Friday, October 28, 2016

முன்னெச்சரிக்கை : 
திண்ணை என்ற இதழில் எழுதப்பட்ட கட்டுரையை அப்படியே கொடுத்திருக்கிறேன்அந்தக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டினால் கட்டுரையில் அர்த்த்த்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட்து என்று சொல்லக் கூடும்.  ஒருமுறை படித்தபின் எனது எதிர் வினையைப் படிப்பது நல்லது


"கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல் 

செந்தில்
இந்த கட்டுரையின் நோக்கம்தெய்வம் (அ) கடவுள் என்ற மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான –  கருத்தாக்கம் தேவையாபயன் உள்ளதாபயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டாஇல்லையாஎன்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்துமனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும் ஆன தொடர்பினை அறிவியல் பாதையில் விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மனிதனுக்கும்மற்ற உயிர்களுக்கும் மேலாக தெய்வம்/கடவுள் என்ற சக்தியோஇயக்கமோபொருளோ இருப்பதற்க்கான  விசாரணையை  தொடர சில  பிரமாணங்களையும் (Premises), கோட்பாட்டு தளங்களையும் (Principles) வரிசைபடுத்தும் முயற்சியாக இந்த கட்டுரை.
இந்திய இறையியல் வரலாற்றில் கபிலர் முதல், புத்தர்சார்வாகர்ஜைன சிந்தனையாளர்கள் தொடர்ந்து வள்ளுவர்ஆதிசங்கரர்இராமானுஜர்அருணகிரி நாதர் வரை இத்தகைய தத்துவ அறிவியல் ரீதியிலான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.  எனினும்மேற்சொன்ன ஞானிகளின் நூல்களில் சிலவற்றை தவிர, பெரும்பாலானவை மதம் சார்ந்துபக்தி சார்ந்து புனித்தன்மை ஏற்றபட்ட கடவுள்/தெய்வம்/ஆத்மா/பரப்பிரமம் போன்ற நிலைகளை தேடும் முயற்சியாக இருப்பதால், அவர்களின் நிலைகளில் இருந்து வேறுபட்டு, புனிதத்தன்மை ஏற்றபடாத ஒரு தொடக்கத்தை /இயற்க்கை சக்தியைவிசாரணைக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தும் பிரமாணங்களைகோட்பாடுகளை வரிசைபடுத்த முயல்கிறது இக்கட்டுரை. மதங்களை தாண்டி, இறைசக்திகளை பற்றி சிந்திப்பதற்க்கும், சமரச சன்மார்க்கம் போன்ற  மத நல்லிணக்கத்துக்காகவும் இத்தகைய முயற்சிகள் தேவை.  மேலும்ஒரு அறிவியல் இதழுக்கு எழுதப்படும் ஆராய்வு கட்டுரைகள் போல  மேற்கோள்கள்,  ஆதாரங்கள் காட்டி எழுதுவதற்க்கு பதிலாகஒரு சாதாரண மனிதனின் அனுபவத்தினைவாழ்வியல் சார்பாக எழும் கேள்விகளைஇயற்பியல், பரிணாமம்தத்துவ புரிதல்களின் அடிப்படையில் ஒரு முயற்சியாகவும் இக்கட்டுரையினை கருதலாம்.
1)  இருப்பு (existence) நிச்சயமான ஒன்று.
