Thursday, October 31, 2013
தொலைக்காட்சி
தற்போதெல்லாம், பிரதமராகத் தகுதி உடையவர், நரென்ந்திர மோதியா
அல்லது ராகுல் காந்தியா என்ற பிரச்சனை ஊடகங்களில், முக்கியமாக ஆங்கில ஊடகங்களில்,
அதிலும் குறிப்பாகதொலைக்காட்சி ஊடகங்களில் தலையாய செய்தியாக, விவாதமாக
ஆகிவிட்ட்து.
இந்த
ஆங்கில ஊடகங்களைப் பார்ப்பவர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய உயர்ந்த
வகுப்பைச் சேர்ந்தவர்கள். நகரங்களில்
வாழ்பவர்கள், எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும், அந்த மக்களுடைய பண்பாட்டின்
கூறுகளில் இருந்து விலகி, உயர்ந்து நிற்பவர்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு வெகு வேகமாக வளர்ந்து வந்த இந்த வகுப்பினருக்கு
இந்தியா என்ற கருது கோள் மிகவும் விருப்பமானத்7.
இந்தக் கருது கோள் மூலம் அவர்கள் அடைந்த பலன்கள் மிகப்பல> படித்துவிட்டாலும் தங்களுடைய மாநிலத்தில்
குறைந்த வருமானத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
தமிழ்நாட்டில்பிறந்தாலும்,
இந்தியா என்ற பரந்த நாட்டில் எந்த நகரத்தில் இருந்தாலும் பொருளீட்ட வழி
இருக்கிறது. எந்த மண்ணோடும் (மாநிலத்தின்
நிகழ்காலத்தோடும்) நேரடியான அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தொடர்புகளால் நேரடியான
பாதிப்புக் கிடையாது. இவர்கள் இந்தியா
என்ற கனவுத் தோணியில் மிதப்பவர்கள்.
இந்த
வகுப்பினருக்கு தங்கள் பிரச்சனைகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனைகள். உதாரணமாக, விமான நிலையங்களில் கண்ணாடி
சரியில்லை, அமெரிக்காவில் இருப்பது போன்ற சாலைகள் இல்லை, ரயில் பெட்டிகள் அழகாக
இல்லை, பஸ்கள் சொகுசாக இல்லை. பேரங்காடிகள்(மால்கள்) நிறைய இல்லை.
ஒரு
நகரத்தின் முனிசிபல் அரசியல், அல்லது மாநிலத்தின் முதல்வராக யாரிருப்பார் என்பது
பற்றி இவர்களுக்கும் இந்த ஊடங்கங்களுக்கும் எப்போதாவது தான் கவலை ஏற்படும். இந்த வகுப்பினரும், மற்றப் பெருநகரங்களில்
வாழும் இவர்களது தோழர்களூம் நோக்கும் பொதுப் பிரச்சனை, அதிலும் எந்த அரசியல்
நடவடிக்கையிலும் இறங்காமல் வாய்வீச்சிலேயே காலந்தள்ளும் பிரச்சனைகள் சில. மோடியா அல்லது ராகுலா, காங்கிரஸா பி.ஜே.பியா,
நீயா நானா, அமெரிக்காவா ரஷ்யாவா? தினமும் நிறைவேறும் நாடகத்தைத் தவிர வேறு
பிரச்சனைகள் கிடையாது. இதுவே தமிழ் ஊடகங்களில் கருணாநிதியா, ஜயாவா, ஸ்டாலினா
அழகிரியா என்று இடம்பிடிக்கும். அரசியல்
என்பதை இப்படிச் சில தனி நபர்களின் பிரச்சனைகளாகச் சுருக்குவதில் ஊடகங்களுக்குப்
பெரும் வசதி உண்டு. இப்படி எல்லா விஷயங்களையும் எளிய கதாநாயகன் வில்லன், இன்னும்
சொல்லப் போனால், (இராமாயாணமாக, அதாவது,) இராமன், இராவணன் என்ற இரட்டை நிலையில்
பார்ப்பது வசதியாக இருக்கும். இப்படித்
தெருச்சண்டையைப் போல் மாற்றினால் தான் காட்சிப் பொருளாக( Spectacle) மாற்ற முடிகிறது.
சிக்கல்களை விவாதிக்க ஆரம்பித்தால், நேயர்கள் புரிந்து கொள்ளத்
தடுமாறுவார்கள். அவர்கள் புரிந்து கொள்ளும் வித்த்தில், அதாவது தெருச்சண்டை
வடிவத்தில் கொடுப்பதே ஊடகங்களூக்கு நல்லது. பார்ப்பவர்கள் எண்ணிக்கை பெருகும்
வருமானம் பெருகும். இந்தப் பின்னணியில்
தான் அரசியல் செய்திகள், விவாதங்கள் அளிக்கப் படுகின்றன.
தெருச்சண்டை
ஊடகங்கள் என்று இவற்றைச் சொல்லாமா?
Subscribe to:
Posts (Atom)