தமிழ்நாட்டின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான தொ.பரமசிவம் அவர்களின் நூல் இது. நான் படிக்கும் அவருடைய மூன்றாவது நூல். நாட்டார் வழக்காறுகளை, எங்கோ படிந்து மறைந்து இருக்கும் வரலாற்றின் சுவடுகளைக் கண்டறிந்து நம்மைப் புளகாங்கிதப் படுத்துவதில் இவருக்கு இணையில்லை. வார்த்தைகளில் எளிமை, கருத்துக்களைத் தெளிவாக எழுதும் விதம், ஆழ்ந்த பண்பாட்டு ஞானம் அனைத்தும் கொண்ட கட்டுரைகள். இவ்வளவு விரைவாகப் படித்துவிடுவேன் என்று நினைத்ததில்லை.
ஆனால் ஒன்று தோன்றுகிறது.
தன் ஆய்வுப் புலத்தின் வெளிகளை குட்டிக் குட்டிக் கட்டுரைகளாக எழுதும் இவர்
ஒரு பொருளை எடுத்து விரிவாக எழுத வேண்டும்.
அந்தக் காலத்தில் கல்கண்டு பத்திரிக்கை அல்லது இந்தக் காலத்தில் – ட்வீட்டர்
பக்கங்களைப் படித்தது போல இருக்கிறது. ****
No comments:
Post a Comment