சிந்தனா சக்தியுடன்முழு பிரக்ஞ்ஞையுடன் செயல்படும் மனிதனுக்கும் (மற்ற உயிரினங்களுக்கும் இது பொருந்தும்)இயற்க்கைக்குமான தொடர்ந்து நிகழும்  உறவில்பரிமாற்றத்தில் உடல் சார்ந்த தேவைகள்வலிநோய்கள்முதுமைசுக-துக்கங்கள்  குறித்து எழும் கேள்விகள், தேடல்கள், மனிதன் கண்டு கொண்ட விடைகள்வரலாற்று ஞாபகங்கள்சுவடுகள் ஒன்றை நமக்கு உறுதி செய்கின்றன. மனிதன்ஜடப்பொருள்மற்றும்உயிர்களின் தொடர் பிறப்புஇறப்புவாழ்வு போன்றவை – (புவி சார்ந்த கால அளவீட்டு நிலையில்- on a relative time scale at least)  நமக்கு உறுதி செய்வது: இருப்பு உண்மையானதும்நிலைத்த  தன்மையுடையதும்.  (மாயாவாத தத்துவமும், சூன்யவாதமும் இவையனைத்தும் நிலையற்றது என பகரினும்;  நவீன விஞ்ஞானம் போல பொருள் யாவையும் உரிக்க உரிக்க வெங்காயம் (அ) ஒரு மாயை என பகரினும்).
2)   பரிணாம வளர்ச்சி (evolution) மனிதனின் முழுக்கட்டுப்பாட்டில் இல்லை.
இயற்க்கையோடு இயங்கும் அனிச்சை செயலினாலோஇயற்க்கை மாற்றங்களினாலோபரிணாம வளர்ச்சி இன்றும் ஒரு தானியங்கி. (auto-poesies).ஒரு செல் உயிரினம் முதல் சிந்தனையுடன் செயல்படும் நவீன மனிதன் வரை,பரிணாம வளர்ச்சி மனிதனின்  முழு கட்டுப்பாட்டில் இல்லை. மனிதன் இயற்க்கையோடு போராடியும்சோதனை செய்வதன் (planting, breeding, cloning)மூலமும் சில மாற்றங்களை பரிணாம  வளர்ச்சியிலும்  இயற்க்கையின் மேலும் தனது கட்டுபாட்டின் கீழ் நிகழ்த்தினாலும்பிரபஞ்ச இயக்கமோஅதீத இயற்க்கை சக்திகளோ (natural forces), அவை உயிர்களின் மீது ஏற்படுத்தும் நிகழ்வுகளோ மனிதனது கட்டுபாட்டில் இல்லை.
3)   பேரியற்க்கையும்பிரபஞ்சங்களும்கால மாற்றங்களும்மனித கட்டுப்பாட்டில் இல்லை.
பிரபஞ்ச விதிகள், இயக்கங்கள் மற்றும் கால, வெளியிடைலான உறவுகளை ஒன்று அல்லது பல ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சக்திகள் இயக்குகின்றன. உதாரணமாக, பிரபஞ்ச புவியீர்ப்பு விசை (universal Gravity – G), ஓளி வேகம் முதலியன. இச்சக்திகள் மனித கட்டுபாட்டில் இல்லை. பேரியற்க்கை சக்திகளின் ஒரு சில துளிகளை மனிதன் உபயோகிக்கும் வழி அறிந்தும், இந்த சக்திகள் மனிதன் கட்டுப்பாட்டில் இல்லை..
4)  பேரியற்க்கைக்கு பிரபஞ்ச ஞானம்-அறிவு (there is cosmic intelligence) உண்டு.
பேரியற்க்கையும்நுண்-அணு உலகமும் (microcosm and macrocosm) நிலையற்றது என அறிவியல் பகரினும்மனித புலன்கள் புவி சார்ந்த அளவைகளின் அடிப்படையில் நிலையுள்ளதாகவும், ஒழுங்கமைப்பாகவும், ஒத்திசைவு கொண்டும் உள்ளது (there is relative stability, order, synchronized spatial and time movement). கோள்களின் இயக்கமும்பிரபஞ்ச புவியீர்ப்பு சக்தியும்கால இயக்கமும்ஒளிஒலி அலைகளின் செயல்பாடும்இச்சக்திகளுக்கிடையான உறவுகளும் சீரான முறையில் நிலையுள்ள தன்மையுடன் செயல்படுவதோடுஅவற்றின் இயக்கங்களில்நிகழ்-மறுநிகழ்வுகளில் தொடர்ச்சியும் இருப்பதால்நாம் ஒரு முக்கியமான பிரமாணத்தை எடுத்தாக வேண்டும். பிரபஞ்சத்தில் (பேரியற்க்கையில்) ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பிரபஞ்ச ஞானம்-அறிவு (cosmic intelligence)இயற்க்கையாகவே உள்ளது.
