Sunday, December 27, 2020

 

                                                          சாத்தியங்கள்                                      

மரியாவுக்கு,

            எழுதத் தொடங்கும்போதே எனக்குப் பதட்டமாக இருக்கிறது.  எழுத நினைக்கும் போதே இந்தப் பதட்டம் தொடங்கிவிட்டது.  கடிதம் எழுதுகிற வழக்கம் மிகவும் குறைந்துபோன ஒரு காலகட்டத்தில் நான் வாழ்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.  எந்த நிமிடத்திலும் யாருடனும் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிவிடலாம்.  ஆனால் அப்படியெல்லாம் பேசிவிட முடியாத விஷயங்கள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றன. 

            அறுபத்தி ஐந்து வயதில் இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டிய அளவு நான் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்வாய் என நம்புகிறேன்.  வேறு வழியில்லை.  இது உன் கையில் கிடைத்ததும் உனக்குக் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.  நீ கோபப்படலாம். நான் ஒரு பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடலாம். இது ஒரு தகாத செயல், ஏன் குற்றம் என்று கூட நீ கருதலாம்.  அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் முறையிடலாம் அல்லது போலீஸ் உட்பட யாரிடமாவது இவருக்குத் தண்டனை வழங்குங்கள் என்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.  அல்லது படித்துவிட்டுக் கிழித்துப் போட்டு விடலாம்.  அது சுலபமானது.   ஆனால் இவற்றையெல்லாம் விட இன்னொன்றும் நடக்கலாம். இதைப் பொறுமையுடன் படித்து அதில் சொல்லப்பட்டதை நீ கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  அந்த நப்பாசைதான் என்னை இந்தக் கடிதத்தை எழுதவைக்கிறது.  கருத்தில் கொண்டபின்பு அவற்றை நிராகரிக்கலாம்.  அதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது.  என் பேராசை என்று சொன்னால் அது இதுதான். இதுவெல்லாம் நடக்காமல் நான் சொல்ல வந்ததை நீ ஏற்றுக் கொள்ளலாம்.  அது வெற்றி பெறுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தாலும் அதற்காகவே இதை எழுதுகிறேன். 

            முதலில் உனக்கு ஏற்படக்கூடிய தயக்கம் இதுவாக இருக்கலாம்.  இந்த வயதில் இது என்ன குழப்பம்?  இது இந்த வயதில் ஏற்பட்ட குழப்பம் இல்லை என்றே நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.  நமது இளம்பருவத்தில், அதுவும் முதிர் இளம் பருவத்தில், அதாவது இருபத்திஐந்து வயதை ஒட்டிய பருவத்தில் நாம் அடைந்த ஒருவரை ஒருவர் பார்ப்பதில் அல்லது பேசுவதில் அடைந்த பரவச நிலையில், அது காதல் என்று தெளிவாகத் தெரியாத நிலையில் ஏற்பட்ட குழப்பத்தில் தான் இதன் தொடக்கம் இருக்கிறது.  தயங்கித் தயங்கி நெருங்கிவந்து, பிறகு சொல்ல முடியாமல் விலகிப் போன தவறுகளின் விளைவு இன்னும் என் நெஞ்சில் தொடர்ந்து கொண்டிருப்பதை நான் உன்னைத் தவிர யாரிடம் தெரிவிக்க முடியும். 

            இதைச் சொல்வதற்காக இத்தனை காலம் ஏன் காத்திருந்தேன் என்று கேட்பாய்.  அதற்கும் உனக்கு விடை தெரிந்தே இருக்கும் என்றே நினைக்கிறேன். பல கேள்விகளுக்கு நமக்கு விடைகள் தெரிந்திருந்தாலும், ஓர் கட்டத்தில் அவற்றைக் கேட்டே தீரவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறதல்லவா? அதுபோன்றதுதான் உன் கேள்வியும். இதற்கு முதல் காரணம், நீ தான்.  நான் அன்று கண்ட உருவமும் உள்ளமுமாகவே நீ இருப்பதுதான்.  உன் முடி கொஞ்சம் வெளுத்திருப்பதும், நடை தளர்ந்திருப்பதும், முகத்தில் சில சுருக்கங்கள் இருப்பதும் ஒரு பொருட்டே அல்ல.  அவற்றின் உள்ளுறைந்திருக்கும் நீ எதுவோ அதையே நான் விரும்பினேன்.  வெள்ளிக் கம்பிகளாய் இருக்கும் தலைமுடிக்குள் தெரிந்தும் தெரியாமலும் ஒளிந்துகொண்டிருக்கும் பல கருத்த முடிகளைப் போலவே என் நினைவுகள், அவை நினைவுகளோ கனவுகளோ இல்லையென்றாலும் என்மீது நீ வைத்திருந்த எதுவோ, அதைக் காதலென்று சொன்னாலும் சரி அல்லது வேறு ஏதோ என்று சொன்னாலும் சரி, அந்த உணர்வின் மீது நம்பிக்கை வைத்தே இதை எழுதுகிறேன்.

            இதைக் வயதான ஒருவனின் வயதுக்கு மீறிய காமம் என்று மற்றவர்கள் சொல்லலாம்.  அப்படி நீ சொல்லமாட்டாய் என்றே நினைக்கிறேன்.  என் மனைவி இறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.  என் மகன் அமெரிக்காவிலும், மகள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள்.  எப்போதாவது வந்து ஒருவாரமோ இரண்டு வாரமோ இருந்து தந்தைக்கு ஆற்றும் நன்றியை செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.  இந்த நிலையில் தனிமையில் வாடும் எனக்கு உன் நினைவு வருவதை யார் தடுக்க முடியும்.  நான் விரும்புகிறேனோ இல்லையோ உன் நினைவு வந்துவிடுகிறது.  முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அதனால்தான்.

            முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக நான் உன்னை நினைக்கவே இல்லை என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும்.  அவ்வப்போது உன் நினைவுகள் அலைக்கழிக்க, நான் தவித்துப் போயிருக்கிறேன்.  சமூகம் என்ற ஒன்று இளவயதில் நம்மை ஒன்று சேர விடவில்லை என்பதை நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சு கொதித்தது.  ஆனால் பொங்கிவழியும் பால்போல அந்தக் கோபம், நிகழ்காலத்தின் தீயில் பொங்கி வழிந்து கருகிவிட்டன.

