எடியே.....
தாஹா
மாடாயி
இந்த
நூலை எழுதியவர் வைக்கம் முகம்மது பஷீரின் மனைவியின் அனுபவங்களை அவரிடம் கேட்டு எழுதியிருக்கிறார். தமிழில் தந்தவர் சுகுமாரன். மொழிபெயர்ப்பும் சிறப்பாக
இருக்கிறது.
எனக்கு
மிகவும் பிடித்த ‘வைக்கம் பஷீரைப் பற்றி எது வந்தாலும் படிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறது.
அவர் என்னைப் போல் பலருக்கும் பிடித்த எழுத்தாளராக
இருப்பது அவரின் தனித்த ஆளுமையில் விளைந்த கதைகள் காரணமாகவே.
சமூகத்தின்
அனைத்துப் பக்கங்களையும் கோடிட்டுக் காட்டியவர் பஷீர். அவருடன் வாழ்ந்த ’பாபி’யின் வார்த்தைகளும் படிக்கச்
சுவையாக வே இருக்கின்றன. படிக்க வேண்டிய புத்தகம்.
***
தெய்வம் என்பதோர்...
தொ.
பரமசிவம்
தமிழ்நாட்டின்
சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான தொ.பரமசிவம் அவர்களின் நூல் இது. நான் படிக்கும் அவருடைய மூன்றாவது நூல். நாட்டார் வழக்காறுகளை, எங்கோ படிந்து மறைந்து இருக்கும்
வரலாற்றின் சுவடுகளைக் கண்டறிந்து நம்மைப் புளகாங்கிதப் படுத்துவதில் இவருக்கு இணையில்லை. வார்த்தைகளில் எளிமை, கருத்துக்களைத் தெளிவாக எழுதும்
விதம், ஆழ்ந்த பண்பாட்டு ஞானம் அனைத்தும் கொண்ட கட்டுரைகள். இவ்வளவு விரைவாகப் படித்துவிடுவேன் என்று நினைத்ததில்லை.
****
அசோகமித்திரனின்
கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இயல்புநவிற்சியான
தொனியில் கதைகள். இரண்டு தொகுதிகளையும் படித்துவிட்டால் அவரைப் பற்றிய ஒரு முழு வரைபடம்
கிடைக்கக்கூடும்.
No comments:
Post a Comment