற்றிக் கவலைப்படாத அரசுகள், அதற்காக எந்த வசதியும் செய்யாத (மத்திய மாநில) அரசுகள், தேசிய/சுதேசி நாடகம் வேண்டும் என்ற எண்ணமே இல்லாத அரசுகள் கொடுக்கிற பரிசு எனக்கு வேண்டாம்’ என்று எழுதுகிறார். (ஆனால் 1959க்கான பட்டியலில் அவர் பெயர் இருக்கிறது. அவர் உண்மையில் வாங்கினாரா என்பது இன்னும் அறிய வேண்டிய ஒன்று. எனக்குத் தெரியவில்லை).

அந்தக் காட்சியின் கடைசியாக, சத்யஜித் ரே தனது ’ஜலசாகர்’ படத்தில் நடிப்பதற்காக சிசிர் பாதுரியைக் அழைக்க விரும்புகிறார்.  தான் சிசிர் பாதுரியின் நெருங்கிய நண்பருடைய மகன் என்றும் ஆனால் அவர் பெயரைச் சொன்னால், அதன் காரணமாகவே சிசிர் ஒத்துக் கொள்ளக் கூடும். அந்த வாய்ப்புத் தனக்குத் தேவையில்லை.  தன்னைச் சந்தித்துப் பேசிய பின் சிசிர் முடிவு செய்யலாம்  என்று சொல்லி சந்திக்க நேரம் கேட்கிறார்.  மிகவும் தயங்கித் தயங்கி அவருக்கு நேரம் ஒதுக்குகிறார் சிசிர்.  அன்றைய நிலையில் அவருக்கு வருமானமில்லை.  யாருடைய தயவிலும் அவர் வாழவும் விரும்பவில்லை.  கடைசியில் வாய்ப்பை சிசிர் மறுத்தபின்னர் தான் யாருடைய மகன் என்று அதை வெளியிடுகிறார்.  சிசிர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை காரணம்.  இப்படிப்பட்ட புகழ்பெற்ற நாடக நடிகன் பிழைக்க வேண்டும் என்று சினிமாவில் நடிக்கிறான். நாடகத்திற்கு அவன் மதிப்புத்தரவில்லை என்று தவறான புரிதல் சமூகத்தில் பரவிவிடும். நான் நாடக நடிகனாகவே நினைவு கொள்ளப்பட வேண்டும் என்று சொல்கிறார். இத்தனைக்கும் வருமானம் இன்றி துயரில் ஆழ்கிறார். ஆனாலும் தன்மானத்தை இழக்க, நாடக்க் கலைஞன் நாடகத்தை விட்டுவிட்டான் என்ற செய்தி பரவக் கூடாது என்று நினைக்கிறார்.  நாடகத்தை விட்டுக் கொடுக்க அவர் தயாரில்லை.   
               
        இது ஒரு வரலாற்றுப் புதினம்.  தமிழில் வரலாற்றுப் புதினம் என்பது சோழ, பாண்டிய, சேரனை விட்டு இன்னும் வந்த பாடில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.  கதையில், தாகூர், பாதுரி, அவருடைய காதலி, நமக்குத் தெரிந்த சத்யஜித் ரே, கடைசியில் நாவல் எழுதிய சுனில் கங்கோபாத்தியாயாவும் நுழைகிறார்கள்.  ஒரு மகா நடிகனை, அவனுடைய மேன்மைகளோடும், கீழ்மைகளோடும் (அப்படிக் கொண்டுவிட்டால்), சமூகதோடும், லட்சியங்களோடும் பொருத்திக் காட்டும் நல்ல புதினம் இது. ஆங்கில மொழியாக்கத்தில் பென்குயின் பதிப்பில் கிடைக்கிறது. தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.


        புதினத்தைப் படித்ததும் இப்படியெல்லாம் உண்மையில் நடந்ததா? என்று தேடத் தூண்டுகிறது. உதாரணமாக, சிசிர் பத்மபூஷன் விருதை வாங்க மறுத்துக் கடிதம் எழுதுகிறார். உண்மையில் மறுத்தாரா? 

Sunday, August 17, 2014

Thumbs are banned


                When I came to know of it, I was surprised.   You would also be surprised.   Yes, there are many countries in this world that have banned books, films, speeches, certain subject and this and that.  But this country is different.    I do not want to name the country.  That may invite trouble for me and  for my job. It would be against the policy of the government to have a good and friendly relations with that country.   I am a coward who can only hide behind a safe wall if it can secure me from the risk of being spotted and targeted.   I remember that one of the greatest cowards has proudly proclaimed “It is preferable to be a coward in a country where there is oppression.  Your job is not to oppose it by direct action.  You are not a Gandhi and the rulers are not British of 20th century India.  You fight the system by obeying it obviously and subverting surreptitiously,  behind the safe walls of secrecy.   Courageous people are not those who take on the system immediately and die for that.  Their sacrifice is well received but their sacrificial instincts could be more effectively used on a long term basis if they indulge in subversion by invisible and indirect actions”.   Thus, one thing is for sure, that I am a coward.
                It is a country that has banned the use of right hand thumb.   Oh, no, don’t remember Ekalaiva, the ancient disciple of Dronacharya, the teacher, whose life has been portrayed in the numerous episodes of puranas and myths and epics, leaving aside other teachers who have not been on the winning side.    Why they have banned the use of thumbs? Because some of the Gurus have stated that using the thumbs before the age of majority would cause irreparable damage to the physical and mental well being of those below the age of majority.   What is the proof? The reply given to them is as follows: “ Don’t ask for proof.  If sages have said that the young people should not use thumbs, there is no need for proof.  The ancient books have all the knowledge of the world, including the knowledge that is yet to be acquired.  These sages can invent the origin of any of the discoveries and inventions of the future, in the texts of the past.   Since the world has a definite shape, so is the knowledge about this world and beyond and complete knowledge about the world is contained in the four books of the ancient world”.  
                And there entered a dissident.  He said it is 21st century and science and knowledge dominate the world.  All societies are progressing so fast that we cannot catch them unless we can double the speed”.   Others rebutted him saying “you cannot simply and blindly follow other countries”.   But every citizen of the patriotic country were using everything that has been invented in this world till that time and using them to project their side of the truth.   But, wait one thing that is not allowed is the usage of the thumbs.  They further added that if things get too far, there is a possibility that even the usage of thumbs in the legs would be banned as if the use of the thumbs in the hands were not enough.
                The dissident was initially ignored by the establishment.   But he grew in popularity.  It was a simple logic that caught the imagination of the people.  If each part of the body has a function, thumbs have also certain function and it would be against laws of nature and practice to ban the use of thumbs.  Further, people tend to use their thumbs in private and pretend that they do not use the thumbs and they obeyed the orders of the mighty rulers.   In public, everyone supported the ban, not only because they were all cowards, but also because no one would notice if they use their thumbs in their private spaces like houses, exclusive clubs etc. and blame and criticize the ban vigorously and oppose the ban vehemently through word of mouth than by printing leaflets or publishing books or articles.  This is the case with dowry law, enacted in the sixties in India, but majority of the people seemed to violate the dowry law.   Remember, SEEMEED TO VIOLATE, for in this republic of law, every law is upheld in the courts and every law is violated in practice.  This is how the laws can be defeated.  For everything there is a law.  For other things, you can only go to the sages, who will interpret the laws.   And the courts will look the other way.
                Coming back to the rebel, he was sent to prison for violating and disturbing peace by questioning the faith of the millions.  It is also true that except for a motley group of people no one even heard of him.  Many people came to know of his pronouncements only after he was sent to jail.  And they did nothing.  For, they do not have fear of law.  The law will always be upheld by everyone in public and it will be violated in private.  
                In this unnamed country, whenever, anyone of the extreme elements thought of banning anything they invoke the sacred principles of the religion they belonged to.  It would be easy.  For nobody has time or energy or scholarship of the mad kind to read the great works of the ancient saints and  decipher their meaning to counter the ideas of mad people, it would be easier to ignore them.  The rulers of the country were of late thinking of restricting the length of the nose or rather prescribing the length of the nose.  They would prescribe that everyone’s nose should be of two and a half inches in length and if it exceeds this length, it has to be modified by surgery. Government will provide money for the surgery, but only a part of the expenditure.  If the length of the nose is less than two and a half inches, it has to be increased by surgery.   Why this step?  Somebody had questioned. There has to be uniformity in the country, otherwise it will disintegrate.  This country has one language, one flag, one national anthem, one president, one prime minister and you are allowed one wife or one husband.  When this is so, there are a lot of benefits if everyone has two and a half inches of nose.  Everyone would feel that they belong to this one nation and become patriotic physically if not mentally.  What is unsaid was that if there is patriotism, the rulers can justify anything in the name of patriotism. Therefore patriotism is important.  The more patriotic citizens have invented a slogan “Jai Bandh”, meaning it is a country where every ban would be welcomed.  They even suggested that the height, weight and dress, style of walking and hairstyle have to be regulated and are fighting for that.  There would always be others who are sane.

Tuesday, July 22, 2014

ஞானம் என்பது.....

 

       பக்தி இயக்கத்தின் காலத்தில் (இந்தப் பெயர் கூட நாமாகப் பின்னால் இட்டுக் கொண்டதுதான்.  அடியார்களும், ஆழ்வார்களும் நடமாடிய காலத்தில் ‘பக்தி இயக்க காலம்’ என்ற பதம் வழக்கின் இருக்க வாய்ப்பில்லை), படிக்கத் தெரிந்த அதாவது வாசிக்க்த் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தயக்கமாக இருக்கிறது.  குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர வேறு யாரும் கல்வி பயில முடியாது என்ற நிலைமை இருந்தவரை, சிறுபான்மையினர் தான் கல்வி பயின்றிருக்க முடியும்.  அதிலும் பாடல் பாடி, இறைவனைப் பரவுவதென்பது, அதனினும் மேலான நிலையில் இருப்போர்க்கே வாய்த்திருக்கும். எனவே, நாயன்மார்களும், ஆழ்வார்களும் எந்தச் சமூகப் பிரிவுகளில் இருந்து தோன்றியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை. 

 

       இப்படிப்பட்ட சிறுபான்மையினர் எதை ஞானம் என்று வரையறை செய்தார்கள்? அதை அடைவதற்கான வழி என்னவென்று கண்டார்கள் அல்லது விண்டார்கள்? என்பது காணவேண்டிய ஒன்று.  ஞானம் என்பது இறைவனை அறிந்து கொள்வது, அவனுடைய திருவிளையாடல்களை அறிந்து கொள்வது என்பதாகவே கொள்ளப்பட்டது.  

 

 

       விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அறிதல் என்பது ஒரு பொருளை அவதானித்து அதன் குணங்களைச் சோதித்து அறிகிற வழியாகும்.  அப்படிச் சோதித்துச் சோதித்து அறிந்த விஷயங்களை தொகுப்பை அதன் மூலம் இயற்ற்கையைப்  பற்றிய நமது புரிதலை ‘ஞானம்’ என்று சொல்லலாம். ஆனால் பக்தி இலக்கியத்தைப் பொறுத்தவரை, ஞானம் என்பது இறைவனுக்கு அடிமையாவதன் மூலம் அவன் அருளால் கிடைப்பது.  ஞானம் என்பது அவனை அறிவது. அதற்கு மேல் எதுவும் இல்லை. ஆனால் விஞ்ஞானத்தின் வழியில் ஞானம் என்பதை ‘அறிவு என்ற பொருளில் கொண்டோமெனில், எந்த ஒரு பொருளை, அல்லது இயற்கை நிகழ்வைப் பற்றிய அறிவு என்று வரையறுக்கலாம். உதாரணமாக, கடலைப் பற்றி மனிதன் அறிந்து கொண்டதையெல்ல்லாம் தொகுத்தால், அது ஒரு விஞ்ஞானப் பிரிவாக ஆகிவிடும். அதைப் பற்றி அறிந்து கொள்ளும் விதம் என்பது, கடலில் சென்று அதில் உள்ளவற்றை அவதானித்து, சோதனைகள் செய்து, மறு சோதனைகள் செய்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனிதர்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் சோதித்து, கடைசியில் அனைத்தையும் தொகுத்துக் கிடைப்பதை கடலைப் பற்றிய ஞானம் என்று சொல்லிக் கொள்ளலாம்.  இறைவனைப் பொறுத்தவரை, அவரிடம் கேள்வி கேட்காமல் சரணடைவதென்பதே ஞானம். 

 

       அடுத்ததாக, பக்தி இயக்க்காலத்தில் நாயன்மார்களும் பாடிப் பாடிப் பரவியதெல்லாம் இறைவனின் பெருமைகளை மட்டுமல்ல. முதலடியாக, வாழ்வின் யதார்த்தத்தில் இருந்து விலகுதல், அதாவது குடும்பம் என்ற பொறுப்பில் இருந்து விலகுவது, பெண்ணாசையில் அதீதமாக ஈடுபட்டு பின்னர் அதை வெறுத்து, சமூகத்தை வெறுத்து இறைவனிடம் செல்வது. மனித சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இயற்கையை மீறிய ஒரு சக்தியை அதாவது தனக்குப் பிடித்தமான ஒரு தெய்வத்தை வணங்குவது, அதனிடம் தன்னை இழப்பது.  அதற்கு அடுத்த படியாக, இந்தப் பிறவி வேண்டாம், சொர்க்கம் வேண்டும், அல்லது உன் காலடியில் விழவேண்டும் என்றெல்லாம்  இறைவனிடம் கையேந்திப் பிச்சை எடுப்பது. பக்திப் பாடல்களை இந்த வரையறக்குள் அடக்கி விடலாம்.

 

       பக்திப் பாடல்களில் துலங்கும் இலக்கியத் தரம் என்பது, உணர்ச்சி வேகத்தில் எழுகிற கவித்துவ உணர்வைப் பிரதிபலிக்கலாம்.  ஆனால் இறைவனைப் பாடுவதாலேயே அது இலக்கியமாகிவிடாது.  பக்திப் பாடல்களில் உன்னதமான மனிதக் குரல்கள் ஒலிக்காமல் இல்லை.  ஆனால் அவை அதற்காகவே எழுதப்பட்டவை அல்ல.

உதாரணமாக, “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’   என்று கம்பீரமாக தொடங்கும் குரல் முதல் நான்கு அடிகளில் உச்சத்தை எட்டி, அடுத்த நான்கு வரிகளில் தன் கம்பீரத்தை இழந்து, மீண்டும் சூம்பிப்போய் விடுவதைக் கவனிக்கலாம்

 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    

  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

     

.      ஆக, ஞானம் என்பது விஞ்ஞானத்தின் பொருளின் ஞானமாக இல்லை.  பக்தி இலக்கியத்தில் இலக்கியத் தரம் என்பது அவ்வப்போது வெளிப்பட்டாலும், அதற்குள் அழகியல் உள்முரண்பாடுகள் உண்டு. 

Monday, July 14, 2014

நமது பண்பாடு.

 

நமது பண்பாடு என்ற வார்த்தையும் கருதுகோளும் அடிக்கடி நம் காதில் விழுகிறது.  யாருடைய வாயிலிருந்தும் எளிதாக வெளிவரும் இந்த வார்த்தைகளுக்கான பொருளை முழுவதும் அறிந்து கொண்டுதான் பேசுகிறோமா? என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.  ‘நமது’ என்ற வார்த்தையிலும், கருதுகோளிலும், ‘பண்பாடு’ என்ற வார்த்தையிலும் கருதுகோளிலும் மிகப் பெரிய குழப்பங்கள் இருக்கின்றன.  எப்போதுமே எதையும் அறுதியிட்டுச் சொல்பவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஏனெனில் இந்த உலகமும், அதில் உள்ள எதுவுமே எந்த ஒழுக்கத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவில்லை.  எனவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிந்த்தாக நினைத்துக் கொண்டிருப்பவன் அடிப்படையில் முட்டாளாகவே இருக்கிறான். 

 

        முதலில் ’ நாம்’ என்ற கருதுகோளை எடுத்துக் கொள்வோம்.  அந்த வரையறைக்குள் எதையெல்லாம் அடக்குகிறோம் என்பது அவரவர் சமூகநிலை, அரசியல் நிலைப்பாடு என்பனவற்றை உள்ளடக்கியது.  இந்த நாமும் கூட காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம்மாறிக் கொண்டே இருப்பது. உதாரணமாக, பாண்டிய சேர சோழ அரசுகள் இருந்த காலத்தில், பாண்டிய நாட்டில் வாழும் ஒருவர் அங்கு வாழும் மக்களை ‘நாம்’ என்று கருத வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும்.  சேர நாட்டில் வாழ்ந்தவர் அவரைப் பொறுத்தவரை வேற்று நாட்டவர்.  1946ஆம் ஆண்டில் லாகூரில் வாழ்ந்த ஒரு பஞ்சாபி தன்னை இந்தியர் என்றே அடையாளம் கண்டிருப்பார்.  ஆனால், 1949ஆம் ஆண்டில் அவர் தன்னை ஒரு பாகிஸ்தானி என்றே அடையாளம் காணவேண்டி இருந்திருக்கும். 

 

        பண்பாடு என்பதும் இவ்வாறே இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  கோமணம் கட்டிக் கொண்டே வாழ்வது பழைய பண்பாடு, ஆண்கள் குடுமியோ சடைமுடியோ வைத்துக் கொள்வதும் நமது பண்பாடு, இப்போது நவீனமுறையில் ‘பங்க்’ வைத்துக் கொள்வதும் நமது பண்பாடுதான். ஆடைகள் அலங்காரங்களுடன் உள்மனதும் மாறி விடுகிறது.  தமிழகத்தில் பெண்கள் சைக்கிள் விட ஆரம்பித்ததில் இருந்து அதற்குத் தகுந்தாற்போல் பேண்ட் அல்லது சல்வார் கமீஸ் அணிவது அதிகமாகிவிட்ட்தைக் காணமுடிகிறது. 

 

        எனவே ’நாம்’ , ‘பண்பாடு’ என்ற கருத்தாக்கங்கள் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.  இன்று நாம் அணிந்திருக்கும் உடைகள், பேண்ட், சட்டை, காலணிகள், எதுவும் நமது பண்பாட்டில் பிறக்கவில்லை. நாம் எழுதும் பொருட்கள், அலுவலகத்தில் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் நமது பண்பாட்டில் கண்டுபிடிக்கப் பட்டவை அல்ல. செய்தித்தாள், கணினி, பேருந்து, விமானம் ரயில் என்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எதுவும் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.  ஏன் தமிழர்களின் அடையாளமாக நினைத்துக் கொண்டிருக்கிற, நாம் அதிகம் விரும்பி உண்ணுகிற, சாம்பார் வெளிமாநிலத்தில் இருந்து வந்தது.  இட்லி கூட தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் இருந்து வந்த்தாம். தேங்காயும் அங்கிருந்தே வந்ததாம். மிளகாய், தென்னமரிக்காவில் இருந்தும், காபி அரேபியாவில் இருந்தும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்த நிலையில் நாம் நமது என்றோ நமது பண்பாடு என்றோ சொல்வதை, சில ஆண்டுகள் வரை பார்த்த்து கூடக் கிடையாது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பண்பாடு என்றும் அதைக் காக்க வேண்டும் என்று கூச்சல் கேட்கும் போது நாம் உண்மையிலேயே ’மெய்மறந்து’ போய்விடுகிறோம். அதாவது உண்மைகளை மறந்து போகிறோம்.

 

       எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிற ஒன்றை, ஏதோ அது நிலையானதே போல், பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது. அதைக் காப்பாற்றச் சிலபேர் அரசியல் பேசுவதும், அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவதும் அவ்வாறே தவறே ஆகும்