Wednesday, August 31, 2016

இடக்கை – எஸ். ராமகிருஷ்ணன்



            பல ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைகளின் ஒரு பெரிய தொகுப்பைப் படித்திருக்கிறேன்.   ஒன்றும் ஞாபகத்தில் இல்லை. அவருடைய நூல்களை படிக்க வேண்டும் என்று நினைத்தும், படிக்க முடியாமல் போன அவரது கதைகள், நாவல்கள் பல உண்டுஆனால், இணையத்தில் அவரது தளத்தைப் பெரும்பாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது படித்து விடுவேன்.  

            யூ டியுபில் அவரது பல உரைகளின் காணொளிப் பதிவுகளைக் கண்டு கேட்டபின், அவரைப் படிக்கும் ஆர்வம் மிகுந்ததுஅதன் தொடர்ச்சியாக இடக்கை என்ற புதிய நாவல் வெளிவந்ததும் அதை வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்இந்த நாவலைப் பற்றிச் சிலர் எழுதியதையும் பேசியதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, நாவலைப் படிக்கும் ஆர்வத்தில் இணையதளம் மூலமாக வருவித்தேன்.

            யாருடனோ உரையாடும் தொனியில் இந்த நாவலின் நடை இருக்கிறதுஇணையத்தில் அவரது பேச்சுக்களைக் கேட்ட அனுபவத்தில் வைத்துப் பார்த்தால் அவருடைய பேச்சும், இந்த நாவலின் நடையும் ஒரே போக்கைக் கொண்டிருப்பதாகப் படுகிறது. அவருடைய உரைகளைப் போலவே மிக மென்மையான தொனி. அடிக்கடி குட்டிக் குட்டிக் கதைகள் இடையிடையே வருகின்றன. நாட்டார் கதைகளின் நடையிலும் அதே நேரத்தில், சரித்திர நிகழ்வுகளைச் சொல்வதால், வரலாற்று நாவலோ என்ற மயக்கமும் ஏற்பட்டதுஎந்த முன்மாதிரியும் இல்லாத, ஆனால் வரலாற்றை முன்வைத்துச் சமகாலத்தை நோக்கும் ஒரு கதையாகவே நான் இடைக்கை நாவலைப் பார்க்கிறேன்அதிகாரத்துக்கு எதிரான விமரிசனங்கள் மிகக் கடுமையாக இருந்தாலும் அவை வரலாறு அல்லது வரலாற்றுச் சம்பவங்கள் என்ற மெல்லிய பட்டாடை உடுத்தி வருகின்றனஅது புரிதலை அதிகரித்தாலும் உடனடியான கோபத்தை உண்டாக்காமல், தார்மீக்க் கோபத்தை உருவாக்குவதில் வெற்றி பெறுகின்றன.

            சொல்லப்பட்ட நிகழ்வுகளின் வரலாற்றுத் தன்மையை விட அவற்றின் சமகால எதிரொலிகளையே நான் அதிகம் வாசித்தேன்,புரிந்து கொண்டேன்.    இது தனித்தன்மையிலானது, வரவேற்க வேண்டிய புதிய பாதை, புதிய படைப்பு என்று கருதுகிறேன்.


            வரம்பற்ற அதிகாரத்தின், அநீதியின் வடிவங்களாக வரும் மனிதர்களும்அடக்கப்பட்டே துயரப்படும் மனிதர்களும் இதன் நாட்டார் வடிவ, நடையையும் மீறி நம்மைப் பாதிக்கிறார்கள்.  Folklore பாணியில், மொழியிலும், நடையிலும் இருக்கும்  அதே நேரத்தில் நவீன கருத்தியலையும் உள்ளடக்கிய நாவல். புதிய நடை, மொழி, புதிய நோக்கில் வரலாறு அல்லது அதன் மூலம் சொல்லப்படும் சமகால நிலை அதன் அறம் குறித்த பார்வை இவற்றுக்காகப் படிக்கலாம்சில இடங்களில் தூமகேது, சாமகேது வாக மாறிவிட்டார்தவறுதலாக என்றே நினைக்கிறேன்இனி அவரைத் தொடர்ந்து படிக்கலாம் என்று தூண்டும் படியாக இருந்தது இந்த நாவல்

Monday, August 29, 2016

Gene – An Intimate Story by Siddharth Mukherjee

I was a student of Biology in college.   At that time, only two topics excited me, these are Evolution and Genetics.  Now I imagine, if only these two topics had to be studied I would have studied further.  By the time I finished graduation, I had hated further studies. 

Now I know after reading this book that even Mendel, whose experiments led to many discoveries about Genes, had not qualified in his entrance exam for teacher training and failed repeatedly.  But this lead to the situation, whereby he tended the Garden attached to the seminary where he was undergoing training for a religious career.  This gave him the opportunity to observe successive generations of Pea plants. He did his experiments in Pea Plants.  This in turn gave him the insights which led to new discovery of rules of inheritance physical traits. -In those days there was no word for genetics, which came into existence later.  As his interests did not clash with that of the people in the Seminary, he was allowed to continue his experiments.

          I was never more than an average student.  I had other interests such as reading all kinds of books and Sports, especially Football.  I wanted to be a poet or a songwriter.  But I was shy and timid.   I feared that I would remain unemployed and visualized a life in poverty. I tried for a job and got it by fluke.

          After many decades, when I found the books of Richard Dawkins I could reconnect to Genetics and Evolution. What attracted me to Richard Dawkins was the title of his book ‘The God Delusion’.  I glanced this book and decided to read it.  Then I read his other books such as ‘The Selfish Gene’, Greatest Show on Earth, The Blind Watch Maker, Ancestor’s Tale etc. These books made me realize that I had missed the great opportunity of studying a great subject (Zoology) and what had put me off was the syllabus and method of teaching the subject and not the subject itself.  Then there was my teen age angst.  I immensely enjoyed reading the books of Richard Dawkins and has become a fan of him.

          I noticed Siddharth Mukherjee’s book, ‘Emperor of All Melodies – A biography of  Cancer’, after coming to know that it had been awarded the Pulitzer Prize.  Cancer is more about unruly behaviour of cells than about anything else. This wonderful book kindled my interest in Biology and Cells.  I had read it two times (which I normally don’t do) to fully understand the contents.  I had also gifted two copies of the book to two doctors, both relations of mine.

          S. Mukherjee’s next book is about ‘Genes’.  Now that I have read it, I can say that this is also one of the excellent books I have ever read.  I like his style; I was attracted by his wisdom and his quotations from Classical Greek authors, ancient Sanskrit Songs to the latest authors including Susan Sontag. He has a very simple, lucid narrative style.  It is like reading a Agatha Christie story, anxiously waiting for the next scene. 

          The strenuous efforts of scientists, the pleasure of discovery, the pain of failure, of patients dying when the scientists expected them to live longer, the investigations into the causes of failures, the re-jigging of programmes, medicines and procedures, unexpected action, reaction and sudden improvements in the health of some of the patients have all been portrayed with the complexity and in the simple words and with historical perspective without never losing the grip on the story.

          Genes are invisible dots on the chromosomes which are found inside the cells which are basic constituents of our body. Genes are passed on from parent to offspring.  Genes determine the physical structures/traits of all life forms.  They contribute, along with our environment and living conditions, in defining our organs and their functions and modification.  Genes are also suspected to be one of the determinants of mental abilities.  In this books the authors patiently and logically explains what Genes are, what is the relationships between one generations to the next which is determined by Genes, action, interaction between one gene and another, what triggers the action by Genes, how the Gene type (Genotype) finds expression (phynotype) etc. 

          The unruly cancer cells and the Stemcells that give hope to eradicate the disabilities and diseases of the human beings, the lives of Scientists, ups and downs in their life, Commerical interests which have a stake in finding the quick solutions to the diseases in order to make quick money, the controls that the govt. and institutions have put in place to stop unethical practices and also the facts that these very controls that stifle creativity and experiments, these are some of the aspects covered in the book.  

          There are things that are codified in Genes.  Sometimes the codes are expressed in the outward/form and at other times they remain hidden to be exhibited in a future generation.  There are other chemicals that are formed near Genes that also contribute to the inheritance of traits. There are trigger switches that operate on their own to initiate action, defend the body from virus, and to stop growing.  Some times they do not operate the switch of stopping the growth, that is called Cancer.  How and when these Genes or their fellow chemicals acts cannot be predicted.  Human beings are learning to investigate, control, direct the Genes to do something.  These are the frontiers of Biological and chemical sciences, of the things that reside very deep inside us and other life forms.

          As to the question whether our traits/character is determined by ‘Nature’ or ‘Nurture, the tentative answer is that both Nature and Nurture influence our growth and behaviour.  Earlier, only mutations that happened on their own stimulation changed the traits of the species.  But we have now started interefering with the process of growth of organisms in a way no human or God could imagine.   

          The uncertainty of action and reaction of the Genes, expression or suppression of specific traits led me into the wonderland of deepest secrets of human body.  It was an exhilarating journey of discovery.  It is the story of our past and hope for our future.  The goal of treatment to all of the diseases is in front of us and we see light at the end of the tunnel.   

          There are also disturbing questions.  We have gone so far as to develp the capacity to modify the Gene structure which in turn determines the physical characteristics of all life forms, including human beings.  Has the time come for MAN to play GOD?  If man starts modifying/interfering in the fundamental nature of our being where will he lead it to?   

          Nature has imbibed in us (and all living things) the processes that have enabled us to reach thus far after millions of years of evolution.  These processes are essentially means for our survival for such a long time.  Can human beings imagine, perceive or visualize what effects the research in Genes or interefering in their functions may have on life on earth?. 

          It appears reasonably possible that we can produce made-to-order human beings.  Will these human beings have all the invisible processesses which the naturally produced life forms have imbibed in them over millions of years? There is a possibility that things may out of control and reach an irreversible doom.

          But it is also true that despite these nagging questions, human beings will improve their health to unprecedented levels in the near future.  May be there will be a day when human beings can live forever like the mythological ‘Markendeya’, on the blessings of God Shiva.  But it is important that he also died in the end.    


          Any person with ordinary level of understanding English can understand this book.  It was a pleasure to read this book. 

Tuesday, August 23, 2016

பாடலும் மென்மை உணர்வின்மையும்

தமிழ் நாட்டில் ’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்ற குறுந்தொகைப் பாடல் மிகவும் புகழ்பெற்றது.



கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி  
    
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ  
    
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் 
    
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவு முளவோநீ யறியும் பூவே

நேரடியான பொருளைச் சொன்னால் (பலரிடம் கடன் வாங்கிய உரை), ”தேனை உண்டு வாழும் வண்டே, நீ எங்கள் ஊர் (ஆள்)என்பதால் எனக்குப் பிடித்ததைச் சொல்லாமல், கண்ட உண்மை எதுவோ அதைச் சொல். ஏழுபிறப்பிலும் என்னுடன் காதலுடன் இருப்பவளும், மயில் போன்ற மென்மையையும், அழகான பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலை விட மணமுள்ள பூ எதையாவது நீ அறிவாயா?”

திருவிளையாடல் திரைப்படத்தில் பாண்டியன், தருமி சிவபெருமான் நக்கீரன் இவர்களிடையே நடைபெறுவதாக வரும் உரையாடல் ஒன்றி மையக் கருவாக இருப்பதாலேயே புகழ்பெற்றுவிட்டது.  பாடலின் இலக்கிய நயத்துக்கும் அது குறித்த விவாதத்துக்கும் எந்தச் உறவும் இல்லை.  உரையாடலின் வேகத்தில் சிவனையே எதிர்க்கும் தமிழ்ப்புலவனின், அரசுப் புலவனின் அகம்பாவத்தில் பாடலின் பொருளைச் சிதைக்கும் காட்சிதான் அரங்கேறுகிறது.

ஒருவன் காதல்மிகுதியால் தன் காதலி கூந்தலை உயர்வாகச் சொல்லும் போக்கில் அமைந்திருக்கிறது.  மணம் என்பது இங்கே காதலை உணர்த்துவதாகப் புரிந்து கொள்ளலாம்.
இதைவிட்டு விட்டு, கூந்தலுக்கு மணம் உண்டா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அது புகழ்பெறுவது இலக்கியத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தூரத்தைக் காட்டுகிறது.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாடலில் உள்ளபடி காதில் தேன் வந்து பாயுமா? என்று கேட்பதைப் போன்றதே இது.

பொருளை விட்டுவிட்டு, வெட்டிப் பேச்சுப் பேசும் தமிழ் அரசியல் மரபின் தொடர்ச்சியாகவே இந்த வசன காவியம் நிகழ்கிறது. சொற்கள் அடுக்காக, அழகாக, இருந்தால் போதும் அது சிறந்த வசனம், சிறந்த நாடகம், சிறந்த பேச்சு என்ற வலைக்குள் ‘கொங்கு தேர்” சிக்கிக் கொண்டு விட்டது. வெளிவர எவ்வளவு நாளாகுமோ?






வீரம் என்பது

எல்லோரும் நீதிமான்கள் போலவே பேசுகிறார்கள்ஆனால் கொள்ளைக்காரர்களாகவே விரும்புகிறார்கள்எல்லா விதிகளையும் ஒழுக்கங்களையும் போதிக்கிறார்கள். அதைப் பின்பற்றாதது மட்டுமல்ல, பின்பற்றுகிறவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்றே நம்புகிறார்கள்பணத்தைச் சேர்த்துவிட்டால் எல்லாம் சேர்ந்துவிடும் என்றே முடிவு செய்து விட்டார்கள்இப்படிப்பட்ட உலகில்தான் நாம் நீதி, நேர்மை, உண்மை, சமூக சமத்துவம் பற்றிப் பேச வேண்டி இருக்கிறதுஆனால்பேசாமல் இருந்துவிட்டால்.. நமக்கெதற்கு வம்பு என்று கண்ணை மூடிக் கொண்டுவிட்டால், நாம் நன்றாக இருக்கலாம் என்பது உண்மையாநாம் இந்த சமூக அநீதிகளின் பலியாடுகள் ஆகாதவரை அது உண்மையேஆனால் ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சமூகத்தின் இருண்ட பகுதிகளில் சிக்கிக் கொள்ள நேர்ந்துவிட்டால் ? சும்மா இருந்துவிட முடியுமா? அது ஒரு தேர்வாக இருந்துவிடுமா? அப்போது நமது தேவை என்ன? இதை எண்ணித்தான் நாம் ஏதாவது ஒரு வழியில் இந்த சமூகத்தின் உறுப்பாக இருந்து அதன் இழிவுகளை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

            சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடவோ, கருத்துச் சொல்லவோ எத்தனிக்கும் யாரையும் இச்சமூகம் சும்மா விட்டு விடப்போவதில்லைஅவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்அந்தவிலை நம் வாழ்வை மிக மோசமானதாக ஆக்கும் வரையில் ஒவ்வொரு மனிதனும் அந்த வேலையைச் செய்யலாம்களப்போராளியாக இருப்பவனுக்கு ஒன்று சேர்ந்து போரிட துணை கிடைப்பதில்லை.   எழுத்தாளனுக்கோ எழுத ஊடகமோ, ஏன் மன நிலையோ கூட கிடைப்பதில்லைஆனாலும் உலகம் மாறிக் கொண்டுதான் இருக்கிறதுமுந்தைய நிலைமையை விட பல நல்ல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் யாருமே எதுவுமே செய்யாமல் மாறுதல்கள் நிகழுமா?

            எந்த அநீதிக்காகவும் போரிடுபவன், எழுதுபவன் கடைசி விலையாக கொடுக்க வேண்டியது எது என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணங்கள் ஏற்படும்உயிரைக் கொடுத்துத்தான் ஒரு நீதியைப் பெற வேண்டும் என்றால், நான் அதை ஆதரிக்கவில்லை. ஏனேனில் எந்த நீதியையும் விட மனிதனின் உயிர் புனிதமானதுஅவன் தோற்றுப் போகலாம், அடிக்கடி தோற்றுப் போகலாம், சமரசம் செய்து கொள்ளலாம்ஆனால் உயிர் வாழவேண்டும்அவன் அந்தப் போரில் ஈடுபடாவிட்டாலும், வேறுயாராவது அதை முன்னெடுத்துச் செல்லும் போது, முந்தையப் போராளி எங்கே தவறி விழுந்தான் என்பதைக் கற்றுக் கொண்டு மேல் செல்வான்இது தான் எந்தப் போராட்டத்தினதும் பாதையாக இருக்க முடியும்.

            உயிரைக் கொடுத்துப் பெற வேண்டியது எதுவும் இல்லை


பலமுறை வீரம் என்பதே வன்முறையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரில் அதிகம் பேரைக் கொன்றவன் வீரன்அப்படி முடியாத நிலையில் இன்னொருவனால் கொல்லப்படுகிறவனும் வீரன்என்னைப் பொறுத்தவரை, கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலக்கை நெருங்குகிறவனே வீரன்உயிரைக் கொடுத்து விடுகிறவனோ, எடுத்துவிடுகிறவனோ அல்ல.  
ஐயா, (தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்)  நினைவுகள்

            ஐந்தாவது வகுப்பில் திருநெல்வேலி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் படித்த என்னை விடுதிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அம்மா அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்அவருக்கு ஓட்டப்பிடாரத்தில் நானும் என் தங்கையும் பயின்ற பள்ளி, சரியான பள்ளி அல்ல என்ற கருத்து இருந்ததுமேலும், பல ஜோஸ்யர்கள் உங்கள் பிள்ளை உங்களுடன் இருந்தால் அவனது எதிர்காலம் நன்றாக இருக்காதுநீங்கள் பிரிந்து இருந்தால்தான் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும். உங்களுடன் இருந்தால் உருப்படாமல் போய்விடுவான் என்று சொல்லுவதாகவும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள்

            இதன் விளைவாகவே விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்க வேண்டிய  முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.   ‘சைனிக் ஸ்கூல்’, அமராவதி பள்ளியைப் பற்றிய தகவல் அறிக்கையையும் அந்த நேரத்தில் நான் பார்த்த ஞாபகம் இருந்தது.  இந்நிலையில்ஓட்டப்பிடாரத்தில் இருந்த ஹரிசன விடுதியின் பொறுப்பாளராக இருந்த சங்கரன் பிள்ளை என்பவரிடமிருந்து தெரிந்து கொண்ட தகவலின்படி கோயமுத்தூர் அருகில் இருந்த பெரியநாயக்கன்பாளையத்தில் இருக்கும்ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சேர்த்துவிடலாம் என்று முடிவு செய்து என்னை அழைத்துக் கொண்டு அம்மா அங்கே சென்றார்கள். அம்மா அதற்கு முன்னால் அந்தப் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.  நுழைவுத் தேர்வு வைத்தார்கள். பின்னால் அந்தப் பள்ளியின் நூலகத்தில் ஓர் ஆசிரியர் எங்களை நேர்காணல் செய்தார்.

            பள்ளி மற்றும் விடுதிக் கட்டணம் அதிகமாக இருந்ததால் ,(1968 ஆம் ஆண்டு) அம்மா அந்த ஆசிரியரிடம் சலுகைக் கட்டணத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டார்கள்அதாவது ஆண்டுக்கு ரூபாய் 40 கட்டணம் கட்டும் (அதிகபட்ச சலுகைப்) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மன்றாடினார்கள்ஆசிரியர் அந்தப் பிரிவில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்றும், அடுத்த பிரிவில் அதாவது ஆண்டுக் கட்டணத்தில் பாதிச் சலுகை கட்டுப் பிரிவில் சேர்க்கலாம் என்றும் இல்லையெனில் இடம் கிடைக்காது என்று சொன்னார்அம்மாவும் சரி என்று ஒத்துக் கொண்டார்கள்இப்படித்தான்                    ‘ஸ்ரீ ராம்கிருஷ்ணா மிஷன் வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் எனது 9 வயதில் சேர்ந்தேன்.

            அந்தப் பள்ளியை நிறுவியவர்  ஐயா என்று எங்கள் எல்லோராலும் அழைக்கப் பெற்ற திரு. தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள்.  அப்பள்ளி 1934ஆம் ஆண்டு காந்தியடிகள் கோவைக்கு வந்தபோது ஒரு ஹரிஜன மாணவனுடன் தொடங்கப்பட்டது.  இன்று ஏதாவது சில நல்ல குணங்கள் என்னிடம் இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் அந்தப்பள்ளியில் நான் கற்றுக்கொண்டவை என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.  அய்யாவின் தினப்படி நடவடிக்கைகளை ஒரு சிறுவனாகக் கவனித்திருக்கிறேன்.  மிகவும் ஒழுக்கமான காந்திய வாழ்வு.   அவர் பள்ளி வளாகத்திலேயே வசித்து வந்ததால் இது சாத்தியமாக இருந்தது.   இப்போது அந்தப் பள்ளி எப்படி இயங்குகிறது என்று எனக்குத் தெரியாதுஆனால் நான் படித்த வேளையில், பத்து வயதிலிருந்து பதினைந்து-பதினாறு வயதுவரை அந்தப் பள்ளியின் பாதிப்பு, அதில் ஐயா அவர்களுடைய நேரடி, மற்றும் மறைமுகப் பாதிப்பு என்று இன்றுவரை என்னிடம் இருப்பதை என்னையன்றி யாரும் உணர முடியாது. நான் உணர்வதை, ஐயா அவர்களை ஒரு சிறுவனாக நான் பார்த்த்தைப் பதிவு செய்யலாம் என்பதே எனது எண்ணம்.   எந்தநூலையும் பார்த்து அல்லது எந்த தரவுகளையும் ஆய்வு செய்து எழுதியதல்ல இந்தப் பதிவு.

            அந்தப் பள்ளியின் சீருடை கதராடையால் ஆனது.  அடர்நீல (கடற்படை நீலம்) நிறத்தில் கால்சட்டையும், வெள்ளைநிற மேல் சட்டையும் சீருடையாக இருந்தன. அதுவும், பழைய காலத்து (அந்தக் காலத்திலும் அது பழையதான ஃபேஷன் தான்) அரைக்கைச் சட்டை, அதில் கழுத்துக்குக் கீழுள்ள இரண்டு பொத்தான்களுக்கான ஓட்டைகள் மட்டுமே உண்டு. அவையும் சட்டையில் தைக்கப்பட்டிருக்காது.   தனியாக ’டேப் பட்டன்’ வைத்துக்கொள்ள வேண்டும்.  அதற்குக் கீழ் பொத்தான்கள் கிடையாது.  ஜிப்பா போன்றிருக்கும் வடிவம்.  நான் ஆறாவது படிக்கும் மாணவன் – 9 வயதுநினைத்துக் கொள்ளுங்கள்அடுத்த ஆறு ஆண்டுகள் அதுதான் என் உடையாக இருந்தது. விடுமுறையில் வரும்போதுதான் வேறு உடை அணிய முடிந்ததுகதர் அல்லாத துணிகளை, மில் துணி என்று அழைத்தோம், அதை வைத்திருக்கவே கூடாது என்பது பள்ளி, விடுதியின் விதிஐயாவின் காந்தியத் தொடர்பு தனிப்பட்ட முறையில் என்னை தொட்ட தருணங்கள் அதிலிருந்து தொடங்குகின்றன. (இன்று அப்பள்ளியின் சீருடை வேறுமாதிரி இருக்கிறது என்பது இணையத்தில் பார்த்தால் தெரிகிறது). என்னிடம் அந்த ஆறாண்டுகளில் இரண்டு மூன்று சீருடைகளுக்கு மேல் எந்த உடையும் கிடையாது.  பனியனும் கதராடைதான்.  அது அனேகமான என்னிடம் இருந்ததே இல்லை.  

            காலை ஐந்தே கால் மணிக்கு, 9,10,11 மாணவர்கள் துயிலெழ வேண்டும். 6,7,8 வகுப்புக்களின் மாணவர்கள் ஐந்தே முக்கால் மணிக்கு எழ வேண்டும். இன்றுவரை நான் 6 மணிக்கு மேல் தூங்குவதில்லை என்பதில் அதன் தாக்கம் தெரிகிறது. 6 காண்டா மணி அடிக்கப்படும். வரிசையில் நின்று பிரார்த்தனைக்குச் செல்ல வேண்டும். ஆறேகால் மணிக்குப் பிரார்தனை ஆரம்பமாகும்.  தீபாராதனையும் உண்டு.  மாணவர்களின் ஒருவர் பூசாரியாக வேலை செய்வார். கடைசியில் அவரே தீர்த்தமும் கொடுப்பார்.  ஒரு சமஸ்கிருதப் பாடல், இரு தமிழ்ப்பாடல்களுடன் பிரார்த்தனை முடியும். என் உச்சரிப்புகள் தமிழில் தெளிவாக இருப்பதற்கும், தேவாரம், திருவாசகம் பாடல்கள் நான் தெரிந்து வைத்திருப்பதற்கும் காரணம் அதுவே. அது தவிர, திருப்புகழ், இன்னும் பல பாடல்கள் சமயப் பாடல்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன.   அந்தச் சமயத்தில் எங்களின் பின்வரிசைக்கும் பின்னால் ஒரு சுவாமிஜியும் பல நேரங்களில், ஐயாவும் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்ஐயா அவர்கள் அவருக்குத் தோன்றும் போதெல்லாம், பிரார்த்தனை முடிந்ததும் எங்களைப் பார்த்துப் பேச ஆரம்பிப்பார்.

நான் அடிக்கடி கேட்ட வார்த்தைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.  “நீங்கள் எல்லாம் பிற்காலத்தில் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும்” “தரித்திர நாராயணர்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை”.  இந்த வார்த்தைகள் இன்றும் என்மனத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறதுஒரு மகத்தான காரியத்தையும் செய்யவில்லை என்றாலும் ஒரு தீவிர வேட்கையைச் சிறுவர்களிடம் விதைக்கும் வார்த்தைகள்அந்த மகத்தான காரியத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பது என் விதிகாந்தியடிகளைப் பற்றி அடிக்கடி அந்த நேரத்தில் கேட்க நேரிடும். ஐயா காந்தியடிகளுடன் பலமுறை பழகியவர்.  அவர் அடைந்த புளகாங்கிதங்களை எங்களுக்கும் விளக்குவார்.  நேர்மை, உண்மை, போன்ற வார்த்தைகளை நான் முதலில் கேட்டது அங்கேதான்.
           
            வகுப்புகள் நடக்கும் போது இடைவெளி நேரத்தில், அல்லது ஆசிரியர் வரத் தாமதமாகும் நேரத்தில், அல்லது ஆசிரியர் வராத நேரத்தில், காந்தியடிகளுடையசத்திய சோதனை’ (முழுப்பதிப்பு – சுருக்கம் அல்ல) புத்தகத்தை மாணவர்களில் முதல் மதிப்பெண் பெறுகிறவர், முழு வகுப்புக்கும் கேட்கும்படி வாசிக்க வேண்டும்அடுத்தவர்கள் வாசித்து நான் கேட்ட முதல் புத்தகம் அது தான்இந்த வாசிப்புகள் 6 வது வகுப்பில் தொடங்கி குறைந்த்து ஒன்பதாவது வகுப்புவரை தொடர்ந்தனஒரு சிறுவனின் மனதில்சத்திய சோதனைஎன்ன விதமான பாதிப்பை நிகழ்த்தும் என்பது அதை வாசித்தவர்களுக்குத்தான் தெரியும்உண்மைக்கும் நேர்மைக்கும் என் வாழ்வில் கொஞ்சமேனும் இடம் இருக்கிறதென்றால் இதன் பாதிப்பு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.  சத்திய சோதனை புத்தகத்தைப் படிக்கிற நேரத்தில் கண் கலங்காமல் இருப்பது கடினம்.  யாருடைய இதயத்தையும் தொட்டுவிடும் உண்மை வார்த்தைகள் அவை.  இன்று படித்தாலும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்தால் என் கண்கள் கலங்கும்.  ஒருமனிதன் இவ்வளவு நேர்மையாக வாழ முடியுமா? அல்லது வாழ முயல முடியுமா? என்ற வியப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.  

            காலை வேளைகளில் ஐயா தினமும் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன்.  அப்போது அவரது வயது 65-70 இருக்கும்.  கிண்ணென்று இருக்கும் உடலமைப்பு.  பல நேரங்களின் இரவில், புத்தர் மைதானத்தில் அமர்ந்து, வானொலிப் பெட்டியில் ஒலியளவை மிக மிகக் குறைவாக வைத்துக் கொண்டு செய்தி அவர் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்.  தனியாக ஒரு (புத்தர்) மைதானத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பார்.  அருகில் சென்று அமர்ந்து பலதடவை செய்திகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவ்வளவு குறைந்த ஒலியளவில் அதற்குப் பிறகு எங்கும் எதையும் நான் கேட்டதில்லை.  அந்தப் பள்ளியின் சூழலிலேயே அமைதி இருந்தது.  தனிமையில் இருப்பதை, சும்மா இருப்பதை இயற்கையுடன் ஒன்றி இருப்பதை அங்குதான் கற்றேன். இன்றும் கூட, அமைதியான, இயற்கையான சூழலின் வாழும் அவா எனக்கு உண்டு.   உரத்துப் கூச்சலிட்டுப் பேசுவது எனக்கும் உகந்ததல்ல.  உணவு, மின்சாரம், நீர் எதையும் வீணாக்குவது எனக்குப் பிடிப்பதில்லை.  ஐயாவின் வழிகாட்டலில் அமைந்த பள்ளியின் வழிமுறைகள் என்னை இன்னும் வழிகாட்டுகின்றன.  (இருபதுகளில் காந்தியம் பிடிக்காமல் போனதுண்டு.  நாற்பதுகளுக்கு மேல் அதன் விழுமியங்களும் தேவையும் உணர்கிறேன்.  சில மாற்றங்களுடன் விமரிசனக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு காந்தியின் கருத்துகள் மிகவும் பொருத்தமானவை.  

புத்தர் மைதானத்தின் நடுவில் இருக்கும் புத்தர் சிலையை மாணவர்கள் வாரம் ஒருமுறை கழுவி, தினமும் பூவைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.  இன்றும் புத்தரின் வாழ்வும், சொல்லும் என்னைப் பாதிக்கின்றன.  

            விவேகானந்தர், பரமஹம்சர் இவர்களை மட்டுமன்றி, அப்பர் சுந்தரர் இன்னும் பல திருவாசகத் தேவாரப் பதிகங்கள், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், திருக்குறள், இன்னும் பல தமிழ்ப்பாடல்களை இயல்பாகவே அங்கங்கே பாடும் போது கற்றேன்.  எந்த நாளிலும் ஒருமுறையாவது பாரதியாரின் பாடல்களையோ, திருக்குறளையோ சொல்லவோ பாடவோ வேண்டியிருக்கும். (ஐயா அவர்களால்தான் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் திருக்குறள் நுழைந்தது என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன்)

            பள்ளி மாணவர்கள்தான் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், உணவு பறிமாறும் பாத்திரங்களைக் கழுவ வேண்டும். புத்தர் சிலையைக் கழுவி எண்ணை தேய்க்க வேண்டும், ராமகிருஷ்ணர் படத்திற்குப் பூஜை செய்யும் போது ஒரு கையில் மணியை அடித்துக் கொண்டே இன்னொரு கையால் தீபாராதனை செய்ய வேண்டும்.  எந்தத் தொழிலும் குறைந்த்து அல்ல என்பது என்மனதில் ஊறிப் போனது அங்கேதான் என்றே கருதுகிறேன்.

            200 மாணவர்கள் இருந்த விடுதிப் பள்ளியில் விளையாடுவதற்கு, ஹாக்கி, கபடி, கூடைப்பந்து, கால்பந்து (2), டென்னிகைய்ட், கைப்பந்து என்று விளையாட்டு மைதானங்கள் இருந்தன. இன்றைய நகரத்துப் பள்ளி மாணவர்கள் இதை நினைத்துப் பார்ப்பதே அரிது.

            ஒன்றை மட்டும் கூறி விட வேண்டும்.  படிப்பில் நான் சுமார்தான்.  ஆனால் எட்டு, ஒன்பதாம் வகுப்பில் இருந்தே நூலகத்தில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன்.  அதுவும் அந்தப் பள்ளியில் தான் தொடங்கியது.  இன்றுவரை புத்தகங்கள் படிப்பது எனது பெருவிருப்பமாக இருக்கிறது.  நான் வாழ்வில் அடைந்த முன்னேற்றங்களுக்கு (அது எவ்வளவு குறைவாக இருந்த போதிலும், என்னைப் பொறுத்த வரையிலான முன்னேற்றம்) அந்த வாசிப்புகள் காரணம் என்றே நினைக்கிறேன்.

            இதிலெல்லாம் ஐயாவின் பங்கு என்ன என்று நீங்கள் கேட்க்க் கூடும்.  எனக்கு வாய்த்த அனைத்தையும் முன்னரே திட்டமிட்டு வசதிகளை அமைத்துக் கொடுத்த அவரது தீர்க்க தரிசனம்தான் அதற்கெல்லாம் காரணம்.  எங்கும் காந்தியும், விவேகானந்தரும், பரமஹம்சரும் இன்னும் பல மேதைகளும் காதுகளிலோ கண்களிலோ வாசகங்களாகவோ, இந்தக் காலத்தில் காந்தியைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் எத்தனை இருக்கின்றன?  

            ஐயாவிடம் பலமுறை நேரடியாக உரையாற்றும் வாய்ப்புக்கள் கிடைத்தன.  மொத்தமாக மாணவர்களாகச் செல்லும் போதெல்லாம், ‘ஓட்டப்பிடாரத்தான்’ என்று அன்புடம் அழைக்கும் அவரது குரல் மறக்க முடியாதது. ஒவ்வொரு பேச்சிலும் ஒருமுறையாவது ‘நீங்கள் மகத்தான சாதனைகளைப் புரிய வேண்டும்’ என்ற கருத்தைச் சொல்லிவிடுவார்.   அவரது கோபத்தில் அடிவாங்கிய சம்பவங்களும் உண்டு. இரண்டு முறை அடிவாங்கியது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

            ஒவ்வொரு தீபாவளி அன்றும் தன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் காதி வேட்டி ஒன்றும், துண்டு ஒன்றும் கிடைக்கும்.  தீபாவளி விடுமுறையில் ஊருக்குச் செல்லாத என்னைப் போன்ற ஒன்றிரண்டு மாணவர்கள் அவருக்கு அதை விநியோகிப்பதில் உதவிகள் செய்வோம்.  எங்களுக்கும் வேட்டியும் துண்டும் ஆறாண்டுகள் கிடைத்தன.

            அவர் ஓரைந்தாண்டுகள் சுதந்திரத்திற்கு முன்னால் மத்திய சட்ட அவையின் உறுப்பினராக இருந்தார்.  பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும், மாநிலங்கள் அவை உறுப்பினராக இருமுறையும் தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினராக ஒருமுறையும், தமிழக அமைச்சராக ஒருமுறையும் இருந்தார் என்பதெல்லாம் எங்கும் எப்போதும் அவர் சொன்னதும் இல்லை.  இதையெல்லாம் நான் பின்னால் தான் தெரிந்து கொண்டேன்.  அந்த வளாகத்தில் அது பற்றிப் பேச்சே எழுந்ததில்லை.   இந்தக் காலத்தில் நகராட்சி உறுப்பினராக ஆனாலே என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  பள்ளியை விட்டு வந்த பின்னால் அவரைப் பார்க்கப் போனதே இல்லை.  ஒருவருடைய பாதிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும் போது, அவரை நேராகப் பார்ப்பது நல்லது என்றாலும், பார்க்காவிட்டாலும் ஒன்றும் குறைந்து விடவில்லை  என்றே இன்று தோன்றுகிறது. முக்கியமாக நான் காந்தியை உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் அறிந்து கொள்வதில் அவர் எங்களிடம் சொன்ன பல சொந்த அனுபவங்கள் மிகவும் பங்களித்திருக்கின்றன. (1934ஆம் ஆண்டு ஹரிசன நிதிக்காக காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது ஐயா பெரும்பாலும் அவருடனேயே பயணம் செய்தார் என்பதை பின்னால் அறிந்து கொண்டேன்).  அது போலவே விவேகானந்தரின் சமத்துவ நோக்கும், துடிப்பும் அவரது ஆளுமையின் மூலமாகவே (படித்து அறிந்ததை விட) அறிந்து கொண்டேன். 

அவர் காந்தியடிகளைப் பற்றிப் பலமுறை எங்களுக்குச் சொன்னவை அனைத்தும், அவரது நேரடி அனுபவங்களும் சிறு வயதிலேயே காந்தியை நான் மிக நெருக்கமாக உணர வைத்தன.  முடிந்த வரை நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது அதன் தாக்கமாகத்தான் இருக்க வேண்டும்.  மிகவும் புத்திசாலியாக இருந்தால் தான் பொய் பித்தலாட்டம் அனைத்தையும் செய்து வெற்றிபெற முடியும்.  அப்படி வெற்றி பெற்றாலும் அது என்றேனும் நம்மை கவிழ்த்துவிடும் என்ற எண்ணங்கள எனக்கு அப்போதே படிந்தன.  காந்தி இன்றும் எனக்குச் சொந்தக்காரத் தாத்தா போலவே உணர்கிறேன்.  அவர் தேசப்பிதா என்று சொல்லப்பட்டதால் அல்ல.  அவர் வாழ்வின் மூலம் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களே அதற்குக் காரணம்.  சின்ன வயதில் அவரை அனுபவம் மூலம் அறிமுகப்படுத்திய ஐயா அவர்களுக்கும் அதில் பெரும் பங்குண்டு.  

            நான் உணர்ச்சி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், நெருக்கமாக உணரும் காந்தியடிகள் எப்போதும் என்னுடன் உறவு கொண்டு இருக்கிறார்.   அவருடன் மிகவும் தீவிரமாக மாறுபடும் தருணங்கள் அனேகம் உண்டு.  அதே நேரம் மிகவும் இணக்கமாக உணரும் தருணங்களும் உண்டு.  அவர் எனக்கு மட்டும் உரியவர் அல்லர்.  பல கோடி மக்களுக்கும் உரியவர். ஆனாலும் எனது நேசத்துக்குரியவர்.  நாம் விவாதிப்பதன் மூலமே (அதாவது அஹிம்சை வழியில்) நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்பதற்கு அவரே உதாரணம்.  அவரே அதன் ஒளி. 

       ஐயா அவினாசிலிங்கம் அவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு பெருமையுடன் பூரிப்பு ஏற்படுகிறது.  அப்படிப்பட்ட ஆளுமைகளை குறைவான மனிதர்களே சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது.  அதுவும் வாழ்வின் சில காலப்பகுதிகளில் மட்டுமே.  அதுபோன்ற, பொதுமக்களுக்காகப் பணிசெய்கிறவர்கள் யாவரையும் நேசிக்கிறேன்.


Thursday, August 18, 2016

விநாயக முருகன் எழுதிய நாவல் ‘வலம்’



            பெரும் எதிர்பார்ப்புக்களோடு நான் வாசிக்க ஆரம்பித்த நாவல் விநாயக முருகன் எழுதிய ‘வலம்’ நாவல்.  ஆங்கிலேயர்கள் சென்னையை எப்படி ஆக்கிரமிப்புச் செய்தார்கள் என்பதில் தொடங்கி, நரி என்ற மிருகத்தின் வழியே, ஆங்கியேயர்களின் அடக்குமுறையை விவரித்துச் செல்வது நாவலின் உத்தி.   நாவலில் ஆங்கிலேய அதிகாரிகள், அவர்களுடைய வாழ்க்கை,  ஆங்கிலேயர்கள் பற்றி நிறையத் தகவல்கள் வருகின்றன.  தகவல்களும், சம்பவங்களும், அடுக்கிச் சொல்லப்பட்டாலும், திருப்தியற்ற தன்மை நாவலின் களமாக இருக்கிறது.  பலமாக இருக்க வில்லை.   கோஹன் என்ற ஆங்கிலேய அதிகாரி செய்யும் அடக்குமுறை, கவர்னரின் ஆட்சியின் நிலை இன்னும் பல வெறும் தகவல்களாக இருக்கின்றன.  எவ்வளவோ தகவல்கள் அமைந்தாலும், நாவல் உணர்ச்சியுடன் பேசத் தயங்குகிறது.  நரிகள் பற்றிய பகுதிகள் மிக விரிவாக அலசப்பட்டிருக்கின்றன. என்னைப் பொருத்தவரை நாவல் எதைப் பொருளாக்கிப் பேச நினைத்த்தோ அதன் முழு வெற்றியையும் பெறவில்லை.  இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.  இன்னும் சிறப்பான நாவல்கள் எழுதுவார் என்றே நம்புகிறேன்.  வரலாறு கதையாகும் தருணம் உணர்ச்சி பூர்வமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.  கரொலின் ஒரு துயரத்தின் சின்னமாக இருந்தாலும் அவளோ மற்ற பாத்திரங்களோ தவிர்க்க முடியாத இடத்தில் தவிப்பதுபோல் நாவலில் தெரிவதில்லை.  கவர்னரும், கோஹனும் தகவல் களஞ்சியங்களாக வருகிறார்கள்


            எனக்கு ஏனோ இந்த நாவல் சிறப்பானதாகப் படவில்லை.  

காட்டுக் குட்டி (நாவல்) – மலர்வதி


         
 காட்டுக் குட்டி (நாவல்) – மலர்வதி

            வழக்கம் போல யூ டியூபில் இலக்கியத்துடன் தொடர்புள்ள காட்சிக் கோர்வைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த நாவலைப் பற்றிய ஒரு காட்சியைப் பார்த்தேன்.   அதில் தங்கர் பச்சான் பேசிக் கொண்டிருந்தார்அவர் பேச்சுக் கேட்டதும், பின்னர் அதைத் தொடர்ந்து, நாவலை எழுதிய மலர்வதியின் பேச்சைக் கேட்டதும் நாவலைப் படிக்க வேண்டும் என்று தோன்றியதுஅதைத் தொடர்ந்து விநாயக முருகன் இந்த நாவலைப் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.   இந்த நாவலின் மொழி கடினமாக இருப்பதாகவும், அதுவே தடையாக இருப்பதாகவும் பேசினார்அதை மீண்டும் சாதாரண மொழியில் எழுத வேண்டும் என்றும் அறிவுரை சொன்னார். அது எனக்கு உறுத்தலாக இருந்ததுமக்கள் பேசுகிற மொழியைப் பதிவு செய்தால் அது புரியவில்லை என்று சொல்வது பொருத்தமானதல்ல என்று நம்புகிறேன்பேச்சு வழக்கில் இருந்துதான் இலக்கியம் தொடங்குகிறது

            சென்னையில் இருப்பவர் நாகர்கோவில் பகுதியில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர் எந்தத் தடையும் இல்லாமல் அந்தப் பகுதியின் மொழிவழக்கைக் கற்றுக் கொள்ள முடியும்.  (வேற்று மொழிக்குக் கூட இது பொருந்தும்).  தமிழ்வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வட்டார மொழி எப்படி அன்னியம் என்று சொல்லி நாம் படிக்காமல் இருந்துவிட முடியும்?   ஒரு நாவலின் மொழி அந்தப் பகுதி மக்களின் மொழியில் இருப்பதே தனிச்சிறப்புஅப்படிச் செய்யாவிட்டால் அந்த வட்டார மொழியின் வழக்குகள் விரைவில் ஒழிந்துவிடும்அது தமிழ்மொழிக்கான இழப்பு.

            இன்னொரு ஆங்கில இலக்கிய உதாரணம் ஞாபகம் வருகிறது.  ‘As I lay dying’ என்ற நாவலை எழுதிய  William Faulkner மீதும் இப்படி ஒரு விமரிசனம் வைக்கப்பட்டது. அந்த நாவலின் மொழியும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்பட்ட மொழிஅதை சாதாரண ஆங்கிலம் அறிந்தவர்கள் படிப்பது சிரமம்ஆனாலும் அதை ஆங்கிலம் அறிந்த, அறியாத எல்லோரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்அது ஒரு மிகச்சிறந்த நாவலாகவும் கருதப்படுகிறது. இறக்கும் தருவாயில் உள்ள ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட நாவல் அதுஇது போன்று இன்னும் பல உதாரணங்கள், தமிழிலும் இருக்கக் கூடும். இப்போது ஞாபகம் வந்ததை எழுதுகிறேன். இப்படிப் பல வட்டார மொழிகள் இலக்கியத்துக்குள் வந்தால்தான் மொழி வளம் பெறும்மலர்வதி இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்இந்த ஒரு விஷயத்துக் காகவே அவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஒரு மொழிவழக்கைக் காப்பாற்றி இருக்கிறார் என்பது மிக முக்கியமானது.

            இந்த நேரத்தில் இன்னொரு நாவல் ஞாபகம் வ்ருகிறது. Nathaniel Hawthorne எழுதிய ’The Scarlet Letter’.  இதில் கணவன் யாரென்றும், அவளுடைய குழந்தைக்குத் தந்தை யாரென்றும் ஊர் அறியாததால்,  (அந்தப் பெண்ணும் சொல்வதில்லை) தண்டனைக்கு ஆளாகவிருக்கும்ஹெஸ்டர் பிரின்என்ற பெண்ணைப் பற்றிய கதைநல்ல நாவல். அமெரிக்காவிலும் பெண்ணுக்கு 18ஆம் நூற்றாண்டில் இது போன்ற நிலை என்பதை அறிந்தால் நமது நாட்டிலும் மாற்றம் வந்தே தீரும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

            மீண்டும் காட்டுக்குட்டியிடம் வருவோம்.

            காட்டுக்குட்டியான குட்டிமணி, ரமணியின் மகள்.  காதலித்தவன் அனுபவித்துவிட்டுக் கைவிட்டுப் போன பதினைந்தாம் வயதில் விபரம் தெரியாத வயதில் தாயாகி அதையும் ஒன்றும் செய்யத் தெரியாமல் குழந்தையைப் பெற்றெடுத்து, அன்றிலிருந்து இன்றுவரை வாழ்க்கையில் தட்டுத் தடுமாறி வாழ்கிறவள்.    இன்னும் இரு ஆண்கள் வாழ்க்கை தருவார்கள் என்று அவள் நம்பி இருக்க, அவர்களும் ஏமாற்றி விட்டுப் போய்விடுகிறார்கள்.   வேறுவழியின்றி  உடலை விற்று வாழும் நிலைமைக்கு ரமணி தள்ளப்படுகிறாள்.  அவள் எதிர்கொள்ளும் மனிதர்கள், மனித மிருகங்களின் சிதைகிறது அவளது வாழ்க்கை.

            நாவலின் பயன்படும் மொழியின் அழகு மிகச்சிறந்தது.  முதலிலேயே அதன் காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.   தென்பாண்டித் தமிழும் மலையாள வாசனையுள்ள சொற்களும், தமிழ்ப் பொதுவெளியில் சிறகடிக்கின்றன.  அது முதலில் நமக்குப் பழக்கம் இல்லாதது. கொஞ்சம் சிரமம் தருகிறது என்பதற்காக படிக்காமல் இருக்க முடியாது.   புதிய புதிய தொழில்நுட்பங்களில் விளைவாக எதை எதையெல்லாமோ கற்றுக் கொள்ளும் நாம், நமது மொழியின் ஒரு பகுதியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க எந்தச் சாக்கையும் சொல்வது சரியல்ல.

சிற்சில இடங்கள் மிகவும் அழகான, காவியக் காட்சிகளாக வெளிப்படுகின்றன.  இயற்கையின் செடியும், மரமும், இருளும் ஒளியும் பல இடங்களில் கதாபாத்திரத்தின் தன்மையை/நிலையை சொல்லாமல் சொல்கின்றன. சொல்வது சிறப்பல்ல, சொல்லாமல் சொல்வதே சிறப்பு.  குட்டிமணி மரத்தை அப்பாவாக நினைத்துப் புலம்பும் ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.  ஒரு பெண் என்ற வகையில் பல இடங்களில் ரமணியின் மூலம் எழும் கேள்விகள் அனுபவத்தின் மூலம் இயல்பாக எழுகின்றன.  செயற்கையாகத் திணிக்கப்படவில்லை.  அவை பெண்ணியவாதிகளின் குரலாக இருப்பது இந்த நாவல் படைப்பின் சிறப்பு.  எந்த இடத்திலும் யதார்த்தத்தை மீறி எதுவும் நடப்பதில்லை.  ரமணியின் பாத்திரம் நெஞ்சைவிட்டு அகலாத பாத்திரமாக அல்ல, பெண்ணாகி விட்டார்.

சார்லி சாப்ளினுடைய அம்மாவை விட்டுப் போய்விட்ட அவரது கணவர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  அதே கடைக்கு வரும் சார்லி சாப்ளினுக்கு அவர்தான் தன் தந்தை என்று தெரியும்.  உரிமை கொண்டாடும் நிலையில் அவர் இல்லை.  பார்த்து தந்தைப் பாசத்துக்காக ஏங்குகிறார்.  இது சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த சம்பவம். 

ரமணியும், காட்டுக் குட்டியான குட்டிமணியும் நம் கண்ணெதிரே உலவக் கூடும்.  நம் கண்களில் கருணை வேண்டும் அவர்களைக் காண்பதற்கு. 

மலர்வதியினுடைய ’தூப்புக்காரி’ என்ற முதல் நாவலையும் படிக்கவேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது ‘காட்டுக்குட்டி’.  இன்னும் பல நல்ல இலக்கியங்களைப் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம். 
          

Wednesday, August 17, 2016

Einstein by Walter Issacson

            It was a great pleasure reading biographies authored by Walter Issacson.  I stumbled upon his biography of Steve Job by chance.  I glanced through the pages very reluctantly.  I was not a computer enthusiast.  I use computers only after they became unavoidable aids.  What changed my view about Steve Job was his speech in a convocation function in his alma mater where he could not finish his studies.  I decided that I should read his biography. Only after starting one of my friends told me that Walter Issacson is one of the best Biographers in the world today.  I agreed with him once I finished his biography of Steve Job.  The way the life of Steve Job’s life was narrated was very endearing.  I was hooked to Issacson.

            I came to know of Einstein’s biography by Issacson when I finished the book on Steve.  I have heard about Einstein so often and his quotations have always attracted me.  He had said this about Mahatma Gandhi “Future generations will scarce believe that such as Man ever walked on earth”.   Einstein’s Biography by Walter Issacson was a pleasure to read.  He had all the efforts possible to simplify the scientific concepts to the level of school kids.  But myself, very poor in Physics could not understand most of the theories discussed in the book.  But the scientific theories are mentioned in the book only where it cannot be avoided. Rest of it is excellent. 

            Compass is an ordinary instrument for most of us.  But He as a kid was fascinated by the forces that are not visible which acted on the compass. That was the beginning of his scientific journey.  He said “ The fact that the magnetic needle behaved as if influenced by some hidden force field produced a sense of wonder”. It became the passion of his life to find the hidden forces and the laws that govern their interactions.

            He was as frail as any human being could be.  I had much in common with him in character except his scientific passion and achievement.  Anyone who reads him can identify with him.  To begin with he was a forgetful man like me.  Many times he used to forget to carry key to his house.  He had no respect for the concepts of Nationalism, Patriotism, and hated Militarism, fascism, racism, wars and many problems of the modern world.  He was above any prejudice.  Being a Jew, while he supported the state of Isreal, he refused to become its President when it was offered to him. He was sympathetic to the cause of Palestine people. He liked American political system for its freedom but was always expressed himself against inequality and racism.  He also conceded that soviet system had some advantages but hated the lack of freedom and individual rights.

            He wrote the famous letter to the President of the USA to form a committee of scientists to produce the nuclear bomb in order to prevent the German Nazi rulers from getting it first as it would lead to catastrophe. However, US government did not give him security clearance for participating in the project and never consulted him once the project started.   
 
            It was his activities that were beyond the sphere of science that attracted the attention of millions of people. They did not understand his theories but respected his views which were always independent of prejudices or controlled or guided by the interests of any narrow denomination.

            Because he believed that he was to pursue his scientific goal for the whole of humanity, he like Gandhi, gave more time and attention to the problems of science and humanity.  His first wife collaborated with him in the initial period.  When he found that his marriage to the first wife would distract his research he sought a divorce and after long negotiations was divorced.  But he promised that he had written and discovered a theory that would one day fetch him Nobel Prize and that he would give the money to her if she agrees for a divorce.  This clearly shows his attitude to family, life, science.

            Einstien and Neils Bohr differed on the Quantum theory.  Bohr formulated that Light can behave like a particle or a wave and the experiment to prove the theory would interfere with the results.  Their discussions and correspondence on the subject went on for a long time.  Each of them was unable to convince the other. But they had highest respect for each other.  Once when Einstein after sending a letter questioning the proposals of Bohr went to meet him in person, Bohr looking away was murmuring ‘Einstein, Einstein’ in frustration.  Einstein silently retreated to the other room, understanding the situation.  This shows how much he respected Bohr and his views though they were totally different.


            On the whole it was one of the best books I have ever read. 

Greatest Bengali Stories – Translated by Arunava Sinha

 I had been planning to purchase this book.  But one day I located the Book in my office library.  I had imagined it to be a big volume running into 400 to five hundred pages.  But it turned out to be a book of nearly 300 pages with only 21 stories.  

I was a very good collection of Bengali stories.  The translator, I understand, has published many translations from Bengali to English.  It appears that he has done only translations..  A rare species. 

            Stories of Rabindra Nath Tagore, Tarashankar Bandopadhyay, Sarat Chandra, Sunil Gangopadhay are all included.  But there were others whose stories I have not read earlier.  BIbhutibhushan was one of them.  I knew him to be the author of the story of Ray’s film, Pather Panchali. 
           
            As usual ‘Kabuliwala was included.  A touching story about fatherly affection a peanut seller from Kabul has for a little girl in a rich household.  The kabuliwala, could remember his family only through this little girl.  He has a little girl in his country which he could not visit often.  At the end of the story, he greets the little girl, who has now grown up, on her marriage day, dreaming about his own daughter and his duty.  

Bhibhutibhushan’s story was humourous.  I did not expect this. I had the impression that he was a serious writer on the basis of ‘Pather Panchali’.  His story ‘Einstien and Indubala’ was wonderfully comic.  One day Einstien is invited by a Bengali professor of mathematics for a public lecture. Einstien’s lecture is scheduled to be held on the same day on which another function is to be held in the venue just opposite to the auditorium where Einstien is supposed to speak.  In the final scene, no one, including the wife of the professor, turns out for the function to felicitate Einstein and everyone goes for the function held in honour of Film Actress Indubala.   And Einstien waits for his audience at the venue.  He notices that the auditorium opposite to his lecture hall is crowded and he goes there to find out whether the crowd had come to hear him.   To his and professor’s surprise, next day’s newspapers announce that Einstein attended the function arranged for Actress Indubala. 

This story reminded me of Tamil Nadu where this could have happened any day.  More and more people talk about films stars in Tamil Nadu than about anything on earth. This story should be a fitting tribute to Tamil Nadu and its culture.  It should be translated into Tamil.

             The Story ‘How are you” seemed to portray a upper middle class man who manages everything very ably, i.e. he is succeeding everything he does.  However, the question that arises at the end is whether ‘he lives’ or whether he believes anything.  In the eyes of the world, he is very successful.  The author drives home the point whether there is any meaning in his life.  

            Sarat Chandra’s ‘Mahesh’ is about a cow called by that name.  The farmer who keeps it cannot feed it because of poverty.  Nobody comes forward either to help him feed the cow or to help his life.  But when it dies in hunger and he sells it, the pundit of the village curses him for committing the sin of not looking after the cow. Such is the care we give for the ‘Sacred Cow’.
           
Ritwik Ghatak’s story ‘Raja’ explored the existential crisis of a creative person.  After reading I felt that this may be his own story.

One of the excellent collection of stories.

Friday, August 05, 2016

Old Man and the Sea
 
 I have heard about this story of by Ernest Hemingway.  It has been spoken about as one of the master pieces or classics of literature. I had certain reservations in reading ‘master pieces’ or classics'. Mark Twain is reported to have said that Classic′ is a book which people praise and don't read.”   I have found some times that the so called classics boring.  However, it is not the reason for me for not reading 'Old Man And the Sea' earlier.  I could have started reading even if it is boring initially and continued if in the course of reading I find it interesting. I have so often noticed, seen and touched the copies of this story that I had almost come to a delusion that I had already read it.  Ultimately, I came across the story in a website and decided to read it, just out of curiosity. And it turned out to be actually a classic story.
 It is a very simple story of a common fisherman venturing out into sea for fishing. He had experienced ill luck in that he had not got a good catch for months.  He chooses to go alone for fishing in a small boat.  Even though, a boy who has great respect for this old man offers to accompany him, the old man chooses to go alone.   After waiting for hours, one fish is hooked and only after a long time he realizes that it is a big fish, bigger than the length of the boat he is sailing.  The struggle starts.  This struggle is primitive in the sense it is the test of strength between man and a fish and epic in the sense that it tires them both and almost both of them could have died.  But fortunately, the old fisherman kills the biggest fish he has caught, with the last ounce of his strength and somehow manages to reach the shore, fully exhausted and stays alive.  The story, seemingly simple, has a philosophical undertone, which is subtle.   

This is a simple story told in simple words.  Yes, it is a great story. A mini war of great importance.  I fully endorse the view that it is a classic worth reading.