Thursday, July 13, 2017

புத்தக தினத்தை ஒட்டி

          மிருகங்களுக்கும் இடி, மழை காற்றுக்கும் பயந்து, இருட்டான குகையொன்றிற்குள் தங்க நேர்ந்த இரவில் தட்டுத் தடுமாறி நாம் கண்டுபிடிக்கும் ஓவியம்அதை ஓவியம் என்று சொல்ல்லாம். அல்லது உங்களது வாழ்க்கை என்றும் சொல்லலாம்அது உங்களுக்காகவே காத்திருப்பது போன்றே தோன்றினாலும், வேறு யாருக்காகவேனும் படைக்கப்பட்டிருக்கலாம்அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கானது.   மனித வாழ்க்கை என்பது என்ன என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.   ஏதோ மர்மங்களின் முடிச்சாக இருக்கும் கதை அல்ல என்றும் தெளிந்திருக்கிறேன்அது சொர்க்கத்துக்கான பாதையோ அல்லது நரகத்துக்கான முதற்படியோ அல்லநேசத்துடனும், மோசத்துடனும் சக மனிதர்களுடன் நாம் உறவாடும் ஒரு தீராத விளையாட்டுத்தான் வாழ்க்கைமற்ற அனைத்தையும் இரண்டாம் இடத்தில் வைக்க வேண்டும்.  

        இந்த விளையாட்டுக்கான ஒத்திகைதான் கலையும், இலக்கியமும்அறுபது ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து காணவேண்டியவற்றை இருநூறு முன்னூறு பக்கங்களில் ஒரு நாவலில் கண்டுவிடலாம்ஏனேனில் அறுபது ஆண்டு வாழ்க்கையில் சுவராஸ்யமான நிகழ்வுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்அப்படிப்பட்ட வாழ்க்கைகளின் சுருக்கமாக, இலக்கியமும், கலையும் திகழ்கின்றன. இந்த ஒத்திகைகளை எத்தனை விதமான எழுத்தாளர்கள் எத்தனைவிதமாகவோ எழுதிப் பார்த்திருக்கிறார்கள். ’கங்குகரை காணாத கடல்’  அதுநம்மை நாம் கண்டு கொள்ள உதவும் கண்ணாடிகள் அவற்றில் இருக்கின்றன

           இந்த இரண்டையும் இணைக்கிற போது தான் வாசகன் உருவாகிறான்படிக்கப்படிக்க வாழ்கை எந்த வரையறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாது என்பதை உணர்ந்து கொண்டவன்.   புதிய புதிய அனுபவங்களை உள்வாங்கி எழுதப்படும் வாழ்க்கைகளை அவன் வாசித்துக் கொண்டே இருக்கிறான்தான் வாசிப்பது புத்தகத்தை அல்ல, வாழ்க்கைகளை என்று அறிந்தே இருக்கிறான்.

            ஒவ்வொரு புத்தகமும் ஒரு கலைடாஸ்கோப் போல ஒவ்வொரு கோணத்தில் மாற்றிக் காட்டும் வண்ணஜாலங்கள்  நமது புரிதல் வட்டத்துக்குள் வந்து விடுவதில்லை. ஒவ்வொரு மனிதனில் வாழ்க்கையும் அது போன்ற கலைடாஸ்கோப்பின் வண்ணக் கோலங்களே.  பிரபஞ்சத்தை எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி இருபது போல வாழ்வை எங்கிருந்து பார்த்தாலும் ஓரே மாதிரி இருக்கிறது.  பார்வையின் கோணம் நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தது.  இது புத்தகங்கள் எனக்குக் கற்பித்தது. 

No comments:

Post a Comment