            நீ கிறித்தவ மதம் என்றும் நான் இந்துவென்றும் அது ஏதோ இணைக்கவே முடியாத தடை, பாவம், மரபு, சமூக நடைமுறை என்றெல்லாம் நாமே கற்பித்துக் கொண்ட எண்ணங்களால் ஒருவரிடம் ஒருவர் சொல்லமுடியாத பெருங்காதலுடன் நாம் பிரிந்தோம் என்றே நான் நினைக்கிறேன். இத்தனை வருட வாழ்வில் இதுவெல்லாம் காதெலென்னும் உண்மையின் முன் உதிர்ந்துவிடும் காய்ந்த இலைகள் என்று தெரிந்துகொண்டிருக்கிறேன்.   நீ இதுவரை திருமணம் முடித்துக் கொள்ளாமல் இருப்பது என்னை இன்னும் துயரத்தில் ஆழ்த்துகிறது.  அதில் என் சுயநலம் உண்டு.  நேற்றுவரை கனவாக இருந்த ஒன்று இன்று நிறைவேறும் என்று தோன்றும் போது ஏற்படும் மகிழ்ச்சிதான் அது.  சுயநலம் மட்டுமே அதற்குக் காரணம் அன்று. எத்தனையோ வருடங்களாகத் துண்டிக்கப்பட்ட மின்சாரத் தொடர்பு இன்று மீண்டும் ஏற்படும்போது, மின்சாராம் பாய்வதை எல்லோரும் உணரமுடியும்.  அது ஜிவ்வென்று மனதிலும் உணர்விலும் பாய்வதை என்னால் நிறுத்த முடியவில்லை.

            இறந்து போய்விட்ட உனது கணவனின் மீது நீ வைத்திருக்கும் பற்று எனக்குத் தெரியும்.  அது நீ அவன் மீது கொண்டிருக்கும் கடமை உணர்வை எந்த நேரமும் பறைசாற்றும்.  அவருடைய ஆன்மா உனக்கு என்றும் நன்றி சொல்லும். நீ அவருக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் செய்த சேவையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.  நீ, நான் இப்போது வைக்கிற கோரிக்கையை பரிசீலிக்கிற நேரத்தில் இவை யாவும்  உன் மனக்கண்ணில் ஊர்வலம் போகும்.

            நீ தனிமையில் ஏதோ ஒரு முதியவர்களின் காப்பகத்தை மூன்று வேளைச் சோறும், கொஞ்சம் பக்தியும் இருந்தால் போதும் என்று வாழப் பிறந்தவள் அல்ல. உல்லாசமாக ஒரு துணைவனுடன் இருக்கின்ற இன்பத்தை எந்தத் தத்துவஞானியும், எந்த சாமியாரும் மறுத்துவிட முடியாது.  அவர்கள் உண்மையான துறவிகளாக இருப்பார்களே ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  காதலுக்குக் காமம் துணைசெய்யும், என்பது இந்த வயதில் உடலுறவில் ஈடுபட முடியாது என்ற நிலை வந்த பிறகே ஒவ்வொருவருக்கும் புரியும்.  உடலும் உடலும் உரசிக் உறவு கொள்ளும் போது ஏற்படும் போதே காமம் என்று இளவயதில் நினைதிருந்தேன். ஆனால், தனிமையில் மூன்றாண்டுகள் தவித்த போதே எனக்குப் புரிந்தது.  என்னுடன் படுத்து, கைமேல் கைபோட்டு, அல்லது கைகோர்த்துக் கொண்டு, உடலுறவு அற்று, உடலோடு உடல் உரச ஒரு துணையாக இருப்பது எவ்வளவு ஆறுதலான உறக்கத்தைத் தரும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.  ஒரு தாயின் அரவணைப்பில் உறங்குவதுபோல நானும், ஒரு தந்தையின் அரவணைப்பில் உறங்குவது போல நீயும் இருப்பதைக் கனவு காண்கிறேன்.

            சிறு வயதில் நாம் பேசிக் கொள்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தன.     அவற்றில் நமது காதல் ஒரு பொருளாக இருந்ததில்லை.  அது, நம்மிடம் எல்லா நேரத்திலும் மறைந்திருந்த பேசாப் பொருளாகவே நின்று விட்டது.  நாடகம், சினிமா, இலக்கியம், அரசியல் என்று பல விஷயங்களில் நான் பகிர்ந்துகொண்ட கனவுகள், சாத்தியங்கள் எதுவும் நடக்காமல் போனாலும், இன்றும் எனக்கு அவற்றின் மீதான கவர்ச்சி குறையவில்லை. உனக்கும் அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதும் நாம் அவற்றைப் பற்றிப் பேசும் போது அல்லது அவற்றின் சாத்தியங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவது பற்றிப் பேசும் போது, காதலுடன் காமம் ஒரு பேசாப்பொருளாக நம்மிடையே ஒளிந்துகொண்டிருக்கும். ஆனால் அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.  நாம் ஒருவருக்கருகில் ஒருவர் இருப்பதே போதுமானது. நமது உடல்கள் அழிந்துகொண்டிருக்கும் இந்த முதுமையில், இது சாத்தியமானது என்றே தோன்றுகிறது.  ‘அழிந்து கொண்டிருக்கும்’ உடல்கள் அழியாத கனவுகளை இளமையில் சுமந்து கொண்டிருக்கும் போதே இது உண்மையாகத்தான் இருந்தது.  ஆனால் அவை நமக்கு, குறைந்தபட்சம் எனக்கு, புரியவில்லை.  பெற்றோரின், உலகத்தின் தடைகள், ஒழுக்க, சாதி, மத வரையறைகள் ஏதோ நிரந்தரமானவை போலத்தெரிந்தன.  மரணம் என்னும் பேருண்மையின் அருகில் நாம் நெருங்க நெருங்க அவையெல்லாம் பொசுங்கிப் போவதை என்னால் காண முடிகிறது. உன்னாலும் காண முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

            இதைப்பற்றியெல்லாம் யோசிக்க ஏதுவான காரணங்கள் போதுமானதாக இருக்கின்றன.  ஆனால் இவையெல்லாம் இல்லாத போது உன் மீது நான் கொண்ட நேசம் நிஜமானது.  அது சொல்லப்படாமலே போயிருக்கும் வாய்ப்பே அதிகம் இருந்தது.  ஆனால் இன்று ஒரு வாய்ப்பு ஏற்படும் போது சொல்லிவிட வேண்டும் என்றே முடிவு செய்தேன்.  நமக்கு வாழும் காலம் அதிகம் இல்லை.  ஆனால் அன்பு கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வதற்கு மிகக் குறைந்த காலம் கூடப் போதுமானது.  ஏனெனில் மனித வாழ்வின் உன்னதமான நோக்கம், நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதுதானே!  உனது உள்ளம் எனக்குத் தெரியும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

            உனது பதில் எப்படியானதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது. எனது பேராசையை இப்போது வெளிப்படுத்தாவிட்டால் அது காய்ந்து கருகிவிடும்.  ஒரு மலர் பூக்கும் நேரத்திற்காகக் காத்திருக்கும் தோட்டக்காரன், அது வாடுவதை அந்த நேரத்தில் ஏன் நினைக்க வேண்டும்?

                                                                                                            தனிமையில் வாடும்,

                                                                                                                        பஷீர்

Wednesday, November 25, 2020

 

மணம்

               என் மனைவியின் உடலைக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைப்பதற்கு முன்னால், அதை முத்தமிட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன்.  செய்ய முடியுமா என்று தெரியவில்லை.  குளிரூட்டப் பயன்படும் கண்ணாடிப் பெட்டி அப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்த வேனிலிருந்து வெள்ளை உடையணிந்தவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்து இறக்கிவைத்தார்கள்.  ஏற்கனவே வீடெங்கும் மனிதர்கள் தென்படத்தொடங்கியிருந்தார்கள். இனி ஒருபோதும் என் மனைவியை முத்தமிட முடியாது, என்ற வேதனை என்னுள் இறங்கியது. இதுவரையும், அவளுக்கு  என் முத்தத்தைப் பெற விருப்பம் இருந்ததில்லை.  ஆனால் அந்த நாள் அவள் இறப்பதற்குள் வந்துவிடும் என்று கனவு காணும் வாய்ப்பு இன்றுடன் முடிந்துவிட்டது.  இடாத முத்தத்தை இப்போது இடுவது அவளுடைய ஆசைக்கு எதிரானது.  ஆனால் எனக்குள்ள ஆசையை இன்றே நிறைவேற்றிவிட வேண்டும்.  அந்த என் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இருக்கிற கடைசித் தருணம் இதுதான்.  அதற்கான நேரம் இன்று கடந்துவிடும்.

               அவளுடைய எதிர்ப்புக்கு இனி ஒரு மதிப்பு இல்லை. என் விருப்பமும், அவள் எதிர்ப்பைத் தெரிவிக்க இயலாத நிலையும். அப்படி எதிர்ப்புத் தெரிவித்திருந்ததையும் நான் பொருட்படுத்தவும் தேவையில்லை. ஏனேனில் அது அவளுக்குத் தெரியப்போவதில்லை. எனவே கடைசி முறையாக அல்லது முதல் முறையாக, அவள் உடலைக் கண்ணாடிப் பேழையுள்ளே வைப்பதற்கு முன்னால், என் மென்மையான, தடித்த, குறுகிய மீசை வளர்ந்து குத்தும்  கிழட்டு உதடுகளால், என் மனைவியின் உணர்வற்ற, உதடுகளில் ஒரு முத்தமிட அருகில் சென்றேன்.  அதற்குள் வேறு எதையோ யாரோ கேட்டார்கள்.  என் கவனம் சிதறிவிட்டது.  ஆஸ்பத்திரியிலிருந்து வந்த உடலைக் குளிப்பாட்ட வேண்டாம் என்று யார் யாரோ பேசி முடிவெடுத்திருந்தார்கள்.  நான் இங்கே இருக்கிறேன் என்பதை நானேதான் எனக்கே நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த மனிதர்களைப் பொறுத்தவரை நான் அவள் கணவன். இந்த சமயத்தில் அதற்குமேல் எதுவும் இல்லை. எனக்கும் அவளுக்கும் மட்டுமேயான தனியிடம் ஒன்று என்றுமே இருந்ததில்லை.  இருவரும் பேசிக்கொள்ளும் முறையும், வாதங்களும், நினைவுகளும், ஆர்வங்களும் ஏன் எதுவுமே பொருந்தியிருக்கவில்லை.  ஆனால் நாற்பது ஆண்டுகள் சேர்ந்தே வாழ்ந்துவிட்டோம்.

               நான் என் மனைவிக்குக் கடைசி முத்தம் இட்டு விடைபற்றுக் கொள்ள விரும்புவதை மற்றவர்கள் யாரும் புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு அது ஒரு சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால் அதை அனைவருக்கும் முன்னால் செய்வதோ அல்லது அறிவிப்பதோ என்னால் முடியாது.  அப்படிக் கொடுத்திருந்தால், மேற்கத்திய பண்பாட்டின் பாதிப்பில் வந்த முத்தம் என்று பலர் நினைத்திருக்கலாம்.  ஆனால் அவர்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் என்னிடம் உண்டு.  அதில் ஒன்று, நான் அது வரை என் மனைவிக்கு முத்தம் கொடுத்ததில்லை. முத்தம் கொடுக்காமலேயே கணவனும் மனைவியுமாக, பிள்ளைகளும் பெற்றுக் கொண்டோம்.  அதற்கெல்லாம் முத்தம் அவசியமில்லை என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டோம். என்னைப் பொறுத்தவரை என்னுடைய கடைசி முத்தம் என்ற ஒன்று இல்லாமலேயே என் மனவியின் உடல் சவப்பெட்டிக்குள் போய் முடங்கிவிட்டது.  அது தான் என் முதல் முத்தமாகவும் இருந்திருந்திருக்கக் கூடும்.  எனது துரதிருஷ்டம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவள் பார்வையில் அது அதிருஷ்டமாகிவிட்டது. அவள் என் முத்தத்திலிருந்து தப்பியே விட்டாள்.

               என் மனைவிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய வேறுபாடு திருமணம் முடிந்த அன்றே எனக்குத் தெரிந்து விட்டது. கருத்து ஒற்றுமை, கருத்து வேறுபாடுகளைப் பார்த்தா திருமணம் நடக்கிறது? மாடுகளுக்குப் பல்லையும் வேறு பலவற்றையும் பார்ப்பது போலப் பெண்ணையும் ஆணையும் பார்க்கிறார்கள். வெளிப்படையாகத் தெரிகிற குணங்களைப் பார்க்கத்தான் கற்றிருக்கிறோம்.  உள்ளிருப்பதை அறியவோ அதற்கு மதிப்புத்தரவோ இதுவரை நமது பண்பாடு நமக்குச் சொல்லித்தரவில்லையே. இப்படி அதையும் இதையும் பற்றி யோசித்து நான் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக அவள் கடைசிவரை சொல்லிக் கொண்டிருந்தாள்.  அது உண்மைதான் போலும்.

               இப்படி நான் யோசித்துக் கொண்டிருப்பதற்குள் உடலை கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துவிட்டார்கள். பக்கத்து வீட்டுப் பெரியவர் பவர் பிளக்கில் சுவிட்சையும் ஆன் செய்துவிட்டார். இனி நான் அவளைத் தொடமுடியாது. பிறகு என்ன ஏதேதோ நடந்து கொண்டே இருந்தது.  நானும் இருந்தேன். நடுநடுவில் அவள் உபயோகிக்கும் ஒரு சென்டின் மணம் அடித்துக் கொண்டிருந்தது. எனக்குச் சென்ட் வாசனை அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

 

The young Teacher

 

It was the sports day in the school. There were signs of celebrations all around. The school had a big play ground, a 400 metre track around a football playground. for running races and athletic events. There were colourful banners at the entrance to the school,  in the shamiyana put up for the purpose and in some other places. It was considered to be a famous school, which had many facilities that I could not even dream of. There were small crowds of boys, girls and men and women of varying ages gathered around the arenas where particular sports events were being held.

There were parents of students from nursery to higher secondary classes, eagerly waiting for, or watching the events in which their children are participating. A loud speaker was blaring at certain intervals, listing the the names of winners of specific events, and calling them to the podium erected for medal ceremonies. The management, School teachers and parents were making it a memorable day.

       That day was remarkable for me in a special way. A cynic like me would always point out the mistakes, maladministration, in any ceremony. I was very sure of the ways in which Indians do injustice to others. The individual who taught me a lesson was not a teacher or principal or a man of such or other status, but a small 7 year old boy. It was around 3.00 pm. Most of the events had been completed.

          My son Rajesh, aged 7 was running a 'jute sack race' which might have been an invention of Indian school system. Small boys insert themselves into a bag of jute. The are supposed To run catching the top end of the jute bag. It is a fun to watch since it is difficult to even walk with that kind of arrangement. The distance to be covered by the contestants was 50 metres.

My wife walked my son to the starting point. I positioned myself near the finishing line. 

         The race started with the whistle. At least 10 boys were running with their legs inside the sack jute sack. As the boys struggled in their efforts to run faster than others, I noticed my son Rajesh was forging ahead. I presumed that his mother would have coached and trained him in this also, like in other academic subjects (They start using big words in class 2).

       By the time he reached the finishing line and crossed the tape, he was ahead and he was the first. I lifted him and kissed him on his cheek. By the time my wife also reached and hugged him tightly. It was her victory too. After that We three watched other events. 

       Then came the moment we were waiting for. Rajesh my son was called for the victory stand for receiving the medal. He ran to the stand and took the position on the stand. I was at a distance, for we had been already advised not to venture into sporting arena as other events were on.

       I noticed from where I was standing that there was a minor scuffle at the victory podium.  One more boy was being lifted and being placed adjacent my son on the victors stand and the boy alighted from the stand shouting at those who were trying to make him stand along with my son in the place meant for the boy who came first. This happened three times and the medal giving ceremony was delayed. I and my wife started moving towards. The boy was struggling to free himself from those who looked like his parents or grandparents. My wife told me that they were the chairman of the school and his wife. They were the boy's grandparents. I noticed the badges the had on their chests.

       When I went near, I heard the small boy shouting at his grand parents 'No, this is not right thing to do. He came first in the race and he deserved it better than me. I won't deprive him of the honour'. His english seemed foreign. Ultimately he won his argument and my son stood alone in the stand meant for winner. We were immensely happy.

        I later came to know that boy was Newin and he was the grand son of the chairman of the school. He was studying in Chicago, USA. He won my heart and taught many things to those who were ready to learn.


 

I won't go to that paradise

 

Trishanku dropped almost dead at his feet. Viswamitra was shocked. The man, no a noble man, and a king, that he sent to the paradise on the strength of the boon he was granted after many years of his prayers and devotion to Lord Shiva, has dropped at his feet like an exile thrown out of his country.

Viswamitra's eyes turned red with anger.

He caught Trishanku by the Royal Dress he wore and lifted him and made him stand like a man. 'You are a coward, Don't you have the strength and courage to stand and fight Indra and his thugs in their paradise? You fell at my feet like a boneless worm? You had enough of my blessings to reach paradise. Why did not you enter the paradise?'

Trishanku replied with humility 'Sir, they shoved me away from paradise saying that I am not qualified to enter paradise.  'Only the sage Vashist, not Viswamitra had the authority to send people to paradise. The whole clan of Indra and others born after conducting yagna in accordance with Vedas are eligible to live in paradise' they said.

Viswamitra knew his strength and power. He started creating a new world, exactly opposite of what was the then existing world. There existed only cows, the ox, the beast of burden, then. He created Buffalo, with blackest of skin. He wanted to establish a second universe.  He started his creations.

The clan of Indra came to know of Viswamitra's efforts. The sent two of the most beautiful women dancers to distract viswamitra from creating another Universe which would be beyond their jurisdiction.

Though it angered him in the beginning, Viswamitra could not resist the desire for love that he had suppressed within the depths of his being. The conspiracy of Indra and his men succeeded. Vashist called Viswamitra a Brahmarishi, the rishi of Brahmas, the clan of Indra. Viswamitra was very happy to be with them.  He forgot Trishanku and his subjects, whose rights of entry into paradise he fought for, which enabled him to endear vashist and become his equal.

Trishanku tried in vain to meet Viswamitra. He wanted to ask him 'Did you support me only to use me for getting a place near Vashist?'

But in order to make Trishanku happy and to show that he has not betrayed his cause, Vishwamitra came to his palace and said that 'I still support you to reach Paradise of power. Whereas I was fighting earlier sitting near you, now I am fighting for you sitting among the Indra Clan. This is necessary for your future welfare. Otherwise they would not hear you or redress your grievance.'

But Trishanku was not convinced. 'Sir, you had good intentions and you worked hard for uplifting me and my people. You wanted to create a new universe where everyone would be equal. But you fell for the charm of their paradise and wanted to gain status and power quickly. You forgot your goal and fell into their trap and followed their rules to become great sage. This is where I disagree with you. I was a disciple of a fighter who wanted to create a new world, not a man who reached paradise and forgot his disciple. Now, not only I will create a new world by following your earlier path. I will also create a new paradise where the likes of Indra and his clan and his beauties would not spoil others.  My paradise would be a place where everyone would be welcome. You go to your paradise and I will work hard for creating another heavan. But there would be one difference.  There would not be people who claim higher status by birth. There would be people who have worked hard to reach heavan. It would be my heavan, not yours.'

Viswamitra wanted to narrate his past work that inspired Trishanku. But Trishanku had no more time for him.  He was looking to the future.

Trishanku, was never happy with the human world which was hell for him and his people. He was thrown out of paradise of those noble men who conferred upon

themselves of high status. He won't enter that. He continues his efforts to create a new world order that will do justice to all. He lives in his dream and lives in the hearts of men who have the same dream.

Innocent Tears.

 I saw my cousin sister Nirmala for the first time in her marriage. She was my uncle's daughter. I was hardly ten years old. I remembered this occasion as my father acted as bride's father and fulfilled his duty of giving her in marriage. It was a surprise for me.  Till then I was not aware that I had an uncle, my father's elder brother. I did not see my cousin sister for many years after her marriage. Once when I was coming from Delhi, she waited for me at the station. I could not guess how she got to know of my arrival. After asking questions about my health, with tears flowing in her eyes, she asked the same question, that till then no one had given answer to. It was like a mountain of frozen tears melting. "Why my father had left my mother and me?". I saw the weight of 50 years of her sadness in her voice and in her face. She continued 'Brother,   how is that no one knows where he is? ' I was also moved to tears.  Her voice trembled and her lips quivered with the emotions welling up in her throat.

This was the question I had been asking as often as I thought my father's elder brother, who I have never seen. He, unlike my father had a respectable job in commercial tax office and my father told me that he was a straight forward man, honest and fearless. I developed a liking for that image, for I never saw even his photograph in the house. Whenever I raised the subject among my relations, there was only silence for an answer.

              Many years ago, I heard from my father that his brother left his wife and his only child and disappeared without trace on a moonless rainy.

              Whenever I asked a question or two, about my uncle, my father seemed to evade giving answers and chose only to say that he was not aware of his whereabouts.  It appeared to me from his expression that he was suppressing something but he was not worried. His brother must be alive I presumed.

              My mother revealed discreetly that my father had once met his brother in Cuddlore. Curiosity got the better of me once when I spoke to my father about this meeting.  He said 'I met him at the station. We spoke for a few minutes and he advised me not to come and meet him."

              I asked my father "You met him after 20 years and returned without bringing him back?". He said 'Yes, I called him to come with me, but he refused. He also told me not to come again. This meeting was over in few minutes". I could not reconcile with this 'story' of a short meeting between long lost brothers, if ever there was one. The question 'Why' remained. Sometimes I thought that my father had no love lost for his more successful brother. Some times I felt that my father was hiding something from me. I did not press for more information. He would have lied.

              This was lingering in my mind for many years.  I could not understand that how could my father did not care to bring his brother.  I hated my father for being a heartless man. What could be the one thing that could stop a man from returning to his wife, child, brothers and sisters. I was not mature enough to guess an answer.

               I met my cousin sister again after 10 years. She seemed to be calm and composed. She was now 60 years. I had lunch in her house. The pain in her eyes, visible during my earlier meetings seemed to have lessened. She seemed to be weary and distant.

 

                Later, she told me that she had found out that her father deserted her mother and married someone else. She also told me that her father was in love with one of his colleagues and ran away with her.

                My sister's mother either did not know or knew, but not revealed the truth that would hurt them both. My cousin sister also told me that if she knew this earlier, she would not have grieved for over 50 years.  She stopped worrying about her father.  Someone very casually had revealed, after hearing her long wailing that had become so unbearable to him, of her father's betrayal. Why she should have cried and shed tears for a such a man? It was a closure.

               But many questions remained with me from that day. Why none of those who knew the events, did not tell this innocent girl? I could only make a guess. It could be about my cousin sister's birth. Like darkness beneath the light. Only she did not know.

              I did not share my doubts with her. I did not want to meet her again for the fear that I would give any hint. It is better to hate a cruel father, than to know he was not her father.

Monday, October 26, 2020

 

                                                            Hurt Sentiments

               It has now become fashionable to speak about ‘hurting others’ sentiments’.    Not hurting others sentiments and beliefs is touted as civility.  This is true to some extent in private or family life as our spouses, and our immediate families’ sentiments have to be respected even if we consider these sentiments to be irrational.  For example, an atheist husband may accompany his wife to a temple just for giving her company or an atheist woman may go to a temple along with a group of woman just for the sake of friendship.  But this civility cannot be extended to social problems, political or philosophical discussions where the individuals sentiments take a back seat and rationality, logic, facts, need for the society to change for the better, greater common good, come to the forefront as more relevant.  Yes, sentiments can be one of the inputs but when these sentiments affect the flow of logical reasoning or known facts, they have to be sidelined for the sake of greater common good i.e. either understanding of the scientific facts or social realities or progress etc.  Thus while sentiments and beliefs have a certain value, they cannot by themselves be treated as sacred and self-evident.

               In a hierarchical society, in which caste, religion, region, language and such other social phenomena determine a man’s or a woman’s position, hurting others’ sentiments becomes unavoidable or even necessary.  If some change is sought to be made in the customs which denigrate someone and therefore hurt’s the sentiments of a certain group of people, those enforcing these customs may also use this excuse of ‘hurt sentiments’.  They may want to continue the tradition which adversely affects the self-respect of others.  Progress is at one stage, a negation of the past (and the sentiments attached to it) and the next logical step which is yet to be tested in practice. Hurt sentiments are sometimes better than the hurt ‘bodies’.  For example, in the name of hurt sentiments, no one can be permitted to inflict violence on others.  Hurt sentiments are a problem of minds, only treatment of minds can cure it.  It cannot be cured by violating the rights of others to have different opinions.   

                  We may think of the shock and surprise when the first scientist announced to the world that earth is a globe, when everyone was thinking it to be a flat surface.  There is a scene in Berthold Brecht’s famous play ‘Galileo’, in which Galileo is called upon to explain his view that Earth is revolving around the Sun.  Catholic religion had till then held the view that Sun and Moon are going around earth.  In their version, till then considered absolute and unassailable truth, God created earth as the centre of universe and that Pope was the only representative of God on earth. By extension, Pope also was the head of Universe and everything under God. Church stubbornly refused to accept the fact that earth goes around the Sun. When Galileo tries to reason with the Pope, he gets annoyed and trembles in anger.  This is because Galileo is seen challenging the leader of the Christian World on the gospel truths that were next only to God. The whole edifice of God, the Pope as the only representative of a Christian God and the kings and emperors of Christian nations, subject to the authority of Pope for this reason alone and the holy right of Pope’s interventions in Religious and political matters, all would crash by one simple scientific fact.   Surely, this fact must have hurt the sentiments of millions of people who were following Christianity, leave alone the Pope and his army of fathers, brothers and sisters.  In real life, Galileo was imprisoned and tortured for finding the truth and telling it to the world.  Only recently, Catholic Church apologized, rather regretted the treatment meted out to Galileo, after more than 400 years of hurt sentiments. It could not set the record straight for such a long time. Such are the wise men who head religious denominations.  This is one of the example of how public sentiments and believe creates impediments in human progress.

               Similarly, when Darwin’s study led to the truth of Evolution, he was hesitant to openly state that God did not create the world and things and lives evolved themselves.  Scientific evidence suggested that animals existed for millions and millions of years.  Church, on the basis of biblical statements could not think beyond thousands of years, because they could not go beyond the holy book.  Again sentiments were hurt and despite overwhelming evidence, still some god-fearing people refer to Darwin’s theory as unproven and stick to the sentimental nonsense of reducing the age of universe to thousands of years, instead of billions of years. With the proof of evolution goes the story of God creating Man as the supreme being in the universe.  The evidence on earth suggests that ‘man is an insignificant animal’ that had become dominant by the process of evolution and not by anything else, particularly without the agency of any supernatural ‘being’.   Millions of people may still feel ‘hurt’ when these facts are brought before them. But, human progress cannot stop.  Only those with hurt sentiments have to change or die with their illusion and the world moves on.  

               This kind of hurt sentiments further damages the physical phenomena on earth.  Believing that God had created Man and he created everything else for enjoyment of Man, humankind utilizes and exploits all the resources available on earth more than the speed of their regeneration.  Man has by overexploiting the natural resources, has deprived all other animals and plants what is their share. Slowly and without realizing his faults that aggravated environmental problems and would cause immense damage to his own survival, he may still believe that everything is created for human consumption. 

               When increasing consumption is designated as progress, truth of which many people believe, and goods are produced without caring for environment for the goal of more production, more goods, more facilities and more profits, and many more becoming rich and becoming rich becomes a religion, all kinds of environmental, social, economic and political destruction ensues. These are also sentiments, that are created by human beings, with their research, logic and facts.  But however pure may be the methods of social sciences, the conclusions they arrive at, cannot be equated with the facts of pure sciences. We may also remember that even in pure sciences, some theories discovered earlier, turn out to be wrong later.  Thus social sciences and economics however pure their data and methods are, may go wrong.  Therefore, the theories of money, economics et el are valid only till they succeed and have to be discarded once they fail. Those who have proposed those concepts and those who believed in those concepts will be hurt once their findings go wrong.  But their hurt is actually good for the society.

                 In our families we do hurt our fathers, mothers, brothers, spouses, Sons and Daughters too many times to take these instances very seriously.  For example, some fathers want their songs to study a particular subject or to take up a particular profession and want their daughters to be a devout house wife of an unworthy spouse. A son wants to settle in a foreign country, saying that he has no future in a dirty, unprofessional caste ridden society.  He might be looked upon as ultra-modern and not a worthy son of an orthodox father. Additional danger is of contracting a marriage with a woman of his choice and not of his father.  Definitely it would hurt a father, who has, for his whole life struggled to come up in life spite of heavy odds and feels why his son prefers to run away from the battle field of life in his motherland. But however hard and dry their relationships may be they do not indulge in violence to vent their hurt sentiments.  This is a family. What is a nation but a family of communities? Are the often quoted pious words ‘Vasudeva Kudumbakam’ only for speeches and television shows? If we believe in that we prove it by following it, not by violating its spirit.

               In the course of politics, in recent times, we are too often ready to be offended or pretend to be offended to gain political following.  If one holy scripture is attacked, on the grounds that it contains many passages that go against the modern understanding of human rights, many people’s feelings get hurt. They say it is their holy book and no one can speak ill of it. It would not come to the discussion table that even if the holy book contains many prescriptions that go against the human values practiced in the current age.

On the other hand, many others’ feelings may be hurt if they read those so called holy books.  IF it prescribed unequal treatment of people according the customs that were prevalent in the period in which it was written, it could be definitely criticized by people who are denigrated by it, as not only their feelings but also their social status in the present is affected by those prescriptions.   In today’s India, it is a fact that no one is treated as unequal only because of one holy scripture.  One text cannot be blamed for all the ills in this world.  There are hundred reasons for it.  The text in question reinforces the prejudices that exist now. That is the reason any scripture becomes controversial.

               A man who quoted the offending text may be ostracized for insulting a particular group or particular gender.  Instead, controversial passages of the text should have been critically assessed and disowned and treated as irrelevant in today’s society by all those who stand for women’s equal rights. This is applicable to all the books that have ever been written.   

               Hurt feelings and justifying violence in the name of hurt feelings is a things of past in a world that examines everything with knowledge and reasoning.  Those who are upholding any scripture simply because it was believed to have been written thousands of years ago, would be laughed at, like the Pope who punished Galileo and the Church which regretted it after 400 years.  What do we do, if you are hurt by anything done by anyone in the family?  Get on with it.  Criticize it when necessary, but live with it.  This is applicable in respect of a book or a view that is expressed in public space.  Pretend as if you are offended.  But keep you mind away and clear from it, like politicians do.  Their goal is power, and definitely not saving any religion.  God can save himself for he has been existing for thousands of years.  Our duty is to save human beings.   

Saturday, August 08, 2020

 

                                                            பொம்மை வாழ்க்கை

 

               அவனுக்கு இது வேண்டும்.  ’எப்படியாவது எழுத்தாளனாகிவிட வேண்டும் என்ற நப்பாசையில், கதையை எழுதி அவனிடம் போய்க்காட்டினேனே.  மட மூட ஜென்மம்.  கதை, இலக்கிய வாசனையே கிடையாது. கழுதை’..என்னென்னமோ தீட்டினாலும் அவன் கோபம் தீரவில்லை.  வாழ்க்கையில ஏதாவது ஒரு புத்தகம் படித்திருப்பானா? புத்தகத்தை விடு ஒரு உருப்படியான கட்டுரையாவது … ஹூஹூம். வெட்டிப் பசங்க. 

            சுந்தருக்கு இது புதியதல்ல. அவன் நினைத்தான் ‘கிருஷ்ணாவும் இதையே நினைத்துக் கொண்டிருக்கக்கூடும்.  சுந்தருக்கு என்ன நினைப்பு.. பெரிய இவனோ.. அவன் எழுதினா.. மயிருபோல் இருக்கு… படிச்சா விறுவிறுன்னு போக வேண்டாமா… அதெல்லாம் வணிகக் கதைகளாம், அதைப் படிக்கிறவன் கொடுத்த காசுக்கு எண்டெர்டெயின்மெண்ட் வேணும்னு படிக்கிறானாம்…’ . 

            சுந்தருக்கு உண்மையியேலே சந்தேகம் வந்துவிட்டது. சுருக்கென்று மனதில் முள் தைத்தும் விட்டது. யதார்த்தத்தில கதைஎழுதி என்னத்தைக் கண்டான். ஆனாலும் அவனுக்கு மிகையாக எழுதுவதோ, மிகையாக கற்பனைவாதப் பாத்திரங்களை எழுதுவதோ பிடிக்கவில்லை.  வெகு நேரமாக இந்த விவாவதம் அவன் மனதுக்குள்ளும் தொடர்ந்து கொண்டிருந்தது. 

            காலையில் எழுந்து வழக்கம் போல ஏழு மணிக்குச் செருப்பு அணியாமல் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு நடக்கத் தொடங்கினான்.  எதிரே சைக்கிளில் வந்த பாஸ்கரன் சைக்கிளை நிறுத்தி ‘என்னப்பா, பிள்ளையார எங்களுக்கும் கொஞ்சம் விட்டுவை..செருப்பும் போடவில்லையா?..” எதிரே வந்தால் அப்படித்தான் கேட்பான். நண்பன் வேறுயாரைக் கிண்டல் பண்ணுவான்.

            அவன் கடந்து போனதும் தான் அவனுக்கு தான் யதார்த்தமில்லாத அளவு பக்தி கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.  தினமும் இரண்டுவேளை, காலையும் மாலையும் கோயிலுக்குப் போவது அவன் விவரம் தெரிந்த நாளிலிருந்து வழக்கம்.  சிறுவயதில் அம்மாவுடன் போனான்.  பிறகு அப்பாவுடன் போனான். அவனே போக ஆரம்பித்தபோது செருப்பு இல்லாமலே இரண்டு கிலோமீட்டர் நடந்து போவான்.

            கதையில் எதார்த்தத்தைக் கட்டமைக்க விரும்பும் நான் கடவுளை மட்டும் எதார்த்தமாக எப்படி ஏற்றுக் கொண்டேன்? அவரென்ன தினமும் என்னருகில் வருகிறாரா? அல்லது பேசுகிறாரா? ஆனால், அவர் நான் சொல்வதைக் கேட்பதுபோல் எனக்குத் தோன்றுகிறதே! இல்லையென்றால் இத்தனை வருடங்களாக அவரிடம் நான் வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறாரே? அதெல்லாம்? ஆனால் நிறைவேற்றாத கோரிக்கைகளும் இருக்கின்றனவே?  அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.  இன்றைக்கு பிள்ளையாரிடம் இதைக் கேட்டுவிட வேண்டியது தான்! வேறு எந்தக் கோரிக்கையும் இன்று இல்லை.  தினமும் நிம்மதியாக இருக்கவிடு, என்று கேட்பது அவனுக்கே வெட்கமாக இருந்தது.  நல்ல வேலை இருக்கிறது, நல்ல சம்பளமும் வருகிறது.  மனைவி இருக்கிறாள்.  ஆனால், தினமும் சண்டை வந்துவிடுகிறது. மீண்டும் குழப்பிக் கொண்டான்.  இன்று கேட்கவேண்டியது யதார்த்தம் குறித்த கேள்விதான். குடும்பத்தை இதில் குழப்பக்கூடாது.

            கோயிலில் சென்று நிற்கும் போது இவன் மட்டும் தான் இருந்தான்.  போதுவாக திங்கட்கிழமை, வாரம் தொடங்கும் நாள் கூட்டமிருக்கும்.  செவ்வாய்க்கிழமை நல்ல நாள் என்று கூட்டம் இருக்கும்.  பிறகு வெள்ளி, சனி ஞாயிறு கூட்டமிருக்கும்.  வார நடுவில் கூட்டம் இருப்பதில்லை.  இன்று புதன் கிழமை அதனால் தான் கூட்டமில்லை. நிம்மதியாக வெகு நேரம் வரை எல்லாத் தெய்வங்களையும் கும்பிடலாம். 

            அர்ச்சகர் கூட அவனைக் கடந்து வெளியில் போனார்.  இது இந்தப் பகுதியில் கொஞ்சம் நாலைந்து சுவாமிகள் உள்ள கோவில். சக்திவினாயகர். சிவன், முருகன் பார்வதி என்று சைவத் தெய்வங்கள் உண்டு.  அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது இன்று பிள்ளையாரிடம் கேட்டுவிட வேண்டியது தான். யதார்த்தம் பெரிதா? கற்பனாவாதம் பெரிதா? எது நல்லது? 

            இதையெல்லாம் போய் கடவுளிடம் கேட்பதா என்று தோன்றலாம்.  கடவுளிடம் ஒவ்வொருவரும் ஒன்றொன்றைக் கேட்கிறார்கள். சின்னக் குழந்தைகள் சாக்லேட் வேண்டுமென்றோ, விளையாட எலெக்ரானிக் விளையாட்டு கன்சோல் வேண்டுமென்றோ கேட்கிறார்கள்.  பெரியவர்கள் பணம், பொருள், நகை, மகளின் கல்யாணம், வீடு, தனது திருமணம், லாட்டரிச் சீட்டில் பரிசு என்று பலவற்றைக் கேட்கும் போது ஒரு எழுத்தாளன் அல்லது எழுத்தாளனாகக் கனவு காண்பவன், யதார்த்த வாதம் நல்லதா அல்லது கற்பனாவாதம் உதவுமா என்று கடவுளிடம் கேட்கக் கூடாதா?

            சுந்தர் பிள்ளையாரப்பனின் முன்னால் நின்று கொண்டான்.  ‘பிள்ளையாரப்பா, நீயும் ஒரு எழுத்தாளன்.  வியாசர் சொல்லச் சொல்ல அவ்வளவு பெரிய மகாபாரதத்தையே எழுதியவன் நீ.  கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல வியாசபாரதத்தை எழுதிய உனக்கு இலக்கிய நயம்பற்றி நான் சொல்ல வேண்டுமா? கற்பனையும் யதார்த்தமும் கலந்து காவியம் படைத்தவனல்லவா?’ இன்னும் என்னென்னவோ இறைஞ்சினான்.  விடை கிடைக்காமல் கோயிலை விட்டுப் போவதில்லை என்று முடிவுடன் இருந்தான்.

                                                                      ****************

 

            அன்று முழுவதும் நாள் ஓடிக் கழிந்தது.  அலுவலகத்தில் நுழைந்த நேரத்திலிருந்து ஏழுமணிவரை வேலை. வீட்டுக்கு வரும்போது, மணி ஏழரைக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனைக்கும் ரோட்டில் டிராபிக் கிடையாது.  உள்ளே நுழைந்ததும் மனைவி பார்த்த பார்வையே சரியில்லை.  இன்றைக்கு ஏதோ போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.  அவனுக்குப் போர் எந்தக் காரணம் குறித்துவரும் என்று தெரியாததால், எதைப் பற்றி வரும்? அதில் வரும் ஏவுகணைகளைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

            காபியைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, குடித்து முடியும் வரை காத்திருந்தவள், பிறகு பேச்சைத் தொடங்கினாள், இல்லை பொழிந்தாள்.  வழக்கம் போல முதல் ஐந்து நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருந்தான்.  அடுத்த ஐந்து நிமிடங்களில் அவன் பேச்சிலும் சூடேறியது. அதற்கப்புறம், அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, இவள் ஒரு பொம்மையாகி விடக்கூடாதா என்று நினைத்தான்.     அவன் மனைவி அலங்கரிக்கப்பட்ட, பொம்மையாக, உண்மையிலேயே பொம்மையாக மாறிவிட்டாள். சுந்தருக்கு அதிர்ச்சியாகிவிட்டது.  சோபாவில் உட்கார்ந்த படியே என்ன நடந்தது என்று யோசித்தான்.  அவன் மனைவி, சகதர்மிணி மீனாட்சி சாட்சாத் பொம்மையாக உள்ளே இருந்த அறைக்கும் டிராயிங் ரூமுக்கும் நடுவிலிருந்த நிலைப்படியில் நின்றபடி பொம்மையாகிவிட்டாள்.  என்ன செய்வதென்று புரியாமல் வாயடைத்து உட்கார்ந்திருந்தான்.  போலிஸுக்கும் போன் செய்வதா? என் மனைவி பொம்மையாகிவிட்டாள் என்றால் போலிஸ்காரன் என்ன செய்வான்? ஏதோ கொலை செய்துவிட்டு, பொய்சொல்லுகிறான் என்று இவனைப் பிடித்து உள்ளே வைத்துவிடுவான். அண்ணனுக்குப் போன் செய்யலாம்.  காலையில் பிள்ளையாரப்பன் ஒரு பதிலும் சொல்லாதது நினைவுக்கு வந்தது.  கணவனும் மனைவியும் சண்டை போடுவதை யதார்த்தமாக வர்ணித்தால் அது எல்லோர்வீட்டிலும் நடக்கிற சலிப்பூட்டும் சமாச்சாரமாகிவிடுகிறது. அதைக் கற்பனாவாதத்தில் காட்டினால், என்ன என்று பிள்ளையாரிடம் கோரிக்கை விடுத்த போது தோன்றியது.  அதுதான் அவருடைய பதில் என்று எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டிருந்தான்.  அதற்கான பிள்ளையாரின் பதில்தான் இதுவோ? பிள்ளையார் என்ன கதைகளில் வருவது போல என் முன்னால் துதிக்கை தொந்தி சகிதம் வந்து நின்றா பதில் சொல்லுவார்? அது நாடகத்திலும், சினிமாவிலும் நேரடியாக நடப்பது போல பாவனை நடக்கும்.  பிள்ளையார் அவன் பிரச்சனையைத் தீர்த்துவிட்டாரோ என்று தோன்றியது.   

            மீண்டும் பிள்ளையாரப்பனையே வேண்டினான்.  ‘அப்பா உன்னை சோதித்துத் தப்புச் செய்துவிட்டேன்.  இனிமேல் செய்யமாட்டேன்.  என் மனைவியிடம் பேசி ஒரு மணிநேரமாகிவிட்டது. அவள் குளிர்ந்து பொம்மையாகி நின்றுவிட்டாள்.  மீண்டும் அவளை உயிர்ப்பித்துவிடு.  என்று வேண்டிக் கொண்டான்.  அவன் கேட்டுக் கொண்டதும் அவன் மனைவி மீண்டும் உயிர்ப்பித்துவிட்டாள்.  அவன் பிள்ளையாரப்பனை வேண்டி வணங்கிக்கொண்டிருந்தான்.  அவனுக்கு நிம்மதி வந்தது. 

            இரண்டு நாட்களுக்குள், அவனுக்கு அபரிமிதமான கோபம் வந்துவிட்டது.  எதைச் சொன்னாலும் ஏறுக்கு மாறாக அவன் பேசிக்கொண்டிருந்தான்.  அவன் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது கோபத்தில் அவளுக்குத் தோன்றியது. இந்த ஆளு இப்படியே சிலை மாதிரி ஆகமாட்டானா? என்று அழுது வருந்திக் கொண்டிருந்தாள்.  சோபாவில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்படியே கற்சிலையாகிப் போனாள்.  அவளுக்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.  யாருக்கு போன் பண்ண? மாமனார் மாமியாருக்குப் போன் செய்யவேண்டும்.  ‘ஐயா, எப்படியிருந்த புருஷன் எப்படியாகிப் போனான்? ஐயா, ராசா, என்று ஓலமிட்டுக்கொண்டே இருந்தாள்.  அப்படியே அரைமணி நேரம் கழிந்தது.  அவளுக்கும் ஒன்றும் தோன்றவில்லை.  அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். அழுவதற்கும் கூட சக்தியில்லை.  ஓங்கியழவும் முடியவில்லை.  பக்கததுக் வீட்டுக்காரர்கள் வந்துவிட்டால், ஜெயிலுக்குத்தான் போகவேண்டும்.  ‘அப்படியே மீண்டும் உயிர் வந்துவிடட்டும்.  என் ஐயா ராசா’ என்று கத்தி அழுதாள். சுந்தர் மீண்டும், உயிர்பெற்றுவிட்டான். 

            ஆனால் இருவருக்கும் இன்னொரு சண்டை அடிக்கடி நடக்கிறது. ஒரு புதிய விஷயம் கிடைத்துவிட்டது.  சுந்தர் சொல்கிறான் நான் பிள்ளையாரைக் கும்பிட்டதால்தான் இப்படியெல்லாம் நடந்தது.  அவன் மனைவி சொல்கிறாள். இல்லை நான் சும்மா ‘அவருக்கு உயிர்வரட்டும் என்றேன், உங்களுக்கு உயிர் வந்துவிட்டது. இதில் பிள்ளையாருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை’.  அவள் சொல்கிறாள் ’நான் கற்புக்கரசி, அதனால் தான் சொன்னவுடன் நடக்கிறது. வாயைமூடிக் கற்சிலையாகிவிடுகிறீர்கள்’. அவன் சொல்கிறான்.  பிள்ளையாரப்பனைக் கேட்பேன் ‘யெப்பா இவள் வாய் மூடாதா என்று. உடனே நீ பதுமையாகிவிடுகிறாய்.

            இப்போது இன்னொன்றும் நடக்கிறது.  அவள் அடிக்கடி பதுமையாகி நின்றுவிடுகிறாள். அவன் அவ்வப்போது கற்சிலையாகிவிடுகிறான்.    

            எது உண்மையாக இருந்தால் நமக்கென்ன?