அவன் வந்துவிட்டான்
பாதுகை ஒன்றை எடுத்துக்
கொண்டு
யாருடையதென்று
தெரியவில்லை
ராமனுடையது என்று
அவன் சொன்னாலும்
ராவணனுடையதாகவும்
இருக்கலாம்
அவனுடையதாகவே இருக்கலாம்
பரதன் ராவணனோடு
சேரலாம்
சீதை தீக்குளிக்க
மறுக்கலாம்
நீங்காத பழியுடன்
ராமன் பதவி விலகலாம்
எப்படி எழுதலாம்
இந்தக்
கதையைக்/கவிதையைக்
என்பதைத் தீர்மானிக்கும்
பாதுகையைச்
சுமப்பது அவசியம்
யாருடையதானால்
என்ன?
வால்மீகி வந்தால்
கதையை மாற்றிவிட
மாட்டானா?
ஜெயித்தவனுக்காக
அருமை...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThe slippers of Ram gets importance only because he was the winner. Is that the core content? Or the world is ready to give importance to even a slipper of winner. I just wanna know if my understanding is correct.
ReplyDelete