நேற்று ஒரு பிரஞ்ச் திரைப்படம்
பார்த்தேன். ‘8 Women’ (எட்டுப் பெண்கள்). எட்டுப் பெண்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.
அது அவர்களுடைய பூர்வீக வீடு. ஒவ்வொருவராக படத்தில் தோன்றும் போது ஒருவிதமாக/குணமாக
காட்சி அளிக்கிறார்கள். திடீரென்று ஒரு ஆண், அவர்கள் அனைவருக்கும் சொந்தக்காரன் கொலை
செய்யப்பட்டுக் கிடக்க்கிறான். அவனைப் பற்றிய பேச்சும், அவனை யார் கொலை செய்திருக்கக்
கூடும் என்ற பதட்டமும், ஒவ்வொருவருக்கும் மற்றவர்களைப் பற்றிய சந்தேகங்களும், ஊகங்களும்,
விமரிசனங்களும், பேச்சும், பொய்யான முகமூடிகளும் வெளிவருகின்றன. அதிர்ச்சியையும், நகைச்சுவையையும் ஏளனத்தையும் மிகச்சிறப்பாகக்
கலந்து, எந்த உணர்ச்சியும் மிகைப்படாமல், அதே நேரத்தில் இந்த உணர்வுகள் தொடர்ந்து வெளிப்பட்டுக்
கொண்டே இருக்கும் வகையில் இருக்கிறது. எட்டுப் பெண்களில் ஒவ்வொருவரும் தவறுகள் செய்திருக்கிறார்கள்,
ஒவ்வொருவராலும் கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன. அனைத்தும் வெளிப்பட்டபின்
அவர் மகள் உண்மையை வெளிப்படுத்துகிறாள். அவர் கொல்லப்படவில்லை. அவள் சென்று பார்க்கும்
பொது உண்மையை உணர்ந்த ஆண், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளுகிறான்.
மிகச்சிறப்பான ஒரு திரைப்படம் பார்த்த மனநிறைவு
ஏற்பட்டது.