Monday, February 27, 2017

பொய்யும் வழுவும் - பொ. வேல்சாமி

11        

  பொ. வேல்சாமி என்ற பெயரை 90களில் அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும், அவரது நூல்களைப் படித்ததில்லை.  இக் கட்டுரைத் தொகுப்பைப் படிக்க வேண்டும் என்று பல முறை நினைத்தேன்.  இப்போது தான் வாங்கினேன்.  தமிழ் படித்துவிட்டு, வேறு ஏதோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தீவிரமான ஆர்வம் கொண்டாலன்றி, ஆய்வுக் கட்டுரைகள் எழுத இயலாது.  அவருக்குள் சொல்லித் தீரவேண்டிய ஏதோ இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நூலை வாங்கினேன்.

            அவரிடம் இருக்கும் வரலாறு சமூகம் குறித்த அக்கறைகள் சாதாரணமானவர்களும் கொள்ள வேண்டிய அக்கறைகள். 

            தமிழ் பிராமி எழுத்துக்கள் பற்றிய கட்டுரை மிக மிக முக்கியமானதாகத் தெரிந்தது. தமது சான்றாதாரங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அவர் பெரும் மேதைகளி முடிவுகளைவும் அவற்றின் துணை கொண்டு உரசிப்பார்க்கிறார். இந்த்த் துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது.   தமிழ் ஆய்வுக்களத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டியது.  அவர் தரும் செய்திகளைத் தொகுத்தால், பிராமி எழுத்துருவில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்களுடன், பல வடமொழிகள் (சமஸ்கிருதம், பாலி, இன்னும்பல) மற்றும் தென்மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முன்னர் எழுதப்பட்டன என்று அறிகிறோம்.   அதுவரை வாய்மொழியாக வழங்கி வந்த மொழிகளில், முதலில் அரசாணைகளும் பின்னர் செவிவழிப் பரவியிருந்த செய்யுள்களும் பாடல்களும் எழுத்தில் பதிவு பெற்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது. மிகச் சிறப்பான கட்டுரை அது.


            மற்றக் கட்டுரைகளும் சிறப்பானவைகள்.  படிக்க வேண்டிய புத்தகம். 

No comments:

Post a Comment