Friday, March 31, 2017

ஆன்மீகவாதியாவதற்குக் குறுக்கு வழி
            சமீபத்தில் ஆன்மிக வாதிகள் (ஸ்பிரிட்சுவலிஸ்ட்) பெருகிவருகிறார்கள். அல்லது அரசியல் நிலவரத்தைத் தெரிந்து கொண்டு, அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் கவனித்து தங்களை வளப்படுத்திக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டுவதற்கான எல்லா கார்பரேட் தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

            முதலில் இது போலவே கார்பரேட் சாமியார்கள் இருந்தார்கள்அவர்கள் என்ன ஆனார்கள்? எதைச் சேர்த்துவைத்தார்கள்? இப்போது அவர்களின் சீடர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் எல்லாம் விளங்கிவிடும்.

            தீரேந்திரப் பிரம்மச்சாரி என்பவர் இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது பெரும் செல்வாக்குடன் இருந்தார்மஹரிஷி மகேஷ் யோகி என்பவர், நூற்றுக் கணக்கில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருந்தார்அமெரிக்காவில் பெரும் பண்ணை இல்லங்களை வைத்திருந்தார்மஹரிஷி ரஜ்னீஷ் என்றும் யோகி இது போலவே வலம் வந்தார்அவர்களெல்லாம், பெரும் பெரும் பணக்காரர்களாக பெரும் ஆடம்பரத்துடன் வாழ்ந்தார்கள்அவர்களுடைய சொத்துக்கள் அவர்களுடைய ஆகச் சிறந்த சீடர்கள் என்னும் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.  ஒருவரைப் பஜனை பாடிக்கொண்டே இத்தனை சொத்துக்களை ஒரே தலைமுறையில் அடையமுடியும் என்றால் அது இது மாதிரி ஆன்மீக வாதிகளின் சீடராக இருந்தாலேயே முடியும்அதற்கென சில திறமைகள் தேவைப்படும். பேச்சுவன்மை, தகிடுதத்தங்கள் செய்தும் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் திறமை, போட்டியாளர்களாக வருகிறவர்களை ஒதுக்கிவிடும் புத்திக் கூர்மைஇதையெல்லாம் நேர்மறைக் குணங்களாக இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்- இன்றளவும் அரசியல் கட்சிகளின் உள்ளே நிகழ்பவைதான் இவை.   சாமியார்களும், அவர்களின் சீடர்களும் பொன்னையும் பொருளையும், ஆடம்பரங்களையும், தமது ஆதரவாளர்கள் கூட்டத்தையும் இப்படித்தான் சேமித்து வைக்கிறார்கள்எல்லா (மதம் சார்ந்த அல்லது வேறு நிறுவனங்களையும் போல) இவையும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்/செய்யும்.

            சமீபத்தில் எழுந்த புதிய புதிய சாமியார்களும், பெரும் செல்வங்களைச் சேர்த்து, ‘பண்பாட்டு சிக்கல்களில், பொருளாதார, பேராசையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் மத்திய உயர் மத்திய வர்க்கத்தின் மேய்ப்பர்களாக இவர்கள் இருப்பதும், ஏதோ நிம்மதியைக் கடையில் வாங்குவது போல் இவர்களிடம் வாங்கிவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் சீடர்களுக்கும் மயக்கம் தெளிய வழியில்லை என்றே தோன்றுகிறது.

            இப்படி ஆன்மிக வாதியாவதற்கு குறுக்கு வழிகள் சிலமுதலில், பழைய இலக்கியங்கள், தத்துவம் என்று சொல்லப் படும் பிதற்றல்கள், இவற்றைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டு, அவ்வப்போது தங்கள் வார்த்தைகளில் அவை தங்களுடைய சொற்களே போல பேச வேண்டும்.   அவற்றில் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் இருந்தால் அகில இந்திய அல்லது அகில உலக பெருமை வாய்க்கும். இந்த மேற்கோள்கள் யாருக்கும் புரிய வேண்டும் என்ற தேவையில்லைஇப்படித்தானே அரசியல் நடக்கிறதுஎன்று  நீங்கள் சொல்ல்லாம்ஆமாம். அதைத்தான் சொல்கிறேன்.     பகட்டும், பகட்டு வார்த்தைகளும், படாடோபமும், சொத்தும், பெரும் நிறுவனங்களும் ஆன்மீகம் என்று அவர்கள் சொல்லிக் கொள்கிற எதனுடனும் தொடர்பில்லாதவை.   

            இது போல இன்னொரு கோணம் உண்டுவிஞ்ஞானத்தில் ஏதாவதொரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அதன் வார்த்தைகளில், நாம் எதையும் அறிந்து கொள்ள முடியாது என்ற தொனியில் பேசுவதும் அல்லது ஏற்கனவே நமது வேதங்களில் அல்லது மாபெரும் இலக்கியங்களில் சொல்லப் பட்டுவிட்டது  என்றும் பிதற்றித் திரியும் குணம் வேண்டும்விஞ்ஞானத்தில் அடிப்படையான, அடிப்படைத் தரவுகள் ஒரே மாதிரி இருக்கும் நிலையில், யார் செய்தாலும் பரிசோதனையில் முடிவுகள் ஒரே மாதிரி விடையைத் தரவேண்டும், என்ற கொள்கையின் முன் இந்தச் சாமியார்களுடையல் எல்லாச் சாதனைகளும் அடிபட்டு விடும்.

            அடுத்து ஏதாவதொரு அரசியல் வாதியின் வாலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்தன்னை ஒரு ஞானியின் சீடராகக் காட்டிக் கொள்வதன் லாபம் அரசியல் வாதிக்கும் தெரியும்அவர் மூலம் நிலம் கையகப் படுத்துவது சொத்துச் சேர்ப்பது இவற்றிற்கு பெரும் உதவிகள் கிடைக்கும்

            சில இலக்கியவாதிகளும், தங்களை இலக்கியத்தின் மூலம் ஞானியென்று நிறுவ, அல்லது பெற்ற புகழைத் தக்க வைத்துக் கொள்ள இவ்வாறான போலி ஞானிகளின் புகழோடு தங்களையும் இணைத்துக் கொள்ளலாம்அதில் அவர்களுக்குப் பயனுண்டு.   

            சில ஆண்டுகள் முன்னால், தமிழ்த் திரைப்பட விண்மீன் ஒருவர் இமயமலைக்குச் சென்று வந்து ஞானியானது போல் நடித்துக் காட்டியது நினைவில் இருக்கலாம். இந்த நாடகம் அவருக்கு எதற்குத் தேவைப்பட்டது? இன்றும் யாருக்கும் புரியவில்லை. அந்த ஞானத் தேட்டம் இப்போது என்னவாயிற்று? அப்புறம் வந்த படங்களின் லாபத்தில் எல்லாம் மறந்திருக்க வேண்டும்.

            அடிப்படையிலேயே ஒரு கேள்வி எனக்குள் எழுகிறது? எதற்கு நானும் நீங்களும் எல்லாம் அறிந்தவர் போல் காட்டிக்கொள்ள வேண்டும்.  தெரிந்ததைத் தெரிந்ததென்று சொல்லிவிட்டுத் தெரியாததைத் தெரியாது என்று சொன்னால் என்ன? யாருக்கு நாம் காட்ட வேண்டும் ஞானியென்று.  அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போனால் போதாதா? ஞானியாகவே இருந்தால் கூட, மற்றவர்கள் அதைத் தெரிந்து கொண்டு விடுவார்களே..

            அறிவை/உலகம் பற்றிய புரிதலை நாம் அதாவது மனிதர்கள் எவ்வாறு பெறுகிறார்கள் என்ற அடிப்படை அறிவு ( in short Cognition) இல்லாதவர்கள்தான் அறிவு வானத்திலிருந்தோ, மரத்திலிருந்து விழும் ஆப்பிள் பழத்திலிருந்தோ அல்லது கடவுள் நம்முன் தோன்றி நாக்கில் எழுதுவதாலோ கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அது சிந்திப்பதன் விளைவு, ஆராய்வதன் முடிவு, படிப்பதன் மூலம் அத்திறன் பெருகும். 


            இங்கே யாரோ சொல்வது மாதிரி ‘ஞானியாவது சுலபம்’.  நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையும் இருந்தால் போதுமானது.  இப்போது இது கூட நாகரீகமாகிவிட்டது.  சில சாமியார்கள் ஜீன்ஸ் சட்டையுடன் திரிகிறார்கள், சிலர் சிகரெட் குடிக்க, சமோசா சாப்பிபெரிய கோடீஸ்வரனாகிவிடலாம். இது தான் முக்கியம்.

Sunday, March 26, 2017

13th Book - Democrats and Dissenters by Ramachandra Guha

This is the latest book of R. Guha.  I have read many of his books and translated one of his books into Tamil.  I may have some soft corner for the author because I like his books. 

            This book is a colelction of essays on some of the political questions.  One of them is about the long life and lingering death of Indian National Congress.  In his assessment INC may disappear if it continues in the present form and with present leadership.  He cherishes the ideals which inspired the leaders of INC before and immediately after independence.   But as a reader I feel that whether INC lives or dies, there would always be some political formation that would carry on with the principles for which Congress fought because they were in the political arena not because Gandhi or Nehru Espoused them, but these are fundemental principles which will crop up in a nation like India with multiple identities.  Even BJP may appropriate some of the principles and policies of Congress in this regard other India as a nation may not survive with a single identity. 
           
            Other essays cover some fothe issues thata need attention in India.  In most of his essays R. Guha, engages with the existing political myths and gives a contrarian point of view with available evidence.  These are informative and as usual written in a simple style and for this alone the author has to be appreciated.  He also does not reduce everything into binaries like some of the political pundits.  His arguments are always nuanced.  Some of the topics included are about China, Pakistan, Democracy and Violence in India, Srilanka and beyond and Tribals affairs.

            Part II of the book discusses about some of the individuals who in his opinion have contributed to better understanding of the problems in the world. 
           
            The essay about Dharmanand Kosambi is the best ( and forme, the uninformed about his contributions, eyeopening).  The efforts made by Kosambi for studiying Buddhism and his contribution in this field have all been well brought out.  This really kindled my interest in his books.  I have decided that I shoiuild read at least some of his books about Buddhism.

            The essays on Andre Betelle, Dharma Kumar and UR Anantha Murthy make an excellent reading and informative. I particularly noted that Dharma Kumar had established the fact that the status of peasants was not better in the pre British era than it was during British Rule as some of the historians make us believe, particularly in her area of study i.e. South India.  She had contested the view of marxist indian historians who tried to put indian history in only the anti-colonial framework and ignored what went before. 
           
            As for A. Sen’s book ‘Argumentative Indian, which I have read, R. Guha points out that Sen’s premise that we could trace the elements of  multi religious cultural understanding in India’s past is not correct.  In my understanding a modoern concept like Secularism cannot be read into the administrative principles of Ashoka or Akbar or that the debates between various sects cannot be equated with any modern thought process.  Both the points of view are facinating.  A.Sen’s essay points out the continuity in thought and R. Guha’s mentions about the discontinuity.  Truth may be  somewhere  in between.
           

            Altogether, a book after reading which I felt better informed about the indian society and intellectuals.  

Thursday, March 09, 2017

பூக்களின் கதை

குழல்விளக்குகள் ஒளி பொழிய
குளிரறையில்
ஒப்பனை மிகுந்த
பீங்கான் குடுவையில்
பச்சை ஒளிரும் இலைகளினுடே
கொத்தாக 
மிளிர்கின்றன
சிவப்பு
ஊதா
மஞ்சள்
வெண்மை 
வண்ணப்பூக்கள்

அடுக்கிய மனிதனின் 
மனவண்ணங்கள்
அதன் விளிம்புகளில் 
ஒட்டியிருக்கின்றன
தெளிக்கப்பட்ட வாசனைகளுடன்

அவன்
அவைகளைக் கொய்த
செடிகளில் விட்டுவைத்த
வண்ணப் பூக்களை
இயல்பாக
தழுவிக் கொள்ளும்
இருளும் ஒளியும்
இதமும் குளிரும்
வீசும் தென்றலும்

வீழ்ந்தன என்ற போதும்...


Wednesday, March 08, 2017

புதிய பயணம்

அவன் வந்துவிட்டான்
பாதுகை ஒன்றை எடுத்துக் கொண்டு
யாருடையதென்று தெரியவில்லை

ராமனுடையது என்று
அவன் சொன்னாலும்
ராவணனுடையதாகவும் இருக்கலாம்
அவனுடையதாகவே இருக்கலாம்

பரதன் ராவணனோடு சேரலாம்
சீதை தீக்குளிக்க மறுக்கலாம்
நீங்காத பழியுடன்
ராமன் பதவி விலகலாம்
எப்படி எழுதலாம்
இந்தக்
கதையைக்/கவிதையைக்
என்பதைத் தீர்மானிக்கும்
பாதுகையைச்
சுமப்பது அவசியம்
யாருடையதானால் என்ன?

வால்மீகி வந்தால்
கதையை மாற்றிவிட
மாட்டானா?
ஜெயித்தவனுக்காக

Tuesday, March 07, 2017

கரைந்தது

விடிகாலையில்
தொந்தரவு செய்யும்
எழுத வேண்டிய
புத்தகத்தின் தலைப்பு

பல் துலக்கத் துவங்கியதும்
மறைந்துவிடும்
அவ்வப்போது மின்னலிடும்
கவிதை வரிகள்
வேலையிருளில் கரைந்துவிடும்

களைத்துத் தூங்க ஆரம்பிக்கும் போது
மெதுவாக வருடும்
வரிகளின் அழகில் மயங்கி
உறங்கும் இரவு

இன்னும் சில நாட்களில்
எவனோ ஒருவன்
எழுதியிருப்பான்
நான் தொலையவிட்ட
வரிகளை

வார்த்தைகள்
பறவைகள் போல
லௌகிகத்தின் கத்திக்குக்
கழுத்தைத் தராமல்
தப்பித்து
வானில் பறந்துவிடும்\

எங்காவது
பச்சை மரத்தின் கிளைகளில் தங்கும்

அவற்றில் குரலில்
ஏதாவதொரு கவிஞன்
தன் கனவைப் பதித்திருப்பான்


உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

மூன்று வேட்டை நாய்களுடன் 
வருவது கடவுள்தான்
 கதைகளில் கருணை வழியும்
முகத்துடன் 
நீதிமான்களுக்கு 
வெற்றிதரும் 
அதே கடவுள்

எல்லாவற்றையும் பார்க்க முடிந்தவர்

எதையும் பார்ப்பதில்லை

ஒரு நாய் கருப்பு அங்கியுடன்
பிறந்தது
உயர்ந்த மேஜைகளில் அமர்ந்து
கீழே இருக்கும்
நம்மை
முறைத்துக் கொண்டே இருக்கிறது

இன்னொன்று
மயிலிறகு போன்ற தோகையுடன்
வளர்ந்து 
சிரிக்க முடியும் என்றாலும்
சாமரம் வீசியே பழகியது

மூன்றாவது

வெள்ளுடை தரிப்பது
வேஷங்களை மாற்றிக் கொள்வது
கடவுளின் நாமத்தைப் பாடி 
ஏழைகளிடமும்
ஏழைகளின் நிலை பாடியே
கடவுளிடமும் 
வரம் கேட்பது

இவர்கள் பவனி வருகையில் 
தெருவும் ஊரும் 
அடங்கிப் போய்விடுகின்றன
தெருநாய்கள்
 அச்ச்சத்தில் ஒதுங்கி விடுகின்றன

கடவுள் வேட்டை நாய்களுக்கு வீசும்
மாமிசத் துண்டுகளீன் எச்சங்கள்
விழுந்தால் 
தெருநாய்கள் இருக்கலாம்

தெருநாய்களுக்கென்று

தனிக்கடவுள்

படைக்க முடியுமா
?

Wednesday, March 01, 2017

12 தெய்வம் என்பதோர்... தொ. பரமசிவம்

         தமிழ்நாட்டின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான தொ.பரமசிவம் அவர்களின் நூல் இதுநான் படிக்கும் அவருடைய மூன்றாவது நூல்நாட்டார் வழக்காறுகளை, எங்கோ படிந்து மறைந்து இருக்கும் வரலாற்றின் சுவடுகளைக் கண்டறிந்து நம்மைப் புளகாங்கிதப் படுத்துவதில் இவருக்கு இணையில்லைவார்த்தைகளில் எளிமை, கருத்துக்களைத் தெளிவாக எழுதும் விதம், ஆழ்ந்த பண்பாட்டு ஞானம் அனைத்தும் கொண்ட கட்டுரைகள்இவ்வளவு விரைவாகப் படித்துவிடுவேன் என்று நினைத்ததில்லை.  


ஆனால் ஒன்று தோன்றுகிறது.  தன் ஆய்வுப் புலத்தின் வெளிகளை குட்டிக் குட்டிக் கட்டுரைகளாக எழுதும் இவர் ஒரு பொருளை எடுத்து விரிவாக எழுத வேண்டும்.   அந்தக் காலத்தில் கல்கண்டு பத்திரிக்கை அல்லது இந்தக் காலத்தில் – ட்வீட்டர் பக்கங்களைப் படித்தது போல இருக்கிறது. ****