வழக்கம் போல தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கார்டூன் படம் வந்திருக்கிறது.
முருகதாஸ் என்ற இயக்குனரின் ஏழாம் அறிவு திரைப்படமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.தமிழின் பெருமையைத் தவறான உச்சரிப்பில் பேசித் திளைக்கும் சுருதி ஹாசன் நடிப்பு பரவாயில்லை. போதிதர்மனுக்கும், தமிழுக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? முருகதாஸ் ஒரு அறிக்கை விட்டாரென்றால் அறிந்து கொள்ளலாம். படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. இந்தப்படம் எடுக்க அவர் போதிதர்மன் பற்றிப் படித்தாராம். உதயநிதி, ரெட் ஜெயந்த் என்ற பெயர்களைப் பார்த்த பிறகு விமரிசனம் செய்யத் தோன்றுவது தவறுதான். சூர்யா பாவம் பால்வடியும் முகம். அவருக்கு சண்டை போடும் வேடம். பல கார்கள் உடைகின்றன, ஏமாந்த தமிழனை இன்னும் ஏமாற்ற
பிரபாகரன், ஈழம், வீரம், வரலாறு என்று சில வார்த்தைகள் வருகின்றன.
ஒரே ஒரு விஷயம் புதியது. பெண்ணை காதலிப்பது தவிர வேறெதற்கும் பயன்படுத்தாத வாடிக்கையை மாற்றுவார்கள் என்று நினைப்பதற்குள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. ஓயாத சத்தம். தமிழென்றே புரியாத பாட்டும் இசையும். ரொம்ப உன்னதமான படம். தமிழின் சினிமா வரலாற்றில்.... இதற்கு மேல் எழுத முடியவில்லை. உணர்ச்சி மேலோங்குகிறது.