Tuesday, March 07, 2017

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

மூன்று வேட்டை நாய்களுடன் 
வருவது கடவுள்தான்
 கதைகளில் கருணை வழியும்
முகத்துடன் 
நீதிமான்களுக்கு 
வெற்றிதரும் 
அதே கடவுள்

எல்லாவற்றையும் பார்க்க முடிந்தவர்

எதையும் பார்ப்பதில்லை

ஒரு நாய் கருப்பு அங்கியுடன்
பிறந்தது
உயர்ந்த மேஜைகளில் அமர்ந்து
கீழே இருக்கும்
நம்மை
முறைத்துக் கொண்டே இருக்கிறது

இன்னொன்று
மயிலிறகு போன்ற தோகையுடன்
வளர்ந்து 
சிரிக்க முடியும் என்றாலும்
சாமரம் வீசியே பழகியது

மூன்றாவது

வெள்ளுடை தரிப்பது
வேஷங்களை மாற்றிக் கொள்வது
கடவுளின் நாமத்தைப் பாடி 
ஏழைகளிடமும்
ஏழைகளின் நிலை பாடியே
கடவுளிடமும் 
வரம் கேட்பது

இவர்கள் பவனி வருகையில் 
தெருவும் ஊரும் 
அடங்கிப் போய்விடுகின்றன
தெருநாய்கள்
 அச்ச்சத்தில் ஒதுங்கி விடுகின்றன

கடவுள் வேட்டை நாய்களுக்கு வீசும்
மாமிசத் துண்டுகளீன் எச்சங்கள்
விழுந்தால் 
தெருநாய்கள் இருக்கலாம்

தெருநாய்களுக்கென்று

தனிக்கடவுள்

படைக்க முடியுமா
?

No comments:

Post a Comment