Thursday, August 18, 2016

விநாயக முருகன் எழுதிய நாவல் ‘வலம்’



            பெரும் எதிர்பார்ப்புக்களோடு நான் வாசிக்க ஆரம்பித்த நாவல் விநாயக முருகன் எழுதிய ‘வலம்’ நாவல்.  ஆங்கிலேயர்கள் சென்னையை எப்படி ஆக்கிரமிப்புச் செய்தார்கள் என்பதில் தொடங்கி, நரி என்ற மிருகத்தின் வழியே, ஆங்கியேயர்களின் அடக்குமுறையை விவரித்துச் செல்வது நாவலின் உத்தி.   நாவலில் ஆங்கிலேய அதிகாரிகள், அவர்களுடைய வாழ்க்கை,  ஆங்கிலேயர்கள் பற்றி நிறையத் தகவல்கள் வருகின்றன.  தகவல்களும், சம்பவங்களும், அடுக்கிச் சொல்லப்பட்டாலும், திருப்தியற்ற தன்மை நாவலின் களமாக இருக்கிறது.  பலமாக இருக்க வில்லை.   கோஹன் என்ற ஆங்கிலேய அதிகாரி செய்யும் அடக்குமுறை, கவர்னரின் ஆட்சியின் நிலை இன்னும் பல வெறும் தகவல்களாக இருக்கின்றன.  எவ்வளவோ தகவல்கள் அமைந்தாலும், நாவல் உணர்ச்சியுடன் பேசத் தயங்குகிறது.  நரிகள் பற்றிய பகுதிகள் மிக விரிவாக அலசப்பட்டிருக்கின்றன. என்னைப் பொருத்தவரை நாவல் எதைப் பொருளாக்கிப் பேச நினைத்த்தோ அதன் முழு வெற்றியையும் பெறவில்லை.  இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.  இன்னும் சிறப்பான நாவல்கள் எழுதுவார் என்றே நம்புகிறேன்.  வரலாறு கதையாகும் தருணம் உணர்ச்சி பூர்வமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.  கரொலின் ஒரு துயரத்தின் சின்னமாக இருந்தாலும் அவளோ மற்ற பாத்திரங்களோ தவிர்க்க முடியாத இடத்தில் தவிப்பதுபோல் நாவலில் தெரிவதில்லை.  கவர்னரும், கோஹனும் தகவல் களஞ்சியங்களாக வருகிறார்கள்


            எனக்கு ஏனோ இந்த நாவல் சிறப்பானதாகப் படவில்லை.  

No comments:

Post a Comment