Tuesday, August 23, 2016

வீரம் என்பது

எல்லோரும் நீதிமான்கள் போலவே பேசுகிறார்கள்ஆனால் கொள்ளைக்காரர்களாகவே விரும்புகிறார்கள்எல்லா விதிகளையும் ஒழுக்கங்களையும் போதிக்கிறார்கள். அதைப் பின்பற்றாதது மட்டுமல்ல, பின்பற்றுகிறவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்றே நம்புகிறார்கள்பணத்தைச் சேர்த்துவிட்டால் எல்லாம் சேர்ந்துவிடும் என்றே முடிவு செய்து விட்டார்கள்இப்படிப்பட்ட உலகில்தான் நாம் நீதி, நேர்மை, உண்மை, சமூக சமத்துவம் பற்றிப் பேச வேண்டி இருக்கிறதுஆனால்பேசாமல் இருந்துவிட்டால்.. நமக்கெதற்கு வம்பு என்று கண்ணை மூடிக் கொண்டுவிட்டால், நாம் நன்றாக இருக்கலாம் என்பது உண்மையாநாம் இந்த சமூக அநீதிகளின் பலியாடுகள் ஆகாதவரை அது உண்மையேஆனால் ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சமூகத்தின் இருண்ட பகுதிகளில் சிக்கிக் கொள்ள நேர்ந்துவிட்டால் ? சும்மா இருந்துவிட முடியுமா? அது ஒரு தேர்வாக இருந்துவிடுமா? அப்போது நமது தேவை என்ன? இதை எண்ணித்தான் நாம் ஏதாவது ஒரு வழியில் இந்த சமூகத்தின் உறுப்பாக இருந்து அதன் இழிவுகளை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

            சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடவோ, கருத்துச் சொல்லவோ எத்தனிக்கும் யாரையும் இச்சமூகம் சும்மா விட்டு விடப்போவதில்லைஅவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்அந்தவிலை நம் வாழ்வை மிக மோசமானதாக ஆக்கும் வரையில் ஒவ்வொரு மனிதனும் அந்த வேலையைச் செய்யலாம்களப்போராளியாக இருப்பவனுக்கு ஒன்று சேர்ந்து போரிட துணை கிடைப்பதில்லை.   எழுத்தாளனுக்கோ எழுத ஊடகமோ, ஏன் மன நிலையோ கூட கிடைப்பதில்லைஆனாலும் உலகம் மாறிக் கொண்டுதான் இருக்கிறதுமுந்தைய நிலைமையை விட பல நல்ல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் யாருமே எதுவுமே செய்யாமல் மாறுதல்கள் நிகழுமா?

            எந்த அநீதிக்காகவும் போரிடுபவன், எழுதுபவன் கடைசி விலையாக கொடுக்க வேண்டியது எது என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணங்கள் ஏற்படும்உயிரைக் கொடுத்துத்தான் ஒரு நீதியைப் பெற வேண்டும் என்றால், நான் அதை ஆதரிக்கவில்லை. ஏனேனில் எந்த நீதியையும் விட மனிதனின் உயிர் புனிதமானதுஅவன் தோற்றுப் போகலாம், அடிக்கடி தோற்றுப் போகலாம், சமரசம் செய்து கொள்ளலாம்ஆனால் உயிர் வாழவேண்டும்அவன் அந்தப் போரில் ஈடுபடாவிட்டாலும், வேறுயாராவது அதை முன்னெடுத்துச் செல்லும் போது, முந்தையப் போராளி எங்கே தவறி விழுந்தான் என்பதைக் கற்றுக் கொண்டு மேல் செல்வான்இது தான் எந்தப் போராட்டத்தினதும் பாதையாக இருக்க முடியும்.

            உயிரைக் கொடுத்துப் பெற வேண்டியது எதுவும் இல்லை


பலமுறை வீரம் என்பதே வன்முறையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரில் அதிகம் பேரைக் கொன்றவன் வீரன்அப்படி முடியாத நிலையில் இன்னொருவனால் கொல்லப்படுகிறவனும் வீரன்என்னைப் பொறுத்தவரை, கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலக்கை நெருங்குகிறவனே வீரன்உயிரைக் கொடுத்து விடுகிறவனோ, எடுத்துவிடுகிறவனோ அல்ல.  

No comments:

Post a Comment