இந்த பிரபஞ்ச-அறிவுபிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் புவி சார்ந்துள்ள  நம்மையும் உள்ளடக்கிதான் செயல்படுகிறது. ஒரு  ஜீவராசிக்கு அறிவும் ஞானமும் இருக்கிறது என்று நாம் சொன்னால்அதன் பொருள் என்ன. 1) அந்த உயிர் அனுபவத்தில்  கற்று தேர்கிறது (there is learning). 2) அதற்க்கு ஒரு ஞாபக திறன் உள்ளது (there is memory). 3)அந்த உயிரின் வளர்ச்சியில்இயக்கத்தில் அனுபவத்தின் /ஞாபகத்தின் விளைவாக தொடர் நிகழ்வு அல்லது மாற்றம் நிகழ்கிறது (repetition of patterns, change in behavior/movements due to learning).  உதாரணமாகநமது ஞாயிற்றையும்கோள்களையும் (Sun & planets) எடுத்து கொள்வோம். மேற்சொன்ன அனைத்தும்இவைகளின் இயக்கத்தில் காணமுடிகிறது. நட்சத்திரங்களின் பிறப்பும்இறப்பும் கூடஅறிவியலின் கணிப்பின் படிஒரு வித அமைப்பியல் அறிவுடன் (systemic knowledge) இயங்குவதாக உள்ளது.  புவியில் உள்ள ஜீவராசிகளை உயிர் வேதியல்(bio-chemistry), கரிம வேதியல் (organic-chemistry) என பிரித்து ஆய்வு செய்வது போலபிரபஞ்ச வெளியின் இயக்கத்தையும் அறிவு உள்ள பொருள் (அ) வெளி (அ) காலம் என்ற முறையில்தான் மனிதன் சிந்திக்க வேண்டும்.
மேற்கண்டவிதமாக வரிசைபடுத்தபட்டுள்ள பிரமாணங்களின் அடிப்படையில்,கடவுள் குறித்த அறிவியல் (Science of God) குறித்த சொல்லாடலை தொடர்கிறேன்.  மனிதனுக்கும் இயற்க்கைக்குமான (பேரியற்க்கைக்குமான) தொடர்பு பல பரிமாணங்களில் நிகழ்வதை நாம் அறிவோம். (அ)அனிச்சையான இயக்கம் உள்ள உறவு (instinctual relations) தேவைகளின் நிமித்தம் ஒளிகாற்றுஈர்ப்பு சக்தி போன்றவற்றுடன் நிகழும் உறவு; (ஆ) மனித முயற்சிமனித சிந்தனையின் அடிப்படையிலான சோதனைகள்நாம் இயற்க்கை சக்திகளை மாற்றியமைத்து உபயோகத்திற்குள்ளாக்குதல். (இ) பரிணாம வளர்சிதை மாற்றங்கள்  (evolution due to natural selection).
மேற்சொன்ன உறவுகளை தவிரமனித சிந்தனைக்கும்இயற்க்கை சக்திகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் என்னஇயற்க்கை நம் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்றுமனிதனின் சிந்தனையோமூளையோநரம்பியல் மண்டலமோ சிறிதளவாயினும் இயற்க்கையின் மீது  வினையோ, தொடர்வினையோ  ஆற்ற இயலாதா என்னபொருள்முதல்வாத கோட்பாட்டினை அடிபடையாக கொண்ட அறிவியல் தத்துவங்களே பிரபஞ்சத்தையும் அதன் சக்திகளையும்அலை வடிவங்களாக  ( as electromagnetic / radiation/ subatomic wave form or function) காணும் பொழுது, உயிரினங்களின் மூளையும்அவற்றின் உடல் வேதியல் இயக்கங்களும் ஒரு வித அலை வடிவங்களாக இயற்க்கையுடன் உறவு கொள்ள முடியாதா என்னஅலை வடிவ பிரபஞ்ச சக்திகளை நாம் கடவுள் என ஏற்று கொள்ள தேவையில்லை; எனினும்,  இந்த உறவு சாத்தியமானதுதான்.
உயிர் வாழ்க்கையின்  நோக்கம் தான் என்ன?  ஒரு செல் உயிரினத்தின் நோற்றம் ஒரு விபத்து எனவும்தற்செயல் நிகழ்வு எனவும் பொருள்முதல்வாத அறிவியல் கோட்பாடுகள்  மற்றும் பொருளாதார கோட்பாடுகள் உரைப்பினும்சிந்தித்து செயல் ஆற்றும் அறிவியல் பூர்வமான மனிதனின் வளர்ச்சி உயிர் பிழைத்தலுக்காகவும்தேவைகள்  நிமித்தம் குறித்தும் நிகழ்ந்த ஒன்று என அவை உறுதியுடன் பகரினும்சிந்திக்கும் மனிதன் முன்ஏன் எல்லா உயிரினங்களின் இருத்தலிலும் தொக்கி நிற்க்கும் கேள்விகள்ஏன் இந்த வாழ்க்கை? இதன் பொருள் என்னபலன் என்ன?  இதைப்பற்றி சிந்திக்கும் ஆற்றலை கொடுத்த பரிணாம வளர்ச்சி இதற்க்கான பதில் தர இயலாதது ஏன்?  மனிதன் தன் வாழ்வின் முடிவினை, அதன் பின் தொடரும் பயணத்தை தானே நிர்ணயித்துக் கொள்ள முடியுமா?  (Can humans have control over their destiny?)
மரணம் ஏன்மறுபிறப்புநரகம்சொர்க்கம் என்ற தேடல்கள்களை கொண்ட விவாதங்களை இந்த சொல்லாடலில் தவிர்ப்போமாக. வாழ்விற்க்கே பொருள் இன்னும் விளங்காத நிலையில்இல்லாமல் போனபிறகு உள்ள நிலைகள் குறித்த விவாதம் அறிவியல் நோக்கில் முக்கியமின்று. மத நோக்கில் பிறப்புக்கும்இறப்புக்கும்நரகம்சொர்க்கம்மறுபிறப்புக்கும் உள்ள புராண புரிதல்கள் நம் எல்லோர்க்கும் தெரிந்ததே. பிறப்பை தவிர்க்க பரமாத்மாவுடன் (பேரியற்க்கையுடன்)   சேரும் சைவ சித்தாந்த உயர் நோக்கும்தியானத்தில்பக்தி சரணாகதியில் அல்லல்கள் தவிர்ந்துஆத்மாபரமாத்மாபுனித அல்லது  நிர்வாணா  போன்ற நிலைகளை  அடையும்  வழிகளும் நன்கு தெரிந்ததே. ஆனால்அறிவியல் நோக்கில்உயிர் வாழ்க்கை ஏன்?  சிந்திக்கும் மனிதனும்மற்ற உயிரினங்களும் தோன்றாமல் போயிருந்தால்கூடஇப்பேரியற்க்கையும்பிரபஞ்சமும் எதற்க்காக?
பிரபஞ்சம் குறித்து  அறிந்துசோதனை செய்துவெற்றி காண மனிதன் முயற்சி செய்தாலும்  கூட ஏன் இந்த வாழ்க்கைஉயிர் வாழ்க்கைக்கு உயிர் பிழைத்தல் தவிர எந்த ஒரு  நோக்கமும்,  பயனும்  இல்லை என்ற பதில்தான் எனில்ஐநூறு கோடி ஆண்டுகளாக   (500 million years) தோன்றி,  மரித்த, மறைந்தஅல்லது பரிமாண வளர்ச்சி அடைந்து சிந்தனை ஆற்றல் பெறும் வரை வளர்ந்துள்ள  ஜீவராசிகளின் வாழ்க்கையின் பொருள்தான்  என்ன?  இந்த நோக்கில்,15 பில்லியன் ஆண்டுகள் வயதான பிரபஞ்சத்தில்,  4 பில்லியன் ஆண்டுகள் வயதான புவியில், 500 மில்லியன் ஆண்டுகளாக நடந்தேரும் உயிர்களின் தோற்றம்/மாற்றம் வளர்ச்சி விபத்துதற்செயல் நிகழ்வு, வெறும்தேவையின் பார்பட்டது… என்ற வாதம் வெற்றுவாதமாகவே உள்ளது. மனிதனுக்கு பலன் உண்டோஇல்லையோஇயற்க்கைக்கு ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும்இருக்க வேண்டும் எனதான் தோன்றுகிறது.
இந்த அடிப்படையில் கடவுள் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஒரு அமைப்பு நிலை (ஒரு ஒழுங்கு நிலை, (relative stability, order) என்ற பிரமாணத்தின் தளத்தில் விவாதிக்க எண்ணுகிறேன். இந்த தளத்தில்உயிர்கள் (நாம்) இயற்க்கைக்கு உட்பட்டு இயங்கி இயற்க்கையின் நோக்கத்தை அறிந்து அதனுடன் சேர்ந்து செயல் ஆற்ற முயல்வதை கடவுள்-மனிதனுக்குமான உறவு என நினைக்கிறேன். இதிலும் சிக்கல் இருக்கிறது. மனிதனும் மற்ற உயிரினங்களும் இயற்க்கையின் அடிமைகளாக கைப்பாவைகளாக இருப்பின் என்ன செய்ய இயலும்மனிதன் இயற்க்கையின் காலடியில் அன்பு, பக்திபயம் கொண்டு/கண்டு வீழ்ந்த போதிலும் அவன் முன்னால் தொக்கி நிற்க்கும் கேள்வி இயற்கையின் பிடியில் இருந்து விடுதலை அடைவது எப்படி?
நான் சொல்ல விழைவதுநமது மூளைநரம்பு மண்டலம்மற்றூம் உடல் பாகங்கள் இயற்க்கையுடன்பேரியற்க்கையுடன் – அலை வடிவங்கள் மூலமாக ஒருவித வினைதொடர்வினை ஆற்ற வல்லது என நினைக்கிறேன். பக்திதியானம்,அறிவியல் சோதனைகள் மூலம்நாம் இயற்க்கையின் அமானுஷ்ய சக்திகளை உணர்வதோடுஓரு சிறிதளவேனும் அதனுடன் உறவாட முடியும்மாற்றங்களை நிகழ்த்த முடியும் என தோன்றுகிறது. உயிர்கள் மரணத்தின் பின்புஅல்லது பிறப்பிற்க்கு முன்பு ஒருவித அலை வடிவமாக (information quanta  or frequencies) பிரபஞ்ச சக்திகளுடன் சேர்ந்து/ஒத்திசைவுடன் இயங்ககூடிய வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில்உயிர்களின் நினை, நனவுஆத்மா, பரமாத்மா போன்றவற்றை அறிவியல் சார்ந்து கதிரியக்கமின் காந்த அலைகளாக, பேறியற்க்கைகளின் மைய ஆதார புள்ளிகளுடன் உறவு கொள்ளும் சக்திகளாக (வடிவங்களாக) ஒப்பிட முடியும்.
பேரியற்க்கை அதீத அளவுடையதால் (infinite), அது பல நடு சக்தி மையங்கள் (multiple centralities) கொண்டிருக்க வேண்டும் (like centers of gravity). உதாரணமாக, ஒரு மலையின்  புவி ஈர்ப்பு சக்தி (gravity) இருந்து மனித நினவுகளுடன்உணர்வுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் சாத்தியமான ஒன்று. இந்த சக்தி மையங்கள் உயிர், உயிரற்ற பொருள்களுடன் ஒத்திசைந்திடலாம் என நினைக்கிறேன்.  பேரண்டங்களும்பேரியற்க்கை சக்திகளும் சூன்யத்திலிருந்தோ,  ஒற்றை பருப்பொருளிலோ (like big bang theory) தோன்றி பல வித மையங்களை / சக்தி நிலைகளை அலை வடிவங்களையும் கொண்டிருக்கலாம். தோற்ற காரணம் எது, முடிவுநிலை எது இதுவரை நாம் அறிய இயலாவிடினும் பிரபஞ்ச இயக்கம் ஒரு வித அமைப்பு நிலை (it is a system with multi-level centers and cosmic intelligence).
நாமரூபங்களை கடந்து ஒன்று அல்லது பல வித மைய நிலைகள்/தளங்கள் (energy centers, centralities) பிரபஞ்சத்திற்க்கும் அதனுள் இயங்கும் பேரியக்க சக்திகளுக்கும்  இருந்தே ஆக வேண்டும். உதாரணமாக, Higgs field. தமிழில் இதை பரசிவ வெள்ளம் என பாரதியார் கவித்துமாக சொல்வது போல. இவற்றை ஆத்மாபரமாத்மாபிரம்மம்சிவன்திருமால்முருகன்காளிபுனித ஆவி என எப்படி அழைத்தாலும் சரி.  உதாரணமாகபரமாத்மா என்பதை ஒருவித கூட்டு-பிரபஞ்ச-ஞானம் (collective-cosmic-intelligence) எனலாம். மனிதன் தியானத்தின் மூலமும் விஞ்ஞான கருவிகளோடும் இந்த மைய சக்திகளுடன் உறவு கொண்டு வாழ்கையின் பொருளை தேர்ந்து  பிறப்புஇறப்பு ஆகிய இயக்கத்தை மனித சிந்தனையின்பிரஞ்ஞையின் கட்டுக்குள் கொண்டு வர முயல்வதே உயர் மெய்ஞானம் ஆகும். இதில்மதம் சார்ந்த கோவில் அமைப்புகள்வழிபாட்டு முறைகள்மொழி, இசை சார்ந்த கருவிகளுக்கு பங்கு உள்ளதா என்பதை சோதனைக்கு உள்ளாகினால்தான் வாழ்வின் பொருள் நமக்கு வசப்படும்."





 மேற்கோள் 1
       ’புனிதத்தன்மை ஏற்றபடாத ஒரு தொடக்கத்தை /இயற்க்கை சக்தியைவிசாரணைக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தும் பிரமாணங்களைகோட்பாடுகளை வரிசைபடுத்த முயல்கிறது இக்கட்டுரை.’ மேலும்ஒரு அறிவியல் இதழுக்கு எழுதப்படும் ஆராய்வு கட்டுரைகள் போல  மேற்கோள்கள்,  ஆதாரங்கள் காட்டி எழுதுவதற்க்கு பதிலாகஒரு சாதாரண மனிதனின் அனுபவத்தினைவாழ்வியல் சார்பாக எழும் கேள்விகளைஇயற்பியல், பரிணாமம்தத்துவ புரிதல்களின் அடிப்படையில் ஒரு முயற்சியாகவும் இக்கட்டுரையினை கருதலாம்.

            புனிதத் தன்மையை ஏற்றாத வகையில் தொடக்கத்தை விசாரணைக்கு உட்படுத்த முயலும் கட்டுரை இதுஇரண்டாவதாக ஒரு சாதாரண மனிதனின் அனுபவத்தில் எழும் கேள்விகளை, இயற்பியல் பரிணாமம், த்த்துவப் புரிதல்களின் அடிப்படையில் ஒரு முயற்சியாகவும் இக்கட்டுரையினைக் கருதலாம்எழுத ஆரம்பிப்பவன் யார் என்பதிலேயே குழப்பம் இருக்கிறதுசாதாரண மனிதன் என்பவன் யார்? அவன் இயற்பியல், பரிணாமம், தத்துவப் புரிதல்கள் அடிப்படையில் எழுத முயற்சிப்பவனா?

            கேள்விகளை யாரும் எழுப்பலாம்இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் எழுதவேண்டும் என்பதில்லை. ஆனால் பதிலை அடைய முயலும் வழி என்ன என்பது தான் முக்கியம். நானும் எந்த இஸத்திலும் சிக்கிக் கொள்ளாமல் உரையாடலில் ஈடுபடலாம் என்றே நினைக்கிறேன்.   ஆனால் உரையாடல் மனிதகள் இதுவரை அறிந்து கொண்டிருக்கிற உண்மைகளின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் செந்தில் அவர்களின் கட்டுரையை அணுகுகிறேன்.
            இருப்பு என்ற ஒன்று இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்.  ‘அதுஇல்லையென்றால் நாம் இப்படை முழு உணர்வோடு உரையாடிக் கொண்டிருக்க முடியாது

பரிணாம வளர்ச்சி (evolution) மனிதனின் முழுக்கட்டுப்பாட்டில் இல்லை.  மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், மனிதன் மீண்டும் மீண்டும் இயற்கையைச் சீண்டும் போது பரிணாம வளர்ச்சியை பாதிக்க முடியும்.   போகிற போக்கைப் பார்த்தால், பூமியைக் குப்பை மேடாக்கும் தனது முயற்சியில் வெற்றி பெற்றால் பரிணாம வளர்ச்சியைக் கூட பாதிக்க முடியும். இப்போதே அறிந்தும் அறியாமலும், பல்வேறு சிகிச்சை முறைகளில், வேதிப் பொருட்களையும், கதிரியக்கத்தையும் பயன்படுத்தி மனிதன் பரிணாம வளர்ச்சியின் தன்மையப் பாதிக்கும் பல செயல்களச் செய்து கொண்டிருக்கிறான்.

அது தவிர, குறிப்பிட்ட வகைப் புல்லைத் தேர்ந்தெடுத்து, அதில் இருக்கும் அரிசி என்ற ஸ்டார்ச் அதிகரித்த வகைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் விளைவைப் பெருக்கி ஏற்கனவே பரிணாமத்தின் அடிப்படையை தானியங்கள், காய்கறிகள் என்று தனக்குத் தேவையான வகையில் கட்டுப்படுத்த்த் தெரிந்து கொண்டுவிட்டான்மனிதன் இயற்கையின் மீது செலுத்திய ஆதிக்கமே வளர்ச்சி என்றும் விஞ்ஞானம் என்றும் அறியப்படுகின்றது

அடுத்து

பேரியற்கையும்பிரபஞ்சங்களும்கால மாற்றங்களும்மனிதக் கட்டுப்பாட்டில் இல்லை.  முழுமனதோடு ஏற்றுக் கொள்ளலாம்.   ஆனால் அவை யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருந்துதான் ஆக வேண்டுமாஅதற்கு அவசியம் என்ன? அவை யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதற்கான எந்தச் சான்றும் மனிதர்களுக்குக் கிடைக்கவில்லை.  ‘இதுவரைஎன்ற வார்த்தைகளை உங்களுக்கு விருப்பமெனில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிந்தைய நூற்றாண்டுகளில் போப்பாண்டவராலும், இன்னும் பல மதத் தலைவர்களாலும் முன்னிருத்தப்பட்ட புனிதத் தத்துவங்களின்படி, பூமிதான் பிரபஞ்சத்தின் மையம், மனிதன் தான் ஆண்டவனில் படைப்புக்களில் சிறந்தவன், மனிதனுக்காகத்தான் ஆண்டவன் பூமியில் அனைத்தையும் படைத்தான்.  இவையெல்லாம் உண்மையல்ல என்று நிறுவப்பட்ட பின்னர் – அதாவது பிரபஞ்சம் யாருடைய கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இயங்குகிறது.  அதன் விதிகளும், அதன் உருவாக்கத்திலிருந்தே செயல்படும் காரணிகள் என்பதை அறிந்தபின், யாருடைய கட்டுப்பாட்டிலாவது பிரபஞ்சம் இயங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது புராதன மனிதனில் ஒரு விருப்பமான கனவாக இருக்கலாம்.  இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ஆய்வுகளுக்கு – அது எவ்வளவு மேலோட்டமானதாக இருந்தாலும் – ஒவ்வாதது.

            அடுத்ததாக அவர் எழுதுவது எல்லாவற்றையும் விட, அடிப்படை எதுவுமே இல்லாது கூற்று.  ‘பேரியற்கைக்கு பிரபஞ்ச ஞானம் அறிவு உண்டு’.   இது இப்படி இருக்கிறது, (உதாரணம்) ’கடலில் வாழும் மீன் நினைக்கிறது ‘கடலுக்குத் தன்னைப் பற்றிய அறிவு உண்டு’ நினைப்பதனாலேயே அது நடந்து விடுமா? கடலின் தன்மை கடலுக்கு இல்லையென்றால் (அந்தக் குறிப்பிட்ட) மீன் உருவாகியிருக்க வாய்ப்பே கிடையாது. அதைச் சாத்தியப்படுத்திய கடலுக்குரிய குணங்கள்/விதிகள் கடல் இருக்கவேண்டியிருக்கிறது. தத்துவத் தேடல்கள் கற்பனைகளின் வழியில் அல்ல உண்மைகளின் வழியில் நிகழ்கின்றன.  நிகழ வேண்டும்.  

இயற்பியல் உலகில், எதுவும் நடப்பதற்கான விதியைத்தான் காணமுடியுமே தவிர, ஏன் இப்படி நடந்த்து என்பதற்கு விடை கிடைக்காது.  ஏன் என்ற கேள்வியே தவறானது.  சிந்தனைக்கு எந்த நிறம் என்று கேட்பதைப் போன்றது இது. 

            பிரபஞ்ச அறிவு ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?  அப்படி ஒன்று இருப்பதற்கான எந்தச் சான்றும் இல்லாத வேளையில், தன்னைப் போலவேதான், தன்னுடைய மாதிரிதான் பிரபஞ்சம் இருக்க வேண்டும் என்ற மனிதக் கனவின் வெளிப்பாடுதான் இது.  அறிவு, நோக்கம் இவற்றையெல்லாம் பிரபஞ்சத்துக்கும் இருப்பதாக நினைப்பதும் இதனால்தான்.

            பரசிவ வெள்ளம் பரமாத்மா என்றெல்லாம் கற்பனை செய்வது தன் முன்னிருக்கும் புரிதலை, வார்த்தைகளை, நாம் அறிந்திராத இயற்கைப் பொருட்களின் மேல் திணிப்பதாகும்.  இது பழைய டெலிபோன் மாடலை வைத்துக் கொண்டு செல் போனைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அது தொலை பேசி, இது அலைபேசி. தொடர்பே இல்லாதது. புதிய விஞ்ஞான உண்மைகளை நாம் புரிந்து கொள்ளும் போது அதற்குரிய வார்த்தைகளும் படைக்கப்படும்.  பழைய வார்த்தைகளை கட்டாயமாகப் பயன்படுத்தி விட்டால் புதிய உண்மைகளை அவற்றில் சிக்கிவிடும் என்பது கற்கால மனிதன் தீயைக் கும்பிட்ட மாதிரிதான்.

No comments:

Post a Comment