Thursday, July 09, 2009

இது கல்விக்கூடமா? இங்கு அறிவு வளறுமா?

நான் ஆசிரியன் அல்லன். சென்னையில் பள்ளிக் கூடத்து ஆசிரியரின் நிலைமை பரிதாபகரமானது. குறிப்பாக, தனியார் பள்ளிகளில். முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளம் 2000 கிடைத்தால் அதிருஷ்டசாலி. பத்தாயிரம் பதினைந்தாயிரம் கிடைத்தாலோ சொர்க்கவாசி. அரசு நிர்ணயித்த ஊதியம் 25000 வரை.(( இதே இடத்தில் ஒட்டுனராக இருந்தால் குறைந்தபட்ச

சம்பளம் 6500லிருந்து 10000 வரை. ஒரு ஒப்புமைக்குத்தான்)) காலையிலிருந்து மாலைவரை பள்ளிக் கூடத்தில் கழிக்கவேண்டும். மாணவன் ஏதாவது வகுப்புத்தேர்வில் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியருக்கு பாடம் புகட்டும் நிர்வாகம். மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்காணிக்க வீடியோ கேமராக்கள். நமது நாட்டின் (எல்லாச்) சிறைச்சாலைகளில் கூட இந்த வசதி கிடையாது. மனப்பாடம் செய்தேதீரவேண்டிய வழியில் தேர்வுகள். ஒரு மதிப்பெண் குறைந்தாலும் கைவிட்டுப் போகும் மாணவனின் ஆசைக்கனவுகள். எல்லோரும் பொறியியல் படித்தே ஆகவேண்டிய மாதிரி அவர்களுக்கு மட்டும் நல்ல சம்பளம். புத்திசாலி என்றால் பொறியியல் படிப்பதைத் தவிர வேறு கனவு காண முடியாத படிக்கு சமூக நிர்ப்பந்தம். (ஆசிரியராயிருக்கும் ஒருவர்- மத்திய வர்க்கம்- மணப்பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்) இதையெல்லாம் வைத்துக் கொண்டு விஞ்ஞானிகளை உருவாக்கி வல்லரசாகி.. ...போதுமென்று நினைக்கிறேன்.கோச்சிங்/டியுஷன் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. விளம்பர வாசகத்தை மாற்றிச் சொன்னால் "there are things that you can't buy with money. For every thing else there is coaching"(Mastercard advt-changed a bit). இதனால் யாருக்கும் சுய அறிவே தேவையில்லை. சொந்தச் சரக்கே-creativity-தேவையில்லை. நம்ம ஊரின் காபியடிக்கும் வேலைக்கு-imitating technology of the west-சொந்த அறிவால் எந்தப் பயனும் இல்லை.

ஒரே ஆச்சரியம் இத்தனை தடைகளையும் தாண்டி சில புத்திசாலிகள் -creativity உள்ளவர்கள் - வந்து விடுகிறார்கள் (அவர்கள் வெளிநாடு போகாதிருக்கும் கொடுமையைச் செய்தால்) அவர்களை எப்படி விலைக்கு வாங்கி, செயலிழக்கச் செய்வது? அதை அரசு அதிகாரிகள் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.- எல்லாம் வழக்கம்போல்தான். ஏற்கனவே சொன்னவுங்க ஏமாளி ஆனாங்க எல்லாந் தெரிஞ்சிருந்தும் --- வே. ரா.


No comments:

Post a Comment