Sunday, April 30, 2017

பிரபஞ்சன் எழுதிய ‘பெண்’

                 இந்த நூல் பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது. அந்த ஒரு காரணத்தினாலேயே மிக எளிமையான நடையில், எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்டிருக்கிறது.

            புராணக் கதைகளில் சொல்லப்பட்ட பெண்கள், இதிகாசங்களில் சொல்லப்பட்ட பெண்கள், காவியங்களில் சொல்லப்பட்ட பெண்களின் கதைகள் என்று தொடங்கி, நவீன காலத்தில் சாதனைகள், போராட்டங்களில் ஈடுபட்ட பெண்களின் வரலாறுகள் வரை எழுதிச் சென்றிருக்கிறார். 

            பெண்ணிய நோக்கில் பெண்களின் வரலாறு பேசும் இந்நூலை பிரபஞ்சன் என்ற ஆண் எழுதியிருப்பது இதன் சிறப்பு.  அதை ரொம்பவும் வற்புறுத்திச் சொல்ல வேண்டியதில்லை.  அவர் ஏற்கனவே பெண் விடுதலைக்கான குரல் கொடுத்த, கொடுக்கிறவர் என்பது அவரது கதைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும்.  பெண் விடுதலை என்பது அனைவரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்ற புரிதலும் உடையவர்.

            பெண்கள் பொதுவாக இளவயதுச் சிறுமிகள் முதல் இளம் பெண்கள் படிக்க வேண்டிய நூல். 


            பெண் பாத்திரங்கள் இத்தனை பேர் நமது வரலாற்றின் பக்கங்களில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக அனைவரும் படிக்கலாம். 

Dreams from My father, Barack Obama

           Yes, this is the book authored by the previous American President.  He wrote this book before he became the first Black President of the United States of America. Once you read the book you can understand how did he become the President of one of the most racial societies of the world. 

            He had a Black father, who was a intellectual from Kenya.  His mother was a white women.  Both were in Hawai when they fell in love.   At a very young age, his father went to Kenya, leaving him with his mother.  He was brought up by his mother, after his father left them.  His mother married again, this time an Indonesian.  Initially, he lived in Hawai, then in Indonesia.  Then his mother entrusted his care to her parents.  Then he moved to Chicago, thereafter in New York for studies and work.  He had experienced what it is to be a black man in America.  

           One of the most important decisions he took in his life was to become an organizer, after finishing his college.  This shows that he had committed himself to social work.   In my view, this made the man.  He worked as an organizer in Chicago, arranging for collecting people of an area for trying to settle civic problems with the help of the civic authorities.  The values he had imbibed,  from his family or from what he had learnt as a very young lad working in a community, has contributed to his becoming a political organizer in future.  Because he knew what the people want and feel.   After reading this  book, we can understand as to how he became the hope of millions of not only the Afro Americans, but also the american working class.   He taught or showed the ways to organize and struggle for fulfilling the needs of small communities.  I think this had given him the dreams of serving the people of the nation and also helped the American people to realize that he had the qualities of a statesmen to lead America. Political workers or people interested in political work can learn from his experience of first serving small communities that may propel them for greater responsibilities. 

            The second most important part of this book in which he narrates his experiences of visiting Kenya, in search of his father and his roots.  This would have definitely kindled the passions of Afro American people who have been without past history, in the sense that they may not know from where their forefathers came to America what was their authentic and original culture or history etc.  Obama travels to Kenya to meet the family of his father Obama, perhaps he also had the urge know about his ancestors culture.  

           He might have felt that Afro American have been stripped their own history or culture by historical conditions.   He gives a very detailed account.  But as an Indian, I also felt that I or any of us indeed choose to visit our native places, if we are residing in big cities away from the original communities, we would have experienced the similar joys, pleasures and distress that affected him.   However, I must state this account left me somewhat tired.  

            This was one of the books which I had read through very fast.  In fact I was very surprised that I could read so fast about a US President.  However, my speed slowed down a bit when reading about his experiences in Kenya.  The books has been named very aply, as it elaborates and traces the life of his father. His father was an academic, held positions in government of kenya and also by the time of his death had become unwanted for the Government of Kenya, as he was branded as opposing Keyatta, the then President of Kenya. This destroyed his social and financial status and he had become a recluse.   

            In some passages of the book, I felt so close to the emotions expressed by him.  particularly, when he describes his experience of the reactions of the community towards the mixed race marriages and what he really felt.  This I had also felt, as a boy/man born out of inter caste marriage.  The confusions I had about my identity, the insults I felt or the shame I was forced experience.  Ultimately, as in his case, I could come out of these feelings only after knowing that the world is not governed by the prejudices and divisions we create ourselves and there are many others who cross the limits, lines and live beyond and ultimately nothing matters except what you stand for.  

               Only now I recall that some people in America were saying that he is not 'black enough' to be a blackman or white enough to be a President of America.  But he has imbined his fathers intellectual capabilities and I suppose he had not committed the sins of his father in opposing the establishment.  

            A very excellent book.  Five Star. 

Thursday, April 27, 2017

வரலாற்றின் ரகசியங்கள்

வரலாற்றின் புதைகுழிகள்
மூடியே இருக்கட்டும்

அழுகிப்போன கதைகளைக் கூறும்
அடிவாங்கிய எலும்புகள்
வெளியே வரக்கூடும்

நமது கற்பனையில்
உருவான ராம, சோம, காம ராஜியம்
புழுத்துப் போன பண்பாட்டின்
நாற்றமாக வெடிக்கக்கூடும்

ஆங்கிலேயர்களுடன்,
ஆண்டவர்களுடன்,
கைகோர்த்து ரத்தத்தை உறிஞ்சிய
நம்ம ஊர்ப் புண்ணியவான்களின்
அடையாளம் தெரிந்துவிடக் கூடும்

வரலாற்றின் இருளில் மறைந்த
புதிய முகங்கள்,
மதமென்னும் பேயினால் நிகழ்ந்த
கொலைகள்
மீண்டும் மீண்டும்
நினைவுக்கு வரக்கூடும்

பசிக்கும் பட்டினிக்கும்
பயந்து
கொலைகாரக் கூட்டத்தில்
சேர்ந்த
இளிச்சவாயர்களும்
மன்னிப்புக் கோரக்கூடும்

சாத்திரங்களில் பெயரில்
தமக்குச் சாதகமாகப் பேசும்
சதிகாரக் கும்பல்
கூச்சல் இடக்கூடும்
அதில் அடிபட்ட வலிகளின் அலறல்கள்
மூழ்கிவிடக்கூடும்

வரலாற்றின் சவக் குழிகள்
மூடியே இருக்கட்டும்

பேரரசர்களைக் கொலைகாரர்கள் என்றும்,
கொலைகாரர்களாய் அறியப்பட்டவர்கள்
பேரரசர்களின் கையாட்கள் என்றும்
பேரரசராக விரும்பியவர்கள் என்றும்
நாம் அறிந்துவிடக்கூடும்

புனிதர்களாய், ஞானவான்களாய்,
தர்ம ராஜாக்களாய் சொல்லப்பட்டவர்களின்
போஸ்டர்கள் கிழியக்கூடும்
அவர்களின்
குருதிவழியும் கோரைப்பற்கள்
தெரியக்கூடும்

மனிதர்களை மனிதர்களாய்ப்
பார்க்கத் துணிவிருந்தால் மட்டுமே
வரலாற்றின் புதைகுழிகளைத்
திறந்துவிடு
புதிய உண்மைகள்
ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொருத்தர் பார்வையிலும்
கேலியாய்ச் சிரிக்கக்கூடும்.

Monday, April 24, 2017

கடைசிக்கு முந்தைய ஆசை

நரகத்திலிருந்து
விடுபட்டபோதிருந்த மகிழ்ச்சி
இப்போது இல்லை

சுவர்க்கம் என்றே
சொல்லுகிறார்கள் இதை

சோறும் தண்ணீரும்
சொகுசும் பன்னீரும்

எல்லாம் கிடைத்தால்
அதற்கு என்ன பெயர்?

எதையாவது நோக்கித்
தவமிருந்தால்
அது கிடைக்கும் போது இன்பம்

கிடைத்தபின்
இன்னொன்றை வேண்டித்
தவம்

கட்டக் கடேசி சொர்க்கம்
அப் பேரின்பம் கிடைத்தபின்
எதற்குத் தவம்?

மீண்டும் நரகத்துக்கே சென்று
தவமிருப்பான் மானிடன்

மலைஉச்சியை அடைந்துவிட்ட
நார்ஸிஸஸ் போல....

Sunday, April 23, 2017

நிழலுறைதல்

நினைத்துக் கொண்டிருந்தேன்
நிழல்தான்
என் பின்னால்
வருகிறதென்று

கொஞ்ச தூரம்
என்னுடன் வந்தது
பின்னர்
நானும் அதற்கிசைந்து
நடக்க ஆரம்பித்தேன்

நான் பார்த்திராத என்னை,
பலகோணங்களில்
காட்டிய நிழல்
தன்னையும் காட்டியது
தரைகளுக்கேற்றாற்போல்

தேவை
நிழல்தர ஒரு உடலல்ல

உடல் உறையும் ஒரு நிழல் 

Deflecting the anger – History of Nationalism



            There are thousands of books, articles and speeches about the british rule in india.  They explain and describe the levels of exploitation of our resources and manpower which went into Britain. These authors and freedom fighters never talk about the actual perpetrators of the atrocities.  Similarly, another school of thought is claiming attention about the Muslim rule in India. Propagandists of this thought also do not speak about the actual people who implemented the schemes of rulers.

            The landlords who controlled land and other resources.

They were indian and they never perceived themselves as Indians.  They only acted as lords of those who serve them in their professions.  It is they who actually ruled the countryside and villages.  They controlled agriculture, what might have constituted trade or industry through their money, manpower and politics.  They were in fact the Kings of the area and called so. While the British rulers notified the amount, it is only the landlords who exploited the peasants.  Yes, many fought against the British but not against the oppression but for their freedom of oppressing the serfs under their control.  Yes they were also under the hammer of british authority.  They had their own compulsions.  They were part of history just as the British soldier, or Collector or Governor General was part of history.  While, many including Shashi Tharoor eloborately describe the roles played by the Empire, Emperors, Governors General and their coharts, the role played by the local kings, jamindars are not mentioned clearly or even mentioned in their discourses against the British for their rule.  Those locals who aided and abetted the British rule are also guilty of cooperation and committing the same atrocities as the British.  If britain and muslim rulers are to be blamed then their associates have also to be blamed.

            This way even the so called worst rulers, had their accomplices in indian aristocracy.  Without their active cooperation, it would not have been possible for British even to conceive of their rule. It is right time we also talked about the accomplices in the crimes committed by the British Empire.

            Yes many historians have published books on the exploitation of peasants during british rule. But at the popular level our politicians and media have not highlighted this aspect as they had highlighted the british government oppression.

            Our own masters, landlords, kings and their satraps were more in number than the number of britishers, who opporessed.  Highlighting this may be treated as ‘anti-nationalism’.  That apart, if we treat our fellow citizens, no foreign oppressor can hold us down for long.
           

            Who will educate Indians that our own brothers were the worst kind of oppressors, even today?

Sunday, April 16, 2017

ஒவ்வொரு நல்ல புத்தகத்தின்
உள்ளும்
வலம் வருகிறது
ஒரு இதயம்

அதன் படபடப்பில்
நானும் மகிழ்ந்து
சிறகைப் படபடக்கிறேன்
சிலிர்த்தாட்டுகிறேன்
என் காக்கைத் தலையை

அதன் வார்த்தைகளில் இருந்து
ரத்தம் பாய்கிறது
எனது உடலில்
சக்தி பீறிடுகிறது
எனது மூளையில்

அமெரிக்காவின் ஒபாமாவின்
அடையாளக் குழப்பம்
எனதாகிறது

கார்ஸியா மார்க்வெஸ்ஸின்
கொலையுண்ட மனிதன்
என் ஊரிலிருந்தான்

ஜெ.எம் கோயட்ஸியின்
பேராசிரியர்
சிறுமையில் வீழும் போது
அந்தப் பெண்ணின் குரல்
இந்தியப் பல்கலைக் கழகங்களில்
எதிரொலிக்கிறது

நாமெல்லாம் வெவ்வேறு
நாடென்றும் இனமென்றும்
மொழியென்றும்
யார் சொன்னது?

நாம் பறவைகள்
பூமியில் இருக்கும்
அத்தனை மரங்களும் பழங்களும்
நமது சொந்தமே

ஒவ்வொரு புத்தகத்தின்
உள்ளும்
வலம் வருவது
ஒரு இதயம்

அது நமது.
வார்த்தைகள்
இறுகிப்போன
செங்கற்களாகிவிட்டன

ஏற்கனவே
உங்கள் தொழிற்சாலைகளில்
சட்டங்களில்
அச்செடுக்கப்பட்டவை

நான்
கட்டவேண்டியது
மிகப்பெரிய மாளிகையல்ல
குருவியிருக்கும் சிறுகுடில்

அதற்கு என்ன வேண்டுமானாலும்
பெயரிடுங்கள்
கவிதை என்று மட்டும்
சொல்லாதீர்கள்

உருவகத்தை
உவமைகளை
மறைபொருள்களை
உங்கள் ’ஆகா ஓகோ’க்களை
வாங்கும்
எதுவும் இல்லை

அதில் என்
இதயத்தின் குரல்
பதிந்திருக்கலாம்

Monday, April 10, 2017

பெரிதினும் அரிது கேள்

பெரியமனிதர்களின்
பெரிய கனவுகள்

பெரிய எழுத்தில் பெயர்
பெரிய பத்திரிக்கையில்
பெரிய புகைப்படம்
பெரிய விருது
பெரிய மாநிலம்
பெரிய நாடு
பெரிய புகழ்
பெரிய சிலை
பெரிய கடவுள்

அப்படி என்ன
சிறியது குறித்த வருத்தம்?

பெரிய படை என்ன
தோற்காமல் போயிற்றா?
பெரிய தலைவர்களும்
பெயர் தெரியாமலே போயினர்

எல்லாப் பெரியவைகளும்
எல்லாச் சிறியவைகள் போலவே
எல்லாப் பொருளும்
சிதைவடைவனவே

பெரியதை, சிறியதை விட்டு
அரிது கேள்
அரிதினும்
அரிதுகேள்

மனதில் விஷம்

மனதுக்குள்
விஷ நகம் ஒன்று
வெட்ட வெட்ட
வளருகிறது

கொஞ்ச நாட்கள்
வெட்டாவிட்டால்
நீண்டு
யாரையாவது
எதையாவது
தீண்டி
விஷமேற்றிக்
கொன்று விடுகிறது

எதை வைத்து
விஷ நகம் அறுப்பது?
என்னையே கொட்டிவிடும்
ஆபத்து இருக்கிறது
அறிவெனும் ஆயுதம் போதும்

மிகக் குறைந்த மனிதர்களிடம்
இருக்கும் ஆயுதம் அது
அதுவும்
அடுத்தவரைக் குத்துவதற்கே
பயன்படுகிறது

மனம்
மெழுகாக இருந்தால் நலம்
மரமாக இருந்தால் எளிது
கல்லாக இருந்தாலும்
கஷ்டப்பட்டு செதுக்கலாம்

வெட்டாத விஷநகம் வளர்ந்தால்
மனமே விஷமாகிவிடுகிறது
மற்றவர்கள் கொட்டிவிட்டாலும்
அப்படியே

போராடிக் கொண்டிருக்கிறேன்
விஷநகம் வளராமல்
நீங்களும் ..


இல்லையெனில்..

Wednesday, April 05, 2017

உனது சிறகுகள்

புதிய சிறகுகள்
முளைத்துவிட்டன உனக்கு
பறந்து செல்ல விரும்புகிறாய்

நான் ஒன்றும்
உனது கால்களைத் தடுக்கும்
சங்கிலி அல்ல

என் பார்வையிலிருந்து
ஒளிந்து கொள்கிறாய்
வேவு பார்க்கும்
எதிரியல்ல நான்

தீபத்தை ஏந்திக் கொண்டிருக்கும்
பழைய விளக்குத் தூண்
தூண் பழையதென்று
ஒளியை விலக்காதே

இருளைப் போர்த்தியிருக்கும்
உலகம்
உனது தீச்சுடர்
எரியத் தொடங்கியதும்
உன் வழியில் செல்லலாம்

வெளிச்சம் எங்கிருந்து
வந்தால் என்ன?
புதிய திசையில்
பயணம்
தொடரவேண்டும்
நீ



உனது

உனது பெயர் கெட்ட பெயர்
உனக்குத் தெரியாது
முன்னரே எழுதப்பட்டுவிட்டது

உன் உடலைவிட்டு
உரித்துவிட முடியாது
உனது பெயரை

வேறுபட்ட எதையும்
எங்களால்
சகிக்க முடியாது

புதிய பேரரசின்
முரசுகளை
அடித்துக் கொண்டிருக்கிறோம்
உனது முதுகுத் தோலில்

எங்கள் பெருநிலத்தில்
அடையாளத்தைக் களைந்துவிட்டுக்
கலந்துவிடு

உன் பெயரை
உன்னுடைலை விட்டுப்
பிரித்துவிட முடியாது
உலகைவிட்டு உன்னைப்
பிரித்து விடுவோம்

வார்த்தைகளின் நயத்தில்
சட்டத்தின் இடுக்கில்
தத்துவப் பிதற்றலில்
ஒளிந்து கொள்ள முயலாதே


எங்கள் சாட்டைகள்
நீளமானவை
காத்திருப்போம்
நீயே வெறுத்து
வெளியே வரும்வரை

அன்று உதிரும்
உனது சிறகு
புதிய பிளாஸ்டிக் சிறகுகள்
தருவோம்

நீ பறக்க முடியாதென்று
தெரிந்துதான்
பறந்துவிடக் கூடாதென்றுதான்

கேள்வி கேட்பேன்

எனக்குச் சொல்லப்படும்
நீதிகள் மீது
எனக்குச் சந்தேகம்
எழுகிறது

வார்த்தைகளின் இடையில்
மறைந்திருக்கும்
வன்முறையை பிடித்து
ஒதுக்க விரும்புகிறேன்

பிரதிவாதி பயங்கரம்
என்றாள் அம்மா
விதண்டா வாதம்
என்றவரும் உண்டு
எல்லோரையும் திட்டுவதேன்
என்றாள் இல்லாள்
விதிகளுக்குள் புதைக்கப்பட்ட
மனித எலும்புகளை
எண்ணியதில்லை அவர்கள்

எல்லா விசாரணைகளையும்
வரவேற்கிறேன்
இன்னொரு மனிதனைக்
கட்டுப்படுத்த நினைக்கும்
எதனையும்
குறுக்கு விசாரணை செய்ய
விரும்புகிறேன்

நானொன்றும் கடவுள் அல்ல
மனிதன் என்பதனாலேயே
கேள்விகளை எழுப்புகிறேன்


எந்தத் தியாகங்களும்
யாருக்கும்
நினைவிருப்பதில்லை
சில நாட்கள் கழித்து..

மாபெரும் பேரரசுகளை
ஆண்ட மன்னருக்காக
உயிர்விட்டவர்கள்

நாட்டுக்காகப்
போரிடப் பணிக்கப்பட்டு
மிக எளிதாக
ஏமாற்றிக் கொல்லப்பட்டவர்களும்,

பெரும் திட்டங்கள் தீட்டி
மரணத்தைத் தழுவியவர்களும்

யாரையும் நினைவுகூர்வதில்லை
யாரும்

பெயர் பொறிக்கப்பட்ட
பல கல்வெட்டுக்களை
வாசிக்கக் கூட முடிவதில்லை
அவற்றை மொழிபெயர்த்துப் போட்டாலும்,
யாருடைய முகமும்
பெயரும்,
ஆளுமையும் தெரிவதில்லை

வரலாற்றின் பக்கங்களை
வாசித்தவர்கள் கூட
மீண்டும் அதே தவறுகளைக்
குற்றங்களை, துரோகங்களைச்
செய்கிறார்கள்

இன்றைக்கு
நீதியை,
வாழ்வை
சொர்க்கத்தைத்
தரமுடியாதவர்களும்
பெற முடியாதவர்களும்
எதிர்காலத்திலோ
இறந்த பிறகோ
பெறுவது  எப்படி?

வாழ்க்கை என்பது நிகழ்காலம்
இங்கே
வேண்டும்
நீதியும் வசதியும்

கால காலங்களுக்கும்
நிலைத்திருக்க 
ஏன் இந்த மனிதர்களுக்குப் 
பேராசை?

ஒன்றும் ஆவதில்லை என்று
தெரிந்த பின்னும்
எதற்கு இந்த 
நினைவலைகள்
நினைவகங்கள்