Wednesday, August 31, 2016

இடக்கை – எஸ். ராமகிருஷ்ணன்



            பல ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைகளின் ஒரு பெரிய தொகுப்பைப் படித்திருக்கிறேன்.   ஒன்றும் ஞாபகத்தில் இல்லை. அவருடைய நூல்களை படிக்க வேண்டும் என்று நினைத்தும், படிக்க முடியாமல் போன அவரது கதைகள், நாவல்கள் பல உண்டுஆனால், இணையத்தில் அவரது தளத்தைப் பெரும்பாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது படித்து விடுவேன்.  

            யூ டியுபில் அவரது பல உரைகளின் காணொளிப் பதிவுகளைக் கண்டு கேட்டபின், அவரைப் படிக்கும் ஆர்வம் மிகுந்ததுஅதன் தொடர்ச்சியாக இடக்கை என்ற புதிய நாவல் வெளிவந்ததும் அதை வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்இந்த நாவலைப் பற்றிச் சிலர் எழுதியதையும் பேசியதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, நாவலைப் படிக்கும் ஆர்வத்தில் இணையதளம் மூலமாக வருவித்தேன்.

            யாருடனோ உரையாடும் தொனியில் இந்த நாவலின் நடை இருக்கிறதுஇணையத்தில் அவரது பேச்சுக்களைக் கேட்ட அனுபவத்தில் வைத்துப் பார்த்தால் அவருடைய பேச்சும், இந்த நாவலின் நடையும் ஒரே போக்கைக் கொண்டிருப்பதாகப் படுகிறது. அவருடைய உரைகளைப் போலவே மிக மென்மையான தொனி. அடிக்கடி குட்டிக் குட்டிக் கதைகள் இடையிடையே வருகின்றன. நாட்டார் கதைகளின் நடையிலும் அதே நேரத்தில், சரித்திர நிகழ்வுகளைச் சொல்வதால், வரலாற்று நாவலோ என்ற மயக்கமும் ஏற்பட்டதுஎந்த முன்மாதிரியும் இல்லாத, ஆனால் வரலாற்றை முன்வைத்துச் சமகாலத்தை நோக்கும் ஒரு கதையாகவே நான் இடைக்கை நாவலைப் பார்க்கிறேன்அதிகாரத்துக்கு எதிரான விமரிசனங்கள் மிகக் கடுமையாக இருந்தாலும் அவை வரலாறு அல்லது வரலாற்றுச் சம்பவங்கள் என்ற மெல்லிய பட்டாடை உடுத்தி வருகின்றனஅது புரிதலை அதிகரித்தாலும் உடனடியான கோபத்தை உண்டாக்காமல், தார்மீக்க் கோபத்தை உருவாக்குவதில் வெற்றி பெறுகின்றன.

            சொல்லப்பட்ட நிகழ்வுகளின் வரலாற்றுத் தன்மையை விட அவற்றின் சமகால எதிரொலிகளையே நான் அதிகம் வாசித்தேன்,புரிந்து கொண்டேன்.    இது தனித்தன்மையிலானது, வரவேற்க வேண்டிய புதிய பாதை, புதிய படைப்பு என்று கருதுகிறேன்.


            வரம்பற்ற அதிகாரத்தின், அநீதியின் வடிவங்களாக வரும் மனிதர்களும்அடக்கப்பட்டே துயரப்படும் மனிதர்களும் இதன் நாட்டார் வடிவ, நடையையும் மீறி நம்மைப் பாதிக்கிறார்கள்.  Folklore பாணியில், மொழியிலும், நடையிலும் இருக்கும்  அதே நேரத்தில் நவீன கருத்தியலையும் உள்ளடக்கிய நாவல். புதிய நடை, மொழி, புதிய நோக்கில் வரலாறு அல்லது அதன் மூலம் சொல்லப்படும் சமகால நிலை அதன் அறம் குறித்த பார்வை இவற்றுக்காகப் படிக்கலாம்சில இடங்களில் தூமகேது, சாமகேது வாக மாறிவிட்டார்தவறுதலாக என்றே நினைக்கிறேன்இனி அவரைத் தொடர்ந்து படிக்கலாம் என்று தூண்டும் படியாக இருந்தது இந்த நாவல்

No comments:

Post a Comment