Monday, August 14, 2023

 உருவமும் உருவகமும்

      நமது பண்பாட்டுத் தளத்தில் உருவகமாகச் சொல்லப்பட்ட கதைகள் உண்மையில் நடந்ததாகப் புரிந்துகொள்ளப்படுவது என்றும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறதுரகு வம்சத்தைச் சேர்ந்த ராமன், குரங்குகளின் கூட்டத்தோடு உறவு கொள்வதாகச் சொல்லப்படுவதும் அனுமன் என்ற பாத்திரமும் அவன் குலமும் குரங்குகளாகவே சித்தரிக்கப்படுவதும் நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்தவகைப் புரிதல் தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில் மட்டும் நிகழ்வதல்லஇந்தியாவிலும், உலக அரங்கில் பல மதங்கள், பண்பாடுகளிலும் நிகழ்கிறதுமனிதர்களின் குலக்குறியீடுகளின் வழியாகச் சொல்லப்படும் கதைகளை ஓவியர்களும், கவிஞர்களும் குரங்குகளாகவோ, மனித உருவத்தில் இருந்து வேறுபட்ட காட்டு உயிர்களாக, அதாவது அரக்கர்களாக சித்தரித்துவிட்டனர்கவிஞர்களைவிட ஓவியர்களுக்கு இதில் அதிகப் பங்கிருப்பது போல் தெரிகிறது. பல காலங்களில் நேரடியாகவோ கதைகளாகவோ சொல்ல முடியாததைச் சொல்வதற்கு இந்த மிருகங்கள் பேசும் உத்தி பயன்படுகிறதுஈசாப் நீதிக்கதைகள், ஜாதகக் கதைகள் இவற்றில் இதைக் காணலாம்

கிரீஷ்கரனாட் இந்த உத்தியைத் தனது பல நாடகங்களில் உணர்த்துகிறார். (உதாரணமாகநாகமண்டலா என்ற நாடகத்தில், ஒரு பாம்பு ஆண்மகனாக உருவெடுத்து கணவனால் கவனிக்கப்படாடத பெண்ணுடன் உறவு கொள்கிறதுஅவளுக்கு அது தெரியாது. அவள் கர்ப்பமானதும், கணவன் அவளை நிராகரிக்கிறான். பஞ்சாயத்து கூடுகிறதுஒரு பானைக்குள் பாம்பை விட்டு, அவள் அதில் கையை விட வேண்டும் என்று பஞ்சாயத்து தீர்ப்பளிக்கிறதுஅவளுடன் உறவு கொண்ட அதே பாம்பு பானைக்குள் இருக்கிறதுஅவளைத் தீண்டாமல் விடுகிறதுஇந்தக் கதையில் கிராமங்களில் அநியாயம் செய்தவனே தீர்ப்பளிக்கும் நீதிபதியாகும் நிலைமையை இந்தக் கதை விவரிக்கிறது)  இது குறித்து அவர் பேசியும் எழுதியும் உள்ளார்.

இதிகாச புராணங்களில் உருவகமாகச் சொல்லப்படும் மிருகக் கதைகள் உண்மையாகவே மிருகங்கள் பேசுவது போலவே சொல்லப்படுவது வழக்கமாகிவிட்டது. அவற்றைப் புரிந்து கொள்ளும் மனிதர்கள் சொல்லப்படும் உண்மைகளைச் சரியாகவே புரிந்து கொள்கிறார்கள்.

      தங்கள் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை மட்டுமே மனிதர்களாகக் கருதுவதும், மற்ற கிராமங்களில் உள்ளவர்கள் மிருகங்கள் என்று கருதுவதும் மனிதகுல வரலாற்றில் இருந்ததாக ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து அரசு இவற்றின் தோற்றம் என்ற நூலில் மானுடவியல் ஆய்வுகளில் இருந்து எடுத்துக் காட்டுகிறார். ‘அன்னியர்எப்போதுமே கண்டனத்துக்குரியவர்களாக வகுப்புவாதம் பேசும் அரசியல் கட்சிகள், அரசுகளால் சித்தரிக்கப்படுவது இப்போது புதியதாக எழுந்ததல்ல. 

      தங்களுடைய நிலப்பகுதியைச் சாராத மனிதர்களை மிருகங்களாக அன்னியப்படுத்திக் காட்டுவது இன்றும் தொடர்கிறது. அதன் வடிவம் மாறி இருக்கிறதே தவிர உள்ளடக்கம் தொடர்கிறதுமற்ற மத, இன மனிதர்களை கொடுமைக்காரர்களாகச் சித்தரிப்பதும், காட்டுமனிதர்களாகச் சித்தரிப்பதும் இன்றும் அரசியல் தளத்தில் நடைபெறுகிறது

      இவ்வகையான வகைப்படுத்தல் மூலம், பெரும்பான்மைச் சமூகத்தை ஒன்றிணைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது பாசிசத்தின் ஒரு அம்சம் ஆகும்இப்படி அன்னியர்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை நியாயப்படுத்தப்படுகிறதுஇது தவிர, அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட சமூகத்தில், அதை நியாயப்படுத்தும்அறங்கள், சட்டங்கள்இருப்பது அவசியமாகிவிடுகிறதுபொதுவாக வன்முறை தவறு என்றுஅறம்உரத்தாலும் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது வன்முறையைச் செலுத்துவதற்கு இப்படிப்பட்டஅறமும் அற உணர்வும்தடையாக இருந்ததில்லைஉதாரணமாக, கொல்லாமை எனபது அறம் என்று வழங்கிவந்திருக்கிறதுஆனால், சாதிய, சமூகச் சடங்குகளை மீறியவர்கள், அதுவும் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது செலுத்தப்படும்வன்முறைஅறமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறதுகொலை என்பது குற்றம் என்றாலும், அதைச் செய்கிறவரைப் பொறுத்து அது குற்றமா இல்லையா என்பது இந்தியாவில் தீர்மானிக்கப்பட்ட்துசமூகத் தடைகளை மீறியவர்களைக் கொலை செய்வது வன்முறையாகக் கருதப்படவில்லை. எனவே வன்முறை இல்லாத சமூகம் என்று நம் சமூகத்தை வரையறுப்பது எளிதாகிறது. பழங்கால இந்தியாவில் வன்முறை என்ற நூலில் உபிந்தர்சிங் எழுதிய கட்டுரைகளில் இதை விரித்துச் சொல்கிறார்சமூக அறம் என்று சாத்திரங்களில் வரையறுக்கப்பட்ட சாதிக் கட்டுப்பாடுகளை மீறும் போது இது நிகழ்கிறதுசமீபத்திய உதாரணமாகபரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இது காட்சிவடிவம் பெற்றது. சாதி அமைப்பில் சொல்லப்பட்ட அறங்களை மீறினால் கொலை தண்டனையாகிறது. அது வன்முறையாகவோ, தண்டனைக் குரிய குற்றமாகவோ கருதப்படுவதில்லைபெரும்பாலும் இத்தகைய கொலைக்கு ஆளானவர்கள் தெய்வங்களாக மாறிப் போகும் நிலை .சிவசுப்பிரமணியன் எழுதியகொலையில் உதித்த தெய்வங்கள்என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

      முதலில் மனிதர்களை, அதாவது தம்மிலிருந்து வேறுபட்ட மனிதர்களை, கீழானவர்களாகக் காட்டுவதிலிருந்து தொடங்கி, அவர்கள் குலக் குறியீடுகளை உண்மையான உருவங்களாக்கி, அதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறைவன்முறை அல்லஎன்ற வகைப்படுத்தலில் அடக்கிவிடுவது, நமது பண்பாட்டின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறதுஉதாரணங்கள் சிலவற்றை இங்கே காணலாம்:

ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றவுடன், வாலி கேட்கும் கேள்வி கம்ப ராமாயணத்தில் முக்கியமானதுகுரங்கு இனத்தைச் சேர்ந்த எனது பண்பாட்டில் அடுத்தவன் மனைவியைப் பலமுள்ளவன் அபகரித்துக் கொள்வது சரி என்று வாலி வாதிடுகிறான்ராமாயணம் ராமனின் பார்வையில் எழுதப்படுவதால், வாலி தன்னைத் தாழ்த்திக் கொண்டு ராமனை உயர்ந்தவனாகப் பேசுகிறான்அது போலவே, படகோட்டியான குகன் தன்னைத் தாழ்ந்தவனாகவே கருதிக்கொள்ளுகிறான்ராமனும் அக்கருத்தை உள்வாங்கிக் கொண்டே, ’நீயும் எனது தம்பி என்று சொல்லுகிறான். நீயும் என்ற உம்மைத் தொகை குறிப்பிடத்தக்கது ஏனெனில் சமூக நியதிப்படி இருவரும் சமம் அல்லராமன் தன்னைத் தாழ்த்திக் கொண்டும், தான் உயர்ந்திருப்பதால் குகனையும் தன் பெருந்தன்மையால் தனக்குச் சமமாக உயர்த்திக் கொண்டும் விடுகிறான்.  தனக்கு சார்பாக தான் நண்பனாக்கிக் கொள்ள விரும்பும் ஒரு புத்திசாலியான குரங்குக் குலத்தைச் சேர்ந்த அனுமனை ஏற்றுக் கொண்டவன் குரங்குக் குலம் முழுவதையும் ஏற்றுக் கொள்வானா என்பது இன்னொரு கேள்விஅனுமன் சொல்லின் செல்வன்மற்றவர்கள் அப்படி இருப்பார்களா என்பது சந்தேகம்அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்தான் என்றாலும் அறிவாளி ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் (ராமனுக்குத் துணையாக இருந்தாலொழிய) அப்படி ஆக முடியாது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ளலாம்.

இரண்டாவதாக, திருவிளையாடல் திரைப்படத்தில் சிவன், தருமி நக்கீரன் இவர்களிடையே நடைபெறும் விவாதத்தில், காதலன் தன் காதலியின் கூந்தலுக்கு மணம் உண்டு என்று சொல்வதாக தருமியின் பாடலில் இருக்க, நக்கீரர் விஞ்ஞானியைப் போல் அது அப்படியில்லை என்று வாதிடுகிறார்பாடலின் தன்மையைக் கவனித்தால், காதலன், வண்டு என்ற பூச்சியிடம் என் மனைவியின் கூந்தலை விட மணமுள்ள பூவை நீ பார்த்திருக்கிறாயா எனக் கேட்கிறான்இது ஒரு உருவகம், உவமை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். காதலனுக்கு காதலியின் கூந்தல் மணப்பது, காதலின், அதன் ஆழத்தின் உருவகமாகச் சொல்லப்படுகிறதுஆனால் நக்கீரன் அதன் விஞ்ஞான அடிப்படையைக் கேள்வி கேட்பதுபோல் அமைக்கப்பட்ட .பி. நாகராஜன் வசனத்தில் அந்த உருவகம் கொலை செய்யப்பட்டுவிட்டது. இன்னொன்றையும் அவர் கேட்டிருக்கக் கூடும். பூச்சியான வண்டிடம் கவிஞன் எப்படிக் கேள்விகேட்கலாம் என்பதே அதுகதை வேறுமாதிரியிருந்தால் அப்படி நடந்திருக்கும்.

இன்னொரு .பி. நாகராஜன் படத்தில், ஞானப்பழம் குறித்த ஒரு காட்சித் தொடர் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதைப் பார்த்தால், ’அறிவைக் கண்டடையும்முறையைக் கதைமூலம் (காக்னிஷன்) என்பதை உருவகம் எப்படித் தலைகீழாக மாற்றுகிறது என்பது புரியும். நாரதர் (அவர் ஞானி என்பதையும், மற்றவர்களுக்குத் ஞானம் தேவை என்பதையும் உணர்ந்து) தனக்குக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்குத் தருகிறார். சிவன் (தன்னிடம் ஞானம் ஏற்கனவே இருப்பதாகக் கருதிக் கொள்வதாலோ என்னவோ) தன் குழந்தைகளுக்குத் தரவிரும்புகிறார்தரவரிசையும் இதில் முக்கியமானது. ஞானம், கடவுளின் அருள்பெற்ற நாரதரிடமிருந்து தந்தைக்கும், தந்தையான சிவனிடமிருந்து மகன்களுக்கும் வழங்கப்பட வேண்டியதுதானாகப் படித்தோ புரிந்தோ, உலகத்து இயற்கை அமைப்புகள், நிகழ்வுகள் இவற்றைக் கவனித்தோ அல்லது கேள்விகள் கேட்டோ பெறவேண்டியதல்ல என்பதும் உட்கிடை.

அடுத்ததாக முழுப்பழத்தையும் ஒருவருக்கே வழங்கவேண்டும் என்ற நியதியிருப்பதால் சிவனுக்கு ஒரு பிரச்சனை எழுகிறதுஞானப்பழத்தை வழங்குவதற்கு அவர் ஒரு போட்டி வைக்கிறார்இந்த உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கே என்று அறிவிக்கிறார். உலகத்தை அறிந்து கொள்வதன் மூலமே அறிவைப் பெறலாம் என்கிறார். முருகன் தன் வாகனமான மயில்மீதேறிக் கிளம்பிவிடுகிறார். இது விஞ்ஞான அணுகுமுறையின்படி அறிவைப் பெறுவதற்கான ஒரே வழி.  ஆனால் உடல்பெருத்த பிள்ளையார் குறுக்குவழி ஒன்றைக் கண்டுவிடுகிறார்பிள்ளைகளுக்கு ஞானம் வழங்குவது தாய் தந்தை (என்ற மரபின் அடிப்படையில்) அவர்களைச் சுற்றிவந்தால் போதுமானது தானே  என்று தந்தையக் கேட்கிறார்.  என்னைச் சுற்றி வந்தால் அறிவு வராது என்று எந்தத் தந்தையாவது உண்மையை ஒத்துக்கொள்ள முடியுமா? தந்தை வேறு வழியின்றி ஆம் என்று சொல்ல, பிள்ளையார் தனது தாய் தந்தையரைச் சுற்றி வருகிறார். வந்து ஞானப்பழம் தனக்கே வேண்டுமென்று கேட்கிறார்தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் பிள்ளைகள் பலவிஷயங்களைக் கற்றுக் கொள்வது உண்மை. அதைத் தந்தையால் மறுக்க முடிவதில்லை. தயக்கத்துடன் ஞானப்பழத்தை அவருக்கே வழங்கிவிடுகிறார். கதையில் சொல்லப்படுவது என்ன? ஞானம் உலக அனுபவத்தில் வருவதல்ல. தாய் தந்தை சொல்லே ஞானம் தரும்.  ஆனால் உலகத்தில் ஞானிகளாக வந்தவதரித்த அனைவரும், குடும்பத்தினரின் அறிவுப் பிடியிலிருந்து வெளியே வந்த பிறகே ஞானிகளாகின்றனர் என்பது வரலாறு.  இயேசு நாதரும் காந்தியும் சங்கரரும் நேருவும் தங்களுடைய புரிதலின்படி அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சென்றதால் உலகிற்கு வழிகாட்ட முடிந்த்து.

முருகப்பெருமான் ஞானம் பெற்ற கதையும் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் அறிதல் மீதான அடக்குமுறைக்கு ஒத்து ஊதும் நிகழ்வாகவே இருக்கிறதுஅதாவது தாய் தந்தையை மீறி பெறுவது அறிவு கிடையாது, அவர்களை மீறி அறிவைப் பெற முடியாது. .

இது தவிர நமது மரபான கதைகளில், பின்னாளில் ஞானியாகப் போகிற ஒருவருக்கு, கல்விக் கடவுளான கலைமகளோ அல்லது வேறு கடவுளரோ நாக்கில் எழுதிவிடுவதும் நடக்கிறதுஆழ்வார்களுக்கும் இது நிகழ்ந்திருக்கிறது.. திருமூலருக்கு நிகழ்ந்திருக்கிறதுஞானம் இவர்களுக்கு புத்தகங்களைப் படித்ததினாலோ அறிஞர்களிடம் கற்றுக்கொண்ட்தினாலோ வருவதில்லை. (அவர்கள் கல்விகற்றுத்தான் அறிவு பெற்றார்கள் என்பது மறைக்கப்பட்டுவிடுகிறது). 

இது போலவே கிறித்தவக் கதையிலும் ஆதாமும் ஏவாளும் ஆடையின்றித் திரிந்த போது (அறிவில்லாமல் என்பது உட்கிடை) ஏடன் தோட்டத்தில் ஆப்பிள் கனியைப் பார்க்கிறார்கள்அது அறிவுக்கனி. அதை அவர்கள் உண்ண வேண்டும் என்று சாத்தான் ஓத, கடவுளின் குரல் அதைத் தடுக்கிறது. அறிவுக்கு உடந்தையாக இருப்பது சாத்தான் என்பதும், அறிவை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் தேவதூதன் குறியாக இருப்பது முக்கியம்கடவுளை நம்புவதன் மூலமே, அதாவது கடவுளால் கூறப்பட்டதாகக் கருதப்படும் வேதத்தை நம்புவதே அறிவை ஞானத்தைப் பெறுவதற்கு வழி.  அவற்றில் சொல்லப்படும் கருத்துகளைக் கேள்வி கேட்கக் கூடாது. ஆனால் உண்மையில், கடவுளை நம்புவதும் அவர்மீது புனையப்பட்ட மதநம்பிக்கைகளைப் பின்பற்றுவதும், அறிவிற்கு அப்பாற்பட்ட செயலாகவே இருக்கிறது என்பதையும் மறைமுகமாக இக்கதை சொல்கிறதுவேதத்தைக் கேள்வி கேட்பவன் கடவுளுக்கு எதிரானவன் (சாத்தானின் வடிவம்). மதத்தின் நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவன் கடவுளின் தோழன், அவன் அதன்மூலமாகவே உண்மையான ஞானத்தை அடைய முடியும்.

இக்கதையில் ஆதாமும் ஏவாளும் சாத்தானின் கூற்றுக்குச் செவிமடுக்கிறார்கள். அதன்மூலம் அறிவைப் பெற்றுக் கூச்சம் அடைந்து, ஆடையை உடுத்துகிறார்கள். கடவுளைப் பின்பற்றி இருந்தால் ஆடையில்லாமல் அலைந்திருக்கலாம் அல்லவா? ஆனால், அவர் சொல்படி கேட்டிருந்தால் மரணம் என்ற தண்டனை கிறித்தவர்களுக்குக் கிடைத்திருக்காமல் இருந்திருக்கலாம். மற்ற மதத்தினர் மரணம் இல்லாமல் வாழ்ந்திருப்பார்களா?

எனவே சொல்லப்படும் கதைகளின் பின்னணியில் இருக்கும் சாரத்தை அறிவதற்கு முயல்வதே சரி.  இந்தப் புரிதல் இல்லாமையால் தான் புராணங்களில் சொல்லப்படுகின்ற தொன்மங்கள் உண்மை என்று வரலாற்று நிகழ்வுகளாக வடிவமைத்து அரசியல் ஆதாயம் தேடும் பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எம்.எஸ். பாண்டியன் எழுதியது போல, திரைப்படத்தில் நல்லவனாகவும், வள்ளலாகவும், ஏழைபங்காளனாகவும் வருகிற கதையின் தலைவனைப் பற்றிய கலைத் தொன்மம், இங்கே கலைஞனின் தனி ஆளுமையுடன் சேர்ந்து வரலாற்றின் பகுதியாகிவிட்டது.   ராமாயணம் மெகா தொடர் எண்பதுகளின் இறுதியில் ஒளிபரப்பாகி, பெரும் வெற்றி பெற்றதற்கும், அரசியலில் ராமனின் பெயர் பயன்படுத்தப்பட்டு, அவர் வரலாற்று நாயகனாகி, இந்தியாவின் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இன்று அந்த தொன்மத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக, ஒரு பழங்காலத்துக் கட்டிடம் இடிக்கப்பட்டு, அங்கே மாபெரும் கோயில் ஒன்று கட்டப்பட்டுவருகிறது. குடும்ப அறங்களின் உருவகமாகிய ராமனும், ராமாயணமும் வரலாற்றில் மட்டுமல்ல, இன்றைய அரசியலையும் தீர்மானிக்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. கலை கதையாகி, கதை உண்மையாகி, அது வரலாறாக மாறி, இன்று அரசியல் அதிகாரம் பெற